Home இரகசியகேள்வி-பதில் பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன?

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன?

16

9564kixi06vnஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

உங்கள் கணவருக்கு செக்ஸ் மூடே வருவதில்லையா?

வீட்டு வேலை செய்யும் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!

துவைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யும் ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

முன்பெல்லாம் வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆணாதிக்க உலகம் என்பதால் இப்படி பெண்களை பிரித்து வைத்து விட்டனர். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆண்களை விட உயர்ந்த நிலைக்குப் பெண்கள் போய் விட்டனர்.

நானும் சம்பாதிக்கிறேன், நீயும் சம்பாதிக்கிறே. நான் துணி துவைச்சா நீ அயர்ன் பண்ணு. நான் சமைச்சா, நீ பாத்திரத்தைக் கழுவு என்று பிரித்துக் கொண்டு இருவரும் சுமைகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர்.

ஆனால் காலம் காலமாக பெண்கள் செய்து வரும் வேலைகளை செய்யும் அதிக அளவில் செய்யும் ஆண்களுக்கு, செக்ஸ் ஆர்வம் குறைந்து போய் அவர்கள் செயலிழந்த நிலைக்குப் போய் ( அதாவது டயர்டு ஆகி) விடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.

அதேசமயம், இந்த வேலைளை குறைந்த அளவில் செய்யும் ஆண்கள் அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுகிறார்களாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சோஷியோலாஜிஸ்டுகள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அளவில் இந்தஆய்வை நடத்தியுள்ளனர். மொத்தம் 4500 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அனைவரும் திருமணமானவர்கள்.

இந்த ஆய்வின்படி, சராசரியாக 46 வயது கொண்ட கணவர்களும், 44 வயது கொண்ட மனைவியயரும், சராசரியாக வாரத்திற்கு 34 மணி நேரம் பெண்கள் பார்க்கும் வேலைகளை இணைந்து செய்கின்றனர்.

மேலும் ஆண்கள் பார்க்கும் வேலையாக இருப்பவற்றை அவர்களுடன் பெண்களும் இணைந்து செய்கின்றனர். இது வாரத்திற்கு 17 மணி நேரமாக உள்ளது.

பெண்கள் பார்க்கும் வேலைகளை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கணவர்கள் செய்கின்றனர். பெண்கள் பார்க்கும் வேலைகளை அதிகளவில் பார்க்கும் ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவதாக இருந்தாலும் கூட பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி குறையவில்லையாம்.அந்த அளவு அப்படியேதான் பாதிக்கப்படாமல் இருக்குமாம்.

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது… மனைவியர் பெரும்பாலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, ஷாப்பிங், துணி துவைப்பது போன்றவற்றை காலம் காலமாக செய்து வருகின்றனர்.

அதேசமயம், ஆண்கள் பில் கட்டுவது, வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவது உள்ளிட்ட வெளி வேலைகளை அதிகம் செய்கின்றனர்.

இதில் மாற்றம் ஏற்பட்டு வீட்டுவேலைகளை ஆண்கள் அதிகம் பார்க்கும் போது அவர்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து போய் விடுகிறதாம்.

வழக்கமான வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவதால் இந்த விளைவு ஏற்படுகிறதாம்.

புதிய வேலைக்கு மாறுவதால் அவர்களின் செக்ஸ் நடவடிக்கைகளிலும் குழப்பமாகி அது ஆர்வத்தைக் காலி செய்து விடுவதாக கூறுகிறது இந்த ஆய்வு.

அதற்காக ஆண்கள் சமைக்கக் கூடாது, துணி துவைக்கக் கூடாது, அயர்ன் பண்ணக் கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது என்று கூற முடியாது.மாறாக இதுபோன்ற வேலைகளை முழுமையாக செய்யாமல் பிரித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.

அல்லது குறைவாகச் செய்யலாம். அதற்கு கணவரும், மனைவியும் இணைந்து புரிந்து பேசி வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.

அதேபோல ஒரு வீட்டில் கணவரும், மனைவியும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 30-40 வருடத்திற்கு முந்தைய குடும்பச் சூழல் இப்போது இல்லை.

இருப்பினும் செக்ஸ், வீட்டு வேலைகள் போன்றவை இன்னும் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாகவே உள்ளன. அதில் பெரிய அளவில் மாற்றம் வந்து விடவில்லை என்று கூறினார் இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான காத்ரீனா லூப்.

அதேசமயம், இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், வீட்டு வேலை செஞ்சா இன்னிக்கு விருந்து தருகிறேன் என்று கூறி பல பெண்கள், கணவர்களிடம் நிறைய வீட்டு வேலைகளைச் செய்து வாங்கிக் கொள்கிறார்களாம்.

இப்படிப்பட்ட ஆண்களுக்கு நிறைய செக்ஸ் கிடைக்கிறதாம். ஆனால் அவர்களிடம் என்ன மாதிரியான வேலைகளைப் பெண்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை.