Home பாலியல் பெண்களின் பாலியல் சார் செயற்பாட்டுக் குறைவு

பெண்களின் பாலியல் சார் செயற்பாட்டுக் குறைவு

24

பெண்களின் பாலியல் செயற்பாட்டுக் குறைபாடுகளுக்கு பல்வேறு கோளாறுகள் அடங்கும். அவற்றுள் பாலியலில் நாட்டமின்மை, பாலியல் எழுச்சியின்மை, பாலுறவின் உச்ச உணர்வு ஏற்படாமை, மற்றும் பாலுறவின் போது வலி ஏற்படுதல் போன்றன பொதுவான பிரச்சினைகள் ஆகும். உலகில் பெரும்பாலான பெண்கள் பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இதை பொதுவாக யாருடனும் கதைக்கவும் முடியாதலால் அமைதியாகவே மன வேதனைப் படுகின்றனர். சிலர் தமது குடும்ப வைத்தியரிடம் சென்று வயிற்று வலி, முதுகு வலி மற்றும் சனனி உறுப்பில் கடி போன்ற பிரச்சினைகளைக் கூறிக் கொண்டு செல்வார்கள். ஆனால் வைத்தியர் அவர்களது பாலியல் பிரச்சினை பற்றி விசேடமாகக் கேட்கா விட்டால் அவர்கள் தங்கள் உண்மையான பிரச்சினையைக் கூற மாட்டார்கள்.

பெண்களின் பாலியலுக்கான துவங்கலானது 4 கட்டங்களாக காணப்படும். – பரபரப்பு, சம மட்ட மன நிலை, பாலியல் உச்ச உணர்வு மற்றும் மீள் நிலை. இவற்றுக்கு எழுச்சி மற்றும் விருப்பம் என்பன பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன.

பெண்களின் பாலியல் செயற்பாடானது குறித்த பெண்ணிலும் தம்பதியரிலுமே தங்கியுள்ளது. பிரச்சினை ஒன்று இருப்பின் அதை மன நல மருத்துவரிடமோ அல்லது குடும்ப வைத்தியரிடமோ கலந்தாலோசிக்கலாம். பொதுவாக தம்பதியினருக்கான சிகிச்சையாக, உள நல, கல …………. புகட்டல் ஆலோசனை வழங்கள் மற்றும் ஆதரவு ஆகியனவே வழங்கப்படுகின்றன.

பாலுறவில் ஈடுபாடற்ற தன்மை அல்லது விருப்பமற்ற தன்மை ஆனது. மன அழுத்தம், விரக்தி, மனநிலை கோளாறுகள், களைப்பு மற்றும் ஓமோன் அளவு மாறுபடும் நிலைகளான கர்ப்பகாலம் மற்றும் மாதவிலக்கு தடைபடும் காலம் என்பவற்றால் ஏற்படும். முன்னைய காலங்களில் ஏற்பட்ட பாலியல் சார்ந்த கசப்பான அனுபவம் அல்லது பாலுறவால் ஏற்பட்ட காயங்கள் என்பனவும் இந்நிலைக்கு இட்டுச் செல்லும். பாலுறவில் நாட்டமின்றி இருப்பதால் வேறு யாருடனாவது தொடர்பு காணப்படுகிறதா போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டு தாம்பத்திய வாழ்வினும் விரிசல் ஏற்படலாம். பெண் பாலியல் உச்ச உணர்வை அடைய முடியாமை ஆண், பெண் இருவருக்குமே ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது யோனி வழியூடான பாலுறவில் எல்லாப் பெண்களுக்கும் பாலியல் உச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்பதாகும். சில பெண்கள் இவ்வுச்ச உணர்வு ஏற்படாமலே சந்தோசமாக இருப்பர். இந்நிலையில் ஆண் துணைவனானவன் தனது தோழியை கட்டியணைத்தல்இ முத்தமிடல் மற்றும் தொடுகை போன்ற சில்மிஷங்கள் மூலம் (நேரடியாக பாலுறவில் இறங்காது) மகிழ்விப்பது நல்லது.

யோனி வழி சுருக்கம்

யோனி வழித் தசைகளில் ஏற்படும் திடீர் சுருக்கங்களால் பாலுறவானது இயலாமல் போதல் அல்லது வேதனையாக இருத்தல் போன்ற நிலையே இதுவாகும். விரலை நுழைப்பது கூட முடியாமல் இருக்கும். இந்நிலை இருவருக்குமே பெரிய அவலமான நிலையாக இருக்கும். இது பாலுறவில் உள்ள பயம், கர்ப்பமாதலில் பயம், தாம்பத்திய உறவில் விரிசல் மற்றும் யோனி வழியில் ஏற்படும் வேதனையான நிலைகள் ஆகியவற்றால் ஏற்படலாம்.

இந்நிலையானது ஆலோசனை வழங்கள், பாலியல் கல்வி வழங்கள் மற்றும் ஆறுதலடைதலுக்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றால் தீர்க்கப்படலாம். சில வேளைகளில் படபடப்பை தீர்க்கும் மருந்துகள் வழங்கப்படலாம். மாதவிடாய் தடைப்பட்ட பின் ஈஸ்ரஜன் ஓமோன் அளவு குறைவடைவதால் யோனிவழி உலர்வடைந்து பாலுறவில் போது வலி ஏற்படுதல் பொதுவான ஒரு விடயம் ஆகும். இந்நிலையில் யோனி வழியில் உராய்வை நீக்க உராய்வு நீக்கி கிறீம்கள் பாவிக்கப்படலாம்.

Previous articleஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை
Next articleஆண்மைக் குறைவும் – காரணமும்!