Home சூடான செய்திகள் பெண்கள் அந்தரங்க உறவில்வரும் சந்தேகம் என்ன என்ன தெரியுமா?

பெண்கள் அந்தரங்க உறவில்வரும் சந்தேகம் என்ன என்ன தெரியுமா?

169

சூடான கேள்விகள்:எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் எழாமல் இருக்காது. தாம்பத்யமும் அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில் தாம்பத்யம், செக்ஸ் உறவுகள் குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கும், உரியவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதற்கும் பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லையாம். தாம்பத்யம், செக்ஸ் உறவு தொடர்பான சந்தேகங்கள் என்னென்ன எழுகின்றன என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளனர்- வழக்கம் போல வெளிநாட்டில்தான். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தனவாம்.

இதுதொடர்பான சர்வேயை பெண்களிடம் மட்டும் நடத்தியுள்ளனர். உங்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் சந்தேகங்கள் என்ன என்று பட்டியலிடச் சொன்னபோது அவர்கள் சொன்னது இதுதானாம்…

என் கணவர் உறவின்போது ரொம்ப வெட்கப்படுகிறார். அவரை அதிலிருந்து விடுவித்து, ஆவேசமான ஆசாமியாக மாற்ற என்ன செய்வது என்று பல பெண்கள் கேட்டார்களாம்.

சில பெண்களுக்கு விந்தனு குறித்த அலர்ஜி இருப்பது தெரிய வந்ததாம். அதாவது விந்தனு உள்ளே செல்லும்போது எனக்கு ஏதாவது ஆகி விடுமா. ஒரு வேளை கருத்தரிக்காமல் போனால், உள்ளே போன விந்தனுவால் எனது உடல் நலனுக்கு பாதிப்பு வருமா என்று அவர்கள் கேட்டார்களாம். விந்தனு உள்ளே போய் என்ன செய்கிறது, என்ன நடக்கிறது என்ற அடிப்படை விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை என்பதை இந்த சந்தேகம் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சிலருக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்சம் அடைவதில் சிரமம் ஏற்படுவது குறித்த சரியான புரிந்துணர்வு இல்லையாம். இது மன ரீதியான பிரச்சினையா அல்லது எனது உடல் ரீதியான பிரச்சினையா என்று அவர்கள் கேட்டார்களாம்.

சில பெண்கள், நான் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்களாம்.

சிலருக்கு ஓரல் செக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனது கணவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று கேட்டார்களாம்.

சிலருக்கு வைப்ரேட்டர் குறித்து சந்தேகம் இருந்ததாம். அதாவது வைப்ரேட்டர்களை நான் விரும்பவில்லை. ஆனால் அதே எபக்ட்டுடன் கூடிய வேறு ஏதாவது செக்ஸ் பொம்மைகள் இருக்கிறதா என்று கேட்டார்களாம்.

என் கணவருக்கு உடல் பருமன் கூடி விட்டது. அவரால் முன்பு போல உணர்ச்சிகரமாக ஈடுபட முடிவதில்லை. பூனை போல ஆகி விட்ட அவரை மீண்டும் புலிப் பாண்டியாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று சில பெண்கள் கவலையுடன் கேட்டார்களாம்.

எனது கணவரின் ஆண் குறி சற்றே வளைந்து காணப்படுகிறது. இதனால் அவரால் செக்ஸ் உறவில் சுமூகமாக ஈடுபட முடியவில்லை. அதை சரியாக்க என்ன செய்யலாம் என்று சிலர் கேட்டார்களாம்.

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் அல்லது அது தொடர்பான மாத்திரைகளை சாப்பிட்டால் செக்ஸ் உறவில் சகஜமாக ஈடுபட முடியாதாமே என்று சிலர் கேட்டார்களாம்.

ஆண் குறியின் அளவைப் பொறுத்துதான் செக்ஸ் உறவின் இன்பம் இருக்கும் என்கிறார்களே, அப்படியா என்று சிலர் அப்பாவியாக கேட்டார்களாம்.

செக்ஸ் உறவை எப்போதெல்லாம் மேற்கொள்ளலாம். அடிக்கடி மேற்கொண்டால் உடலுக்குப் பாதிப்பு வருமா என்றும் சிலர் கேட்டார்களாம்.

எனக்குக் கல்யாணமாகி சந்தோஷமாகததான் இருக்கிறேன். ஆனாலும் என்னுடன் காலேஜில் படித்த ஒருவன் அடிக்கடி எனது கனவில் வந்து இம்சிக்கிறான். நான் நல்லவளா, கெட்டவளா என்று சிலர் நாயகன் கமல் கணக்கில் கேட்டார்களாம்.

Previous articleகாதலன் காதலி கண்களை பார்த்து உங்கள் காதலை சொல்லுங்கள்
Next articleவாயு தொல்லையிலிருந்து நிவாரணம் பெற கைவசம் ஏலக்காய் இருந்தால் போதும்…!