Home பாலியல் பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு!!

பாசம் ஊற்றெடுக்கச் செய்யும் பாலுணர்வு!!

26

மலரினும் மெல்லிது

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ள முன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூராஹோ கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணாபுரத்து ரதி மன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால் என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலரினும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு, அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதி பிரிவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனித உணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையான பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தை பெற்றால்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்ய கலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதை தவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம். பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில் வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறிவிடுவான்.
மையம் கொள்ளும் உணர்வு

ஆக, தாது சக்தி வெளியேறிவிடாமல், உடல் கதகதப்புடன் நீண்ட நேரம் பெண்ணுடலுடன் இணைந்திருக்கும்போது, ஆணின் பிறப்புறுப்பில் மையம் கொண்டிருந்த பாலுணர்வானது, சிறிது சிறிதாக அவனது உடலிலுள்ள நாடி நரம்புகள் முழுவதும் பரவ தொடங்கும். அதே நேரத்தில் அவனுடலுக்குள் இணைந்துள்ள பெண்ணின் உடலுக்குள்ளும் பாலுணர்வுகள் பரவ தொடங்கிவிடும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியில் இருவரது உடல் முழுவதும் பாலுணர்வுகள் மையம் கொண்டுவிடும்பொழுது, அவர்களுக்குள் என்ன நிகழும்? என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது இருவரது உடல் முழுவதும் பாலுணர்வுகள் மையம் கொண்டுவிடும்பொழுது, அந்த கனப் பொழுதில் இரண்டு மனங்களும் புற சூழ் நிலையை மறந்து ஒன்றுபட்டு விடுகிறது. இருவரது இதய துடிப்பும் ஒன்றுபட்டு ஒலிக்கும். இருவரது சுவாசமும் ஒன்றாகி விடும். இந்த தருணத்தில் சிற்றெறும்பு ஒன்று ஆணின் உடலை கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் வலியை அவனுடலுக்குள் இணைந்துள்ள பெண்ணும் உணருவாள். இதேபோன்று, பெண்ணுடலை சிற் றெறும்போ அல்லது வேறு ஏதேனும் பூச்சிகளோ கடித்துவிட்டால், அதனால் ஏற்படும் வலியை பெண் உணர்கின்ற நேரத்தில், அவள் உடலுடன் இணைந்துள்ள ஆணும் உணர்வான்.

ஸ்பரிச உணர்வு

இந்த நிலைதான் ஆண்-பெண் என இரு உயிர்கள் இணைந்து ஒரு உயிராகும் நிலை. இந்த நிலையின்போது ஆண்-பெண் இருபால ரும், ஒரு சேர பெறுகின்ற ஸ்பரிச உணர்வானது, மலர்கள் நம் மீது படுகின்றபோது ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தைவிட மிகவும் மென்மையானது. இந்த மென்மையான ஸ்பரிசத்தை பெறுகின்றபோதுதான், ஆண்-பெண் இருவரிடத்திலும் உள்ள பாலுணர்வுகள் மறைந்து, பாச உணர்வுகள் ஊற்றெடுக்கும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மன பக்குவத்தை பெற்றுவிடுவார்கள். அவர்களிடத்திலே வன்முறை உணர்வுகள் குறைந்து, மனதிலே அன்பு வீச தொடங்கிவிடும். இந்த அன்புதான் மெய்யானது. இதுதான் தெய்வீகம். ஆக நாமும் இல்லற வாழ்க்கையின் மூலம் நமக்குள் புதைந்திருக்கும் அன்பினை மலர வைப்போம்.

Thanks to illamai


Previous articleமனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!
Next articleபாலுறவின் போது ஆண்மை வலுப்பெற..!!