Home குழந்தை நலம் படுக்கையில் உச்சா

படுக்கையில் உச்சா

6

சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
3. கவலை மற்றும் பயம்.
இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
தடுப்பது எப்படி?

* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு
நம்பிக்கையூட்டுங்கள்.

* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.

* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.

* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.

* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.

* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.

Previous articleபெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
Next articleஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள சில சிக்கனமான டிப்ஸ்…