Home சூடான செய்திகள் புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள எல்லா வயதினரும் இதைக்கண்டிப்பாய் படிக்கலாம்!!!

புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ள எல்லா வயதினரும் இதைக்கண்டிப்பாய் படிக்கலாம்!!!

40

அந்தக்காலத்தில் செக்ஸ் எனப்படும் கலவி பற்றிய அறிவு மக்களிடையே மிக மிகக்குறைவு… “தானாய் கற்றுத்தேர்வதுதான் காமம்’’ என்ற நிலையிலேயே அப்போது செக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. கலவி பற்றிய அறிவு சார்ந்த விஷயங்களைத்தெரிந்து கொள்ள அப்போது பெரிதான வழிகள் ஏதுமில்லை…

ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை… இன்ட்டெர்நெட் என்ற ஒரு விஷயம் அதைப்பயன்படுத்துவோருக்கெல்லாம் கலவி பற்றிய அறிவை வழங்கும் முக்கிய சோர்ஸாக இருக்கிறது… இன்றைய இளவட்டங்கள் பெரும்பாலும் ஃபோர்னோகிராபி படங்கள் மூலம்தான் கலவி பற்றிய விஷயங்களை அறிந்து வைத்திருப்பார்கள்…

கலவியறிவு இன்னும் நமது நாட்டின் பாடத்திட்டங்களில் சரியான விகிதத்தில் புகுத்தப்படாமலிருப்பதால் ஒரு சில செக்ஸ் சந்தேகங்கள் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் எப்போதும் அவர்களின் மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சில செக்ஸ் சந்தேகங்களை விளக்கும் கலவியறிவாகத்தான் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டிருக்கிறதேயொழிய இது மூன்றாம் தர கட்டுரை அல்ல…

செக்ஸில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும்… அவற்றில் ஒரு சில ‘என்னடா இதுகூட தெரியாமல் யாராவது இருப்பாங்களா?’… எனும் ரேஞ்சில் மிகவும் கேலிக்குரிய சந்தேகமாகக்கூடத்தோன்றலாம். ஆனால் இதுகூடத்தெரியாமல் நமது நாட்டில் நிறையபேர் சரியான கலவியறிவு இல்லாமல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் பலவிதமான சந்தேகங்கள் குறித்தும் விளக்குவது தவறில்லைதான்…

v STD… பால்வினை நோய் என்றால் என்ன?…
STD என்றால் Sexually Transmitted Diseases என்பதுதான் விரிவாக்கம். அதாவது செக்ஸ் உறவின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவும் வியாதி என்று அர்த்தம். பலவித நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளும், வைரஸ்களும் செக்ஸ் உறவின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இது பிறப்புறப்பில் அதாவது ஆண்குறி மற்றும் பெண்குறி ஆகியவற்றில் பலவித நோய்களை உண்டாக்குவதோடு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்பட வழி வகுக்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் –ம் ஒரு STDதான்… ஆனால் இது இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் உயிரிழப்பு வரை இழுத்துச்செல்லக்கூடியது.

v ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் என்றால் என்ன?…
இதைப்பற்றிய விரிவான விளக்கத்தை தெரிந்து கொள்ள இந்த லின்க்கை படியுங்கள்
இப்படியும் பரவும் எய்ட்ஸ் – உஷார் மக்களே…!

v கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட்டிருக்கும்போது அந்த உடலுறவில் STD / ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்றவை தாக்காமல் இருக்குமா?…
நிச்சயமாக இல்லை. கர்ப்பத்தடை மாத்திரைகள் கர்ப்பம் தரிக்காமலிருக்க மட்டும்தான் உதவுமேயொழிய நிச்சயம் அவை STD / ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்காது.

v ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்றவை தாக்காமல் இருக்க தடுப்பு மருந்துகள் உள்ளனவா? அவை எங்கு கிடைக்கும்?…
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்றவை தாக்காமலிருக்க தடுப்பு மருந்துகளும், தாக்கியபின் பூரண குணப்படுத்தும் மருந்துகளும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய உஷார் செய்தி…

v மாதவிலக்கு நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா?…
மாதவிலக்கு நேரத்தில் கொள்ளும் உடலுறவில் நோய்க்கிருமிகள் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் முடிந்தவரை தவிர்த்து விடுவது நலம்… ( தவிர்க்க முடியாமல் அந்த நேரத்தில் கொள்ளும் உடலுறவுகளில் அது மனைவியாகவே இருந்தாலும்கூட கண்டிப்பாய் காண்டம்ஸ் உபயோகப்படுத்துதல் வேண்டும்…).

v Date rape drugs என்றால் என்ன? இந்த மருந்துகள் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்குமா?…
நிச்சயமாக இல்லை…Date rape drugs என்பது ஒருவிதமான போதையை கொடுத்து அரை மயக்கத்தை வரவழைக்கக்கூடியதாகும். இந்த மருந்து எந்தவிதமான சுவையும், வாசனையும் இல்லாதது என்பதால் எந்தவொரு உணவுப்பொருளுடனும், பானங்களுடன் அதை உட்கொள்பவருக்குத்தெரியாமலேயே எளிதாக கலந்து கொடுத்துவிட முடியும்.

ஒருவர் இது போன்ற மருந்துகளை உட்கொண்டிருக்கும் போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு எளிதாக ஆளாக்கப்படலாம் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த மருந்துகள் கர்ப்பத்தை தடுக்கவோ… STD / ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்றவை பரவாமல் தடுக்கவோ எந்தவித உதவியும் செய்யாது என்பதுதான் உண்மை.

v முதல் முறை உடலுறவு கொள்ளும்போதே கர்ப்பம் உண்டாகுமா?…
கண்டிப்பாக… பெரும்பான்மை வாய்ப்பு உண்டு. முதல் முறை மட்டுமல்ல… எப்போது உடலுறவு கொண்டாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கள் உண்டுதான். 100% கர்ப்பம் தரிக்காமலே இருக்க ஒரே வாய்ப்பு செக்ஸே வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான்!!!.. மற்றபடி கருத்தடை சாதனங்களாக மார்க்கெட்டில் இருக்கும் எல்லா கண்டுபிடிப்புகளுமே உபயோகப்படுத்துவோரின் தவறுகளின் அடிப்படையில் 100% பாதுகாப்பானது என்று சொல்வதற்கில்லை…

v பாதுகாப்பற்ற உடலுறவு என்றால் என்ன?…
கர்ப்பம் தரிக்காமல் இருக்கவும், STD போன்ற நோய்கள் பரவாமல் இருக்கவும் சரியான பாதுகாப்பு முறைகளை (கர்ப்பத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள், காண்டம்ஸ்) பின்பற்றாமல் கொள்ளும் உடலுறவுதான் பாதுகாப்பற்ற உடலுறவு என்பது…

v எந்த வயதில் ஒரு பையனால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கமுடியும்?…
செக்ஸ்க்கு கார் ஓட்டுவது போன்றோ, வாக்களிப்பது போன்றோ எந்தவித வயது வரம்பும் இயற்கையில் கிடையாது… இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் 10 வயது பையன், 12 வயது பையன் என்று மிகக்குறைந்த வயதுடைய பையன்கள் எல்லாம் அப்பாவாகும் செய்திகள் பல கேள்விப்பட்ட வண்ணம் இருப்பதிலிருந்தே இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்… இந்த வயதில்தான் ஒரு பையனால் ஒரு பெண்ணை கர்ப்பவதி ஆக்கமுடியும் என்று எந்த வரையறைகளும் இயற்கையில் இல்லை…அது ஒவ்வொரு ஆண்மகனின் உடலைப்பொருத்தது…

v எந்த வயதிலிருந்து உடலுறவின்போது கர்ப்பத்தடை விஷயங்களை பயன்படுத்தத்தொடங்கலாம்?…
இதற்கு எவ்வித வயது வரம்பும் கிடையாது… எப்பொழுது கர்ப்பம் வேண்டாமென்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இதை உபயோகிப்படுத்திக்கொள்ளலாம்… ஆனால் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்… எல்லா கர்ப்பத்தடை விஷயங்களும் STD போன்றவற்றிலிருந்து பாதுகாப்பவை அல்ல…

v கன்னி கழியாத ஒரு பையனால் முதல் முறை உடலுறவில் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கமுடியுமா?…
முடியும்… கன்னி கழியாத ஒரு பையன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவதும், கன்னி கழியாத ஒரு பெண் கர்ப்பமாவதும் முதன்முதலில் கொள்ளும் செக்ஸ் உறவிலேயே நடக்கும்…

v செக்ஸில் Penetration என்றால் என்ன?…
உடலுறவின் போது ஆணுறுப்பானது பெண்ணுறுப்புக்குள் நுழைவதுதான் Penetration…

v ஒரு ஆண் உடலுறவின் போது பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விந்தை செலுத்தாமல் அதன் மேற்புறத்திலும், அருகிலுமாய் விந்தைத்தெளிக்கும் போது கர்ப்பம் உண்டாகுமா?…
இதற்கு யெஸ் என்பதுதான் தியரிப்படியான விடை. விந்தணுவுக்கு பெண்ணின் அந்தரங்கத்துக்கு அருகில் இருந்தால்கூட எங்கே செல்ல வேண்டுமோ அங்கே செல்லும் திறன் உண்டு என்றாலும், Penetration இல்லாத இது போன்ற உறவுகளில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும் வாய்ப்பிருப்பதும் உண்மை…

v உடலுறவின் போது ஒரு பெண் உள்ளாடைகளுடன் இருந்து, ஆண் அந்தப்பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விந்தை செலுத்தாமல் உள்ளாடையின் மேற்புறத்திலேயே படுமாறு விந்தணு வெளியேறும்போது கர்ப்பம் உண்டாகுமா?…
இதற்கும் யெஸ் என்பதுதான் தியரிப்படியான விடை. விந்தணுவுக்கு பெண்ணின் அந்தரங்கத்துக்கு அருகில் இருந்தாலும் எங்கே செல்ல வேண்டுமோ அங்கே செல்லும் திறன் உண்டு என்றாலும்கூட Penetration இல்லாத இது போன்ற உறவுகளில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும் வாய்ப்பிருப்பதும் உண்மை… துணிகளில் இருக்கும் நுண்ணிய துளைகள் மூலம் விந்தணு நுழைந்துவிடும் வாய்ப்புள்ளதால் துணிகள் எப்போதுமே கர்ப்பத்தை தடுக்கும் வழிமுறைகளாய் செயல்பட முடியாது.

v உடலுறவின் போது ஒரு பெண் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றாலும்கூட கர்ப்பம் உண்டாகுமா?…
கண்டிப்பாக கர்ப்பம் உண்டாகும்… ஒரு பெண் உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைவதற்கும் கர்ப்பம் உண்டாவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

v ஓரல் செக்ஸ் மூலம் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறதா?…
ஓரல் செக்ஸை கொடுப்பதாலோ… பெறுவதாலோ… கர்ப்பம் உண்டாக வாய்ப்பேயில்லை. ஆனால் ஓரல் செக்ஸ் மூலம் STD / ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் உண்டாகலாம்!!!…

v செக்ஸின் போது கர்ப்பம் உண்டாகாமல் இருக்க ஏதாவது தனிப்பட்ட உடலுறவு முறைகளோ, நிலைகளோ உண்டா?…
அப்படி எந்த முறைகளும், நிலைகளும் இல்லை. பிறப்புறுக்கும் பிறப்புறுக்கும் ஸ்பரிசம் உண்டாகும் மற்றும் பிறப்புறுக்கு அருகில் பிறப்புறுப்பு போன்ற உடலுறவுகளில் எந்தவிதமான நிலைகளில் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் கண்டிப்பாய் கர்ப்பம் உண்டாகலாம்!!!…

v தண்ணீருக்குள் உடலுறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் உண்டாகாது என்பது உண்மையா?…
உண்மையில்லை… தண்ணீர் என்பது ஒரு சிறந்த கர்ப்பத்தடை விஷயமுமல்ல… அது விந்தணுவை தடைசெய்யவும் முடியாது…

v உடலுறவுக்குப்பின்னர் பெண்ணுறுப்பின் ஆழம் வரை கழுவுவது (Douche) கர்ப்பம் ஏற்படாமல் தடுக்குமா?…
தடுக்காது… ஒரு சில ஆராய்ச்சிகளின் முடிவில் இந்த douching மூலம் STD பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாவதாக கண்டறியப்பட்டிருக்கிறது…

v மாத விலக்கின்போது கொள்ளும் உடலுறவிலும் கர்ப்பம் உண்டாகுமா?…
கண்டிப்பாக உண்டாகும்… மாதவிலக்கின்போது உடலுறவு கொண்டால் கர்ப்பம் உண்டாகாது என்பது தவறான கூற்று…

v உடலுறவின்போது ஒன்றின் மேல் ஒன்றாய் இரண்டு காண்டம்களை உபயோகப்படுத்துவது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களிலிருந்து அதிக பாதுகாப்பு அளிக்குமா?…
கண்டிப்பாக இல்லை… இரண்டு காண்டம்களை ஒரே சமயத்தில் உபயோகப்படுத்தும்போது அவை ஒன்றோடொன்று உராய்தல் காரணமாக கிழிந்து தோல்வி அடையலாம். அதனால் எப்போதுமே ஒரேயொரு காண்டமை மட்டும் அதன் தயாரிப்பு அட்டையில் விளக்கியது போன்ற சரியான முறையில் பயன்படுத்துவதுதான் மிகவும் பாதுகாப்பானது.

சரி… இதுவரை செக்ஸ் சம்மந்தப்பட்ட பலப்பல சந்தேகங்களையும் அவற்றுக்கான பதில்களையும் படித்தாகிவிட்டது…

இது மட்டுமேயல்ல செக்ஸ்… இன்னும் நிறைய விஷயங்கள், சந்தேகங்கள் செக்ஸில் கொட்டிக்கிடக்கும். அவற்றையெல்லாம் வரும் நாட்களில் தொடர்ந்து பதிவிடுகிறேன்…

அதுவரை புதிதாய் தெரிந்து கொண்ட விஷயங்களை தெரியாதவர்களுக்கும் விளக்கிச்சொல்லுங்கள்…