Home பெண்கள் உணவு உடல் பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும் உணவுகள்

பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும் உணவுகள்

37

நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும்.

 

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆவகேடோ

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்களின் தைராய்டு சுரப்பியின் நிலையை சமநிலையில் வைத்திருக்கும். பாலுணர்வு சக்தியை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன் தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம் போன்றவை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

துளசி இலைகள்

துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் பெண்களின் பாலுணர்வை குறைபாட்டினை நீக்குகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இருப்பதோடு தலைவலியை போக்குமாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறைபாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தியை உற்சாகப்படுத்துகிறதாம்.

பாதாம் பருப்பு

பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறதாம்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறதாம். சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளை குறைக்கிறதாம். பெண்களின் செக்ஸ் உணர்வுகளை குறையாமல் பார்த்துக்கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleசீரிய செக்ஸுக்கு சிறப்பான தூக்கம் அவசியம்!
Next articleகிளீவேஜை எடுப்பாக காட்டும் பிராவுக்கு மீண்டும் மவுசு…!