Home ஜல்சா பிரபல நடிகரின் மனைவியின் லீலைகள் அப்படியே அம்பலம்!

பிரபல நடிகரின் மனைவியின் லீலைகள் அப்படியே அம்பலம்!

10

579910400Hrithik-Roshan2-500x500பிரபல இந்தி நடிகர் ருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். சுசானா மும்பையில் கட்டிட வடிவமைப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் கோவாவில் ஒரு கட்டிடத்துக்கு உட்புற வடிவமைப்புக்கான ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதன் மூலம் அந்த கட்டிடத்துக்கான காண்டிராக்டை ஏற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன், சுசானா ரூ.1 கோடியே 87 லட்சம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின்னர், சுசானா மேற்கொண்ட பணியில் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.

மேலும், தன்னை கட்டிட வடிவமைப்பாளர் என்று கூறி சுசானா ஏமாற்றி பணமோசடி செய்துவிட்டதாகவும், அவரால் மேற்கொள்ளப்பட்ட கட்டிட உட்புற வடிவமைப்பு பணி தொழில்நுட்ப முறையில் நேர்த்தியாக இல்லை என்றும் கூறி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர், கோவா மாநில பனாஜி போலீசில் பணமோசடி புகார் அளித்தார். இதன்பேரில், சுசானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது லண்டனில் இருக்கும் சுசானா, தன் மீதான பணமோசடி புகாரை திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘என் மீதான புகார் முற்றிலும் தவறானது. எனக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களால் நான் பயந்துவிட மாட்டேன். மேலும், இதுபோன்ற புகார், உண்மைக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று என்னை ஊக்குவிக்கிறது. சட்டப்படி இந்த புகாரை எதிர்கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநீங்கள் செல்பி பைத்தியமா ? இதோ வந்துவிட்டது ஆபத்து!
Next articleஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க எளிய வழி