Home பெண்கள் பெண்குறி பெண்களின் கருப்பையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

பெண்களின் கருப்பையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

49

கருப்பை தொற்று என்பது எண்டோமெட்ரிசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது கருப்பையின் உட்புறச் சுவரில் உள்ள வீக்கம் அல்லது அரிப்பு ஆகும். இதை அறிவியல்ரீதியாக எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு வகை பாலியல் நோய்களான கிளமீடியா, கோனேரியா அல்லது வேறு பல யோனி தொற்றுக்கள் மற்றும் டியூபர்க்ளோசிஸ் போன்றவற்றால் எண்டோமெட்ரியம் அல்லது கருப்பையில் தொற்று ஏற்படுகிறது. பெரும்பாலும் இம்மாதிரியான தொற்றுக்களால் சமீபத்தில் பிரசவம் நடந்த பெண்கள் அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இக்கட்டுரையில் எண்டோமெட்ரிசிஸ் அல்லது கருப்பை உள் அழற்சி இருப்பதற்கான சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடிவயிற்று வீக்கம் கருப்பை தொற்றின் முதல் அறிகுறி தான் இது. அடிவயிற்றுப் பகுதி வீங்கி, காரணமின்றி அப்பகுதியில் வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அது கருப்பை உள் அழற்சிக்கான அறிகுறியாகும்.

அசாதாரண இரத்தப் போக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தம் கசிந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், சாதாரண நாட்களில் திடீரென்று யோனியில் இருந்து இரத்தம் கசிந்தால், அது கருப்பையில் தொற்று இருக்க வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது.

அசாதாரண வெள்ளைப்படுதல் அசாதாரணமாக யோனியில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிற திரவம் வெளிவருவதோடு, கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால், அதுவும் கருப்பை உள் அழற்சிக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே கவனமாக இருங்கள்.

மலச்சிக்கல் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டும், மலச்சிக்கலை சந்தித்தால், செரிமான மண்டலம் சரியாக இயங்குவதில்லை என்று அர்த்தம். மேலும் இதுவும் கருப்பை தொற்று இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்

கடுமையான காய்ச்சல் எந்த ஒரு காரணமும் இல்லாமல், திடீரென்று உடலின் வெப்பநிலை அதிகரித்து கடுமையான காய்ச்சல் வந்தால், உடலினுள் ஏதோ கிருமிகள் நுழைந்துள்ளது என்று அர்த்தம். அதிலும் மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகளுடன் காய்ச்சல் வந்தால், அது கருப்பை தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும்.

மிகுந்த களைப்பு எந்நேரமும் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் உணர்கிறீர்களா? எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியாமல் மிகுந்த அசௌகரியத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உடலினுள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

குடலியக்கத்தின் போது அசௌகரியம் குடலியக்கம் என்பது ஆசனவாய் வழியே மலத்தை வெளியேற்றும் நிகழ்வு ஆகும். குடலியக்கம் மிகவும் அசௌகரியத்துடனும், வலியுடனும் இருந்தால், கருப்பையின் உள்ளே கருப்பை செல்களுடன் சேர்ந்து தொற்றுக்களும் வளர்கிறது என்று அர்த்தம்.

எண்டோமெட்ரிசிஸ் உடன் குழந்தை பிறப்பு பிரசவம் முடிந்த பெண்களுக்கு 24 மணிநேரம் கழித்து பரிசோதித்ததில் எண்டோமெட்ரிசிஸ் தொற்று அபாயம் இருப்பதை கண்டறியப்பட்டது. இந்த தொற்று இருந்தால் பிரசவம் முடிந்த பின் வலி மற்றும் கடுமையான காய்ச்சலை சந்திக்க நேரிடும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது வலியை அனுபவிக்கக்கூடும்.

செப்டிக் அதிர்ச்சி கருப்பை உள் அழற்சியை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அதனால் உடலின் இதர உறுப்புக்கள் பாதிக்கப்படும். செப்டிக் அதிர்ச்சிக்கான அறிகுறிகளான வெளிரிய சருமம், தலைச்சுற்றல் மற்றும் குழப்பத்துடனான மனநிலையாகும்.

உடலுறவின் போது வலி கருப்பை தொற்று இருந்தால், உடலுறவின் போது கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும் என ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. சில பெண்கள் உடலுறவின் போது ஏற்படும் வலியைப் பற்றி வெளிப்படையாக பேச தயங்கி, மருத்துவர்களிடம் செல்லத் தயங்குவார்கள். ஆனால் அது தவறு. இதை அப்படியே விட்டுவிட்டால், அந்த தொற்றுக்கள் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்துவிடும்.

Previous articleகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்! தடுப்பது எப்படி?
Next articleமாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க அட்வைஸ்