Home பாலியல் நார்ம‌ல் செக்ஸ் எது? அப்நார்மல் செக்ஸ் எது?

நார்ம‌ல் செக்ஸ் எது? அப்நார்மல் செக்ஸ் எது?

85

செக்ஸ் விஷயத்தில் யாராலும், ‘இது தான் நார்மல் செக்ஸ், இது நார்மல் செக்ஸ் இல்லை’ என்று உறுதியாக அடித்துச் சொல்லவே முடியாது. கார ணம், நார்மல் செக்ஸ் என்று ஒன்றை ச் சொல்ல வந்தால், அதனை ஆறு கோணத்தில் பார்க்க வேண்டும்.
1. ஸ்டாடிஸ்டிக்கல் நார்மாலிட்டி (Statistical normality):
நூற்றுக்கு எத்தனை பேர், எந்த வகையில்
அதிகளவு செக்ஸ்இன்பம் அடைகிறார்கள் என்று கணக் கெடுத்து, அதனை நார்மல் செக்ஸ் என்று சொல்லலாம். ஆனால், இந்தக் கோணத்தில் பார்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, புள்ளி விவரப்படி 95 சதவிகிதத்தினர் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ப்பட்டுள்ளது. இந்தக் கோணத்தின்படி, எத்தனை பேர் சுய இன்ப த்தை நார்மல்செக்ஸ் என்று ஒப்புக்கொள்வார்கள்?
2. ரிலிஜியஸ் அல்லது மாரல் நார்மாலிட்டி (Religious / moral normality):
ஒரு விஷயத்தை விஞ்ஞான ப்பூர்வமாக நிரூபித்தாலும் சரி, அல்லது சமுதாயத்துக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டாலும் சரி… மதங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக, மருத்துவரீதியில் சுய இன்பம் தவ றானது அல்ல என்று சொல்லப்ப ட்டாலும், எந்த மதமும் இத னை ஏற்றுக் கொள்வதே கிடையாது. ஆக, முதல் கோணப்படி சுய இன் பத்தை நார்மல் செக்ஸ் என்றால், இந்தக் கோணத்தின் படி அது தவறா னதாக ஆகிவிடுகிறது.
3. சைக்காலஜிக்கல் சோஷி யலாஜிக்கல் நார்மாலிட்டி (Psychological / sociological normality):
இந்தக் கோணத்தில் பார்க்கு ம் போது, ஒரு செயல்பாட்டி னால் மற்ற மனிதருக்கோ சமுதாயத்துக்கோ பாதிப்பு வரும் என்றால், அது நார்மல் கிடை யாது. உதாரணமாக, பாரபீலி யாவில் ‘சேடிஸம்’ என்ற ஒன்றைப் பற்றி பார்த்தோம். மனைவியைத் துன்புறுத்தி இன்பம் அடையும் கணவனு க்கு, அதனை மனதால் ஏற்று க்கொள்ளும் மனைவி அ மைந்துவிட்டால், இதனால் மற்றவர்களுக்கு எந்தக் கெ டுதலும் இல்லை. அவர்கள் விரும்பியே அதில் ஈடுபடு வதால் வெளியிலும் சொல்லப் போவதில்லை. ‘சேடிஸம்’ என்பது பொதுப்பார்வையில் அப்நா ர்மலாக இருந்தாலும், அந் தத் தம்பதிகள் பார் வையில் நார்மல் செக்ஸ் ஆகிவிடு ம்.
பெரியவர்கள் பார்த்து நடத் திவைக்கிற முறைப்படியா ன திருமணம்தான் நார்மல் என்று சமுதாயம் நினைக்கிறது. பெற் றோர்கள் பார்வையில், காதல் திருமணங்கள் அப்நார்மலாகக் கருதப்படுகிறது. அரசாங்கம் காதல் திருமணங்க ளை அங்கீகரித்தாலும், பெற்றோர்கள் அங்கீகரிக் கப்பதில்லை!
4. லீகல் நார்மாலிட்டி (Legal normality):
கணவன்மனைவி இருவரும் விருப்பப்பட்டு வாய் மூலம் புணர்ச்சி (oral sex) வைத்துக்கொள்வதை மருத்துவ உலகம் தவறாகக் கூறுவதில்லை. சமு தாயத்திலும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சட்டரீதியில் இது குற்றமாக க் கருதப்படுகிறது. ஏனெனி ல், ‘குழந்தை பிறப்புக்கு வா ய்ப்பு இல்லாத எந்தவித செ க்ஸ் நடவடிக்கையும் தவ றானதே’ என்று சட்டம் கரு துவதால்தான்! தம்பதிகள் பார்வையில் வாய் மூலம் புணர்ச்சி செய்வது நார்மல் செக்ஸ். ஆனால் அதனை சட்டமோ, அப்நார்மல் செக்ஸாகக் கரு துகின்றது. ஹோமோ செக்ஸி ல் இரண்டு பேர் விருப்பப்பட்டு ஈடு பட்டால், அதனை நார்மல் என்று மருத்துவம் சொல்கிற து. ஆனால், சட்டரீதியில் நம் நாட்டில் அது குற்றமாகக் கரு தப்படுகிறது.
5.ஃபைலோ ஜெனடிக் நார்மா லிட்டி (Phylogenetic Normali ty):
பாலூட்டிகளில் மனிதர்களைத் தவிர மற்ற பாலூட்டிகள் எல்லாம் பெற்றோ ர், பிள்ளைகள் என்று பார்க்காமல் உட லுறவு கொள்ளும். விலங்குகள் மத்தி யில் நார்மலாக இருப்பது, மனிதனின் பார்வையில் நார்மல் அற்றதாகப் போய்விடுகிறது.
6.பயோ மெடிக்கல் நார்மாலிட்டி (Bio-medical normality) :
மருத்துவரீதியில் மனித உடம்பு எப்படியிருக்க வேண்டும், எப் படியிருக்கக்கூடாது என்றுசொ ல்லப் படுவதைப்போல, செக் ஸ் நடவடிக்கைகளைப் பார்க் கும் கோணம் இது. மனிதர்களி ன் உயர ங்களும் அவர்களின் பிறப்புறுப்புகளின் அளவுகளும் வெவ்வேறு அளவுகளில் இருக் கும். இந்த அளவுகளை வைத்து, இது மாதிரி யான செக்ஸ் நடவடி க்கைதான் நார்மல் செக்ஸ் என்று எப்படி சொல்லமுடியும்?

Previous articleஆண்குறி பற்றி ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள்
Next articleஆண் பெண் மலட்டுத் தன்மை – தீர்வு இதோ..!