Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தொப்பை குறையணுமா! இதோ சூப்பரான பயிற்சி

தொப்பை குறையணுமா! இதோ சூப்பரான பயிற்சி

14

இன்று பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் பிரச்னைகளில் ஒன்று தொப்பை.

தொப்பையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதுண்டு.

ஆனால் வீட்டில் இருந்தபடியே மிக எளிதான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பயிற்சி செய்ய முதலில் கால்களுக்கிடையே 2 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளவும்.

பின் கைகளை தோள்பட்டைகளுக்கு இணையாக நீட்டிக்கொள்ளவும். பின்னர் மெதுவாக முன்புறமாக குனிந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும். அடுத்து இடது கையால் வலது கால் பாதத்தை தொட வேண்டும்.

இவ்வாறு திரும்ப திரும்ப செய்ய வேண்டும், இடது கையால் வலது காலை தொடும் போது உடலை வலது பக்கமாக திரும்ப வேண்டும், வலது பக்கம் செய்யும் போது அந்த பக்கம் திரும்ப வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது கால் முட்டிகள் மடங்கக்கூடாது. ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதனை தினமும் 3 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleமன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? இதோ வழிகள்
Next articleபடுக்கையில் மிகவும் சிறப்பாக செயலாற்ற வழிகள்!