Home உறவு-காதல் பெண்களிடம் ஆண்கள் அறவே வெறுக்கும் சில குணங்கள்…

பெண்களிடம் ஆண்கள் அறவே வெறுக்கும் சில குணங்கள்…

26

காதல் என்பது ஒரு அழகான உறவு. அதன் அழகை கடைசி வரை பாதுகாக்க சில விஷயங்களை செய்ய வேண்டும் சில விஷயங்களை செய்யக்கூடாது. ஒரு ஆண் அளவுக்கு அதிகமாக காதலிக்கிறார் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடிக்காத விஷயத்தை திரும்ப திரும்ப செய்யக்கூடாது. ஒவ்வொருவரின் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கும் அதை மீறினால் உங்களை வெறுத்துவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு பெண்களிடம் சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் பற்றி காண்போம்.
இகழ்ச்சி – தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள மற்றவரை பற்றி இகழ்ந்து பேசுவது ஆண்களுக்கு பிடிக்காது.
நம்பிக்கையின்மை – உங்கள் தோழிகளிடம் உங்கள் காதலன் பேசினால் அவரை சந்தேகப்படாதீர்கள். உங்கள் காதலன் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை உங்களை அவரிடம் உயர்த்தி காட்டும்.

செலவு வைப்பது – பெண்கள் வெளியில் சென்றால், தனது பர்சை வெளியே எடுக்கவே மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதை இப்போது இருக்கும் ஆண்கள் சுத்தமாக விரும்புவதில்லை.

தன்னை பற்றியே குறை சொல்வது – முடி நன்றாக இல்லை, கொஞ்சமாக இருக்கிறது, நான் அழகாகவே இல்லை என்று உங்களை பற்றி நீங்களே குறை சொல்லிக்கொள்வது ஆண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.

கால தாமதம் – ஆண்கள் வெளியே செல்வது என்றால் சீக்கிரமாக தயாராகிவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. இரண்டு மூன்று மணி நேரம் எல்லாம் எடுத்துக்கொள்வார்கள். இது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம்.

தேவையில்லாத அழுகை – எதற்கு எடுத்தாலும் அதிகமாக மன வருத்தம் மற்றும் அடிக்கடி கண்ணீர் சிந்தும் பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதில்லையாம்.
பழைய குப்பைகள் – அடிக்கடி பழைய சண்டைகளை பற்றி பேசுவது, முடிந்த பிரச்சனைகளை பற்றி பேசுவது, அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைப்பது ஆண்களுக்கு அறவே பிடிக்காதாம்.

Previous articleமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்
Next articleXtamilx doctor அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை