Home சமையல் குறிப்புகள் புதினா சர்பத்

புதினா சர்பத்

18

மருத்துவ மூலிகையான புதினா கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

புதினா கீரையில் சர்பத் தயாரிக்க நல்ல இலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.தேவையான பொருட்கள்

புதினா கீரை- ஒரு கோப்பை அளவு.

எலுமிச்சை பழம்-1.

பனங்கற்கண்டு-தேவையான அளவு.

செய்முறை

* புதினா கீரையை இடித்து, சாறு எடுத்துக் கொண்டு, அதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.

* இதனுடன் இடித்து தூளாக்கப்பட்ட பனங்கற்கண்டை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும், நன்றாக ஆறியதும் எடுத்து பருகலாம்.

Previous articleநரம்புத் தளர்ச்சி நீங்க மருந்துகள் என்னென்ன?
Next articleதாயாகும் முன்னே