Home இரகசியகேள்வி-பதில் நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு

நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு

53

maxresdefaultநான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம்.
சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே வயதுதான். அவள் என் ஜாதியை சேர் ந்தவள். பெண் பார்த்தோம், பெண் எனக்கு பிடித்திருந்தது. ஜாதகம் பார்க்கவில்லை. ஏனென்றால், எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையி ல்லை.
கல்யாணம் முடிந்து, மூன்று மாதங்கள், நன்றாக போய் கொண்டிரு ந்தது. அதன் பின், என் அம்மா ஒரு வாரம் வெளியூர் போக வேண்டி வந்தது. அப்போது தான், என் மனைவிக்கு சுத்தமாக சமைக்க தெரி யாது என்பது தெரிந்தது. அதுவரை, என் அம்மா தான் சமைப்பார். அவள் கூட மாட உதவி செய்வாள். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், என் அப்பா, என் அம்மாவிடம் இதை சொல்ல, என் அம்மா, என் மனைவியை சப்தம் போட்டார். அது அவ ள் வீட்டுக்கு தெரிந்து, பிரச்னையாகி விட்டது.
இந்த சாதாரண பிரச்னைக்கு, என்னை பயம் காட்ட விஷம் அருந்தி விட்டு, உடன் எனக்கு போன் செய்து விட்டாள். நானும், எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் தான் தெரிந்தது கல்யாணத்திற்கு முன், இருமுறை தற்கொலை முயற்சி செய்தவள் என்று. அவள் நல்லவள்; அமைதியானவள். ஆனால், கோ பம் எப்போது வருமென்று சொல்ல முடியாது.

அதன்பின், என் பிரச்னை காவல் நிலையத்திற்கு சென்று, தற்போது கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவள் இறந்தபோது, என்மீது கோப மாக இருந்த என் மனைவி வீட்டார், தற்போது அவளின் குணம் தெரி ந்ததால், இப்போது, என் மீது பாசத்துடன் உள்ளனர். என் பிரச்னை ஆரம்பித்த போது, என் சித்தப்பா மற்றும் என் அத்தை, மாமா தான் உதவி செய்தனர். என் மீது, அவர்களுக்கு அளவு கடந்த பாசமும், நம்பிக்கையும்.
பிரச்னைக்குபின், வீடுமாறி வேறு இடத்துக்கு போனோம். அதன் பின், மூன்று வருடங்கள் ஓடி விட்டன. அதுவரை நான் உண்டு, என் வேலை உண்டு என்று தான் இருந்தேன்.

ஒரு வருடத்திற்கு முன், என் பக்கத்து வீட்டில், ஒரு பெண்ணை கண் டேன். அவர்களுக்கு அது சொந்த வீடு. அந்த வீட்டில், அவர்கள் இருப து வருடங்களாக வசித்து வருகின்றனர். அவர்கள், வேறு ஜாதி. அவ ளும், முதல் திருமணமாகி, தற்போது வீட்டோடு இருக்கிறாள். அவ ள் முதல் திருமணத்தில், கணவரின் நோயை மறைத்து திருமணம் செய்துள்ளனர். அது முதலிரவு அன்றே தெரிந்து, ஒரே வாரத்தில் திரு மண வாழ்க்கை முடிந்து விட்டது. அவள் வீட்டிற்கு ஒரே பெண். அவ ள் பத்தாவது வரை படித்திருக்கிறாள். அச்சுத் தொழில் சம்பந்தப்பட்ட வேலை செய்கிறாள். பார்த்தவுடன் இருவருக்கும் பிடித்து விட்டது.

சிறிது நாளில், என் நிலை உணர்ந்து, வேண்டாம் என ஒதுங்கினேன். என்னை தொடர்பு கொண்டு அழுதாள். அதன்பின், என் நிலையை முழுமையாக எடுத்து கூறினேன். “நான் வாழ்ந்தால், உங்களுடன் தான் வாழ்வேன்; இல்லையென்றால், திருமணம் செய்து கொள்வதி ல்லை…’ என்றாள். இந்த ஒரு வருடத்தில், நாங்கள் ஒரு நாள் நெருங் கி பழகி விட்டோம். எங்கள் காதலை, என் நண்பர்களுக்கு தெரியப் படுத்தினேன்.
என் நண்பர்கள், உன் நிலைமை தெரிந்து நடந்து கொள். மேலும், அவள் ஜாதியை சொல்லி, நீங்கள் இருவரும் திருமணம் செய்தால், உன் சொந்தம், உறவு, சமூகம் எல்லாம் உன்னை ஒதுக்கி விடும். மேலும், உன் முதல் திருமணத்தில், உங்கள் குடும்பப் பெயர் கெட்டு விட்டது. மேலும், கெடுத்து விடாதே என்றும், உன் சித்தப்பாவுக்கு பட்ட நன்றியை மறந்து விடாதே என்றும் திட்டுகின்றனர். மேலும், அவளுடன் நடந்ததை கூறினேன். அதற்கு அவர்கள் கிடைத்தவரை லாபம் என்று விட்டுவிடு என்று கூறுகின்றனர். அதன் பின், அவள் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அவர்களும் ஜாதியை காரணம் சொல் லி வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஆனால், அவர்கள் மிகவும் அமைதியானவர்கள், நல்லவர்கள். ஏனெ ன்றால், வேறொருவராக இருந்திருந்தால், உடனே என் வீட்டில் பிர ச்னை செய்திருப்பர். தற்போது, அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தற்கொலை. நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வில்லை என்றால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என் று மிரட்டுகின்றனர். நான், அவளுக்கு துரோகம் செய்ய விரும்பவில் லை. வாழ்ந்தால், அவளுடன் தான் வாழ வேண்டும். ஏனென்றால், அவள் போல் ஒருத்தியை பார்த்ததில்லை.

அவள் அழகானவள், பக்தி உள்ளவள், ஒழுக்கமானவள். அவள் என் னை நெருங்க விட்டது கூட, என் மீது உள்ள நம்பிக்கையில்தான். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. என் கேஸ் முடிய, இன்னும், ஆறு மாதங்கள் உள்ளன. கேஸ் எனக்கு தான் சாதகமாய் உள்ளது. அது ஒன்றும் பிரச்னையில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா…

* இரு உயிர்களை தற்கொலைக்கு தூண்டி விட்டு, நாங்கள் திரு மணம் செய்து கொள்வதா?
* நன்றி மறந்து, என் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதா?
* ஒரு ஒழுக்கமான, அமைதியான பெண்ணின் மனதை கெடுத்து, அவளுக்கு துரோகம் இழைத்து, வாழ்நாள் முழுவதும் உறுத்தலில் வாழ்வதா?
*யாரும் எப்படியோ போகட்டும் என்று திருமணம் செய்து கொள்வ தா?
அம்மா, எனக்கு கேஸ் நடக்கும் போது, அவளை காதல் திருமணம் செய்ய முடியுமா? அதற்கு சட்ட சிக்கல் எதுவும் வருமா? ப்ளீஸ் அம் மா, இதற்கு தயவு செய்து பதில் கொடுங்கள்.
— இப்படிக்கு தங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, 65 ஆண்டுகளாகியும், நம் திருமண பந்தங்களில், ஜாதி வெறி தொட ர்ந்து ஆதிக்கம் செய்வதை, உன் கடிதம் அப்பட்டமாக்கியுள்ளது.
உனக்கு முதல் திருமணம், 21 வயதிலேயே நடந்து முடிந்திருக்கிறது. மனைவிக்கு சமைக்கத் தெரியாது என்ற அற்ப காரணமே, உங்களு க்குள் முட்டல் மோதலை உருவாக்கி, முதல் மனைவியை தற்கொ லைக்கு தள்ளியும் இருக்கிறது.
உனக்கு பயம் காட்ட, உன் மனைவி தற்கொலை முயற்சி செய்தாள் என்பதும், திருமணத்திற்கு முன்பே, அவள் இரு தற்கொலை முய ற்சிகளில் ஈடுபட்டவள் என்பதும், நீ இட்டுக் கட்டிய கட்டுக்கதையாக எனக்கு தோன்றுகிறது.
மனைவியை தற்கொலைக்கு நீ தான் தூண்டினாய் என்ற வழக்கு கோர்ட்டில் நடக்கிறது என யூகிக்கிறேன். அந்த வழக்கில், ஜாமின் பெற்று வழக்கை நடத்தி வருகிறாய் என எண்ணுகிறேன். வழக்கில் உன் தரப்பு சாட்சிகளாக உன் சித்தப்பா, அத்தை, மாமா இருக்கின்ற னர்.
மூன்று ஆண்டுகளாக வழக்கு நடந்து வர, நீ, உன்னைப் போன்றே முதல் திருமணத்தில் தோற்ற பெண்ணுடன், பழக ஆரம்பித்துள்ளா ய். உன் பழக்கம் ஒரு நாள், தாம்பத்தியத்தையும் ருசி பார்த்து விட் டது.
நீ இரண்டாவதாய் பழகும் பெண், தன் முதல் திருமணத்தை நீதி மன்றத்தில் அணுகி, சட்டப்படி ரத்து செய்து விட்டாரா அல்லது ரகசிய நோயுள்ள கணவனுடன் சேர்ந்து வாழ பிரியமில்லை என, அறிவித்து தனியாக வாழ்கிறாரா?
உனக்கு எதிராக நடக்கும் வழக்கில், தீர்ப்பு உனக்கு சாதகமாய் வரும் வரை காத்திரு. உனக்கு சாதகமாய் தீர்ப்பு வந்தாலும், எதிர் தரப்பு மேல் முறையீடு செய்யப்படாமல் இருப்பது உத்தமம். தீர்ப்பு வந்த தும், நடுநிலை பெரியவர்களை வைத்து, உன் தரப்பிடமும், நீ விரும் பும் பெண் தரப்பிடமும், ஆக்க ரீதியாய் பேச்சுவார்த்தை நடத்து.
தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டும், இரண்டாம் திரு மண பெண் வீட்டாரை பேசி சமாதானப்படுத்து, நண்பர்களின் துர் போதனைகளை தூக்கிப் போடு.
* “இரு உயிர்களை தற்கொலைக்கு தூண்டி விட்டு, நாங்கள் திரு மணம் செய்து கொள்வதா?’ என, முதல் கேள்வி கேட்டுள்ளாய். பொதுவாக இவ்வகை மிரட்டல்கள், “எமோஷனல் பிளாக்மெயில்’ வகையை சார்ந்தவை. தற்கொலை மிரட்டல்கள் எந்த தரப்பிருந்து வந்தாலும், அவைகளை துணிச்சலாய் அணுகு. பெரியவர்களை வைத்து நீ நடத்தும் பேச்சுவார்த்தையே, தற்கொலைக்கு எதிரான ஆலோசனையாகவும் அமையும்.
* “நன்றி மறந்து, என் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதா?’ என, இர ண்டாம் கேள்வி கேட்டுள்ளாய். உன் இரண்டாம் திருமணம், நன்றி மறப்போ, உன் வீட்டு நம்பிக்கையை கெடுப்பதோ ஆகாது. உணர்ச்சி கொடி பிடிக்காமல், அறிவுக்கொடி உயர்த்தினால், உன் இரண்டாம் திருமணம், நல்லதொரு ஏற்பாடாக, உன் வீட்டாருக்கு தெரியும்.
* “ஒரு ஒழுக்கமான, அமைதியான பெண்ணின் மனதை கெடுத்து விட்டு, அவளுக்கு துரோகம் இழைத்து, வாழ்நாள் முழுக்க உறுத்த லில் வாழ்வதா?’ என, மூன்றாம் கேள்வி கேட்டுள்ளாய். நியாயமான கேள்வி. உன்னை நம்பி மனதையும், உடலையும் ஒப்படைத்தவளு க்கு துரோகம் செய்யாது, அவளை சட்டரீதியாக இரண்டாம் திரு மணம் செய்து கொள் என்று, ஆணித்தரமாய் ஆலோசனை கூறுகி றேன்.
*”யாரும் எப்படியோ போகட்டும் என்று, திருமணம் செய்து கொ ள்வதா’ என, கேட்டுள்ளாய். பொதுநலம் கெடுக்காத சுயநலம் தப்பி ல்லை.
சட்டத் தடைகள் இருந்தால், அறவே நீக்கி, மறுமணம் புரிந்து கொள் மகனே. வாழ்த்துக்கள்!