Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்புக்களை அழகுபடுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

பிறப்புறுப்புக்களை அழகுபடுத்தும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

20

அவுஸ்திரேலிய பெண்கள் தமது பிறப்புறுப்புகளை அலங்காரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த நடைமுறை பெண்களின் சிந்தனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேசிலியன் வெக்ஸ் என்றழைக்கப்படும் மெழுகு வகையைப் பயன்படுத்தி பிறப்புறுப்புக்களை அழகுபடுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் பிறப்புறுப்பை அழகுபடுத்துவதற்காக சத்திரசிகிச்சைகளை கூடுதலாக நாடுவதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சத்திரசிகிச்சை பரவலாக “The Barbie” என்றழைக்கப்படுகிறது. இதன் பெயர் Labiaplasty என்பதாகும். இந்த சத்திரசிகிச்சையின் மூலம் பிறப்புறுப்பைச் சூழவுள்ள பகுதியில் தசைமடிப்புக்கள் சீர் செய்யப்படுகின்றன.

இத்தகைய சத்திரசிகிச்சையை நாடும் பெண்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அவுஸ்திரேலிய பொது மருத்துவர்கள் சங்கம் (RACGP) அளவுக்கு அதிகமான கேள்வியை சமாளிக்கும் விதத்தில் விரைவில் சத்திரசிகிச்சைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கருவித் தொகுதியை தயாரித்து வருகிறது.

பிரேசிலியன் வெக்ஸ் முறையின் ஊடாக 20 சதவீத பெண்கள் பிறப்புறுப்பை அழகுபடுத்தும் சத்திரசிகிச்சையை நாடுகிறார்கள் என்பதால், இது குறித்து அவதானம் தேவையென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

Previous articleஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க
Next articleஉங்க ஆளுக்கு இதெல்லாம் சொல்லிக்குடுங்க.