Home சூடான செய்திகள் ‘தேவையை’கண்களில் வெளிப்படுத்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்!

‘தேவையை’கண்களில் வெளிப்படுத்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்!

22

காதல் உணர்வுகளும், தேவைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மாதிரியாக இருக்கும். தனது தேவையை ஆணுக்கு உணர்த்தும் பெண்ணின் பார்வைகளும், பேச்சுக்களும் இலைமறை காயாகவே இருக்கும். அதை புரிந்து கொண்டு நிறைவேற்றும் ஆணையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர் அதீதமாக காதல் கொள்கின்றனர். இதோ எந்த மாதிரியான சூழலில் தங்களின் ரொமான்ஸ் தேவைகளை எப்படி உணர்த்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்களேன். பார்வை ஒன்றே போதுமே பெண்ணின் கண்கள் அவர்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும். தாம்பத்ய உறவின் தேவையை கண்களின் மூலமாக வெளிப்படுத்துவதில் பெண்கள் கில்லாடிகளாம். ரொமான்ஸ் லுக் விடும் மனைவியைப் பார்த்தாலே தெரியும். அவர்களின் கண்கள் ஒளிர்வது காதலிற்கான ஒரு அழைப்பு என்பதை கணவர்கள் புரிந்து கொள்ளலாம். அதீதமான அன்பு தாம்பத்ய உறவு முடிந்த உடன் கடமை முடிந்தது என்று ஆண்கள் விட்டு விட்டு உறங்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்ல கணவரின் அரவணைப்பிலேயே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். தாம்பத்ய உறவுக்குப் பின்னர்தான் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான செல்லமாய் கடித்தும், முத்தமிட்டும் விளையாடுவார்களாம். அவர்கள் முத்தமிட தொடங்கினாலே இன்னமும் என்னுடன் கொஞ்ச நேரம் இரு என்று சொல்லாமல் சொல்கின்றனர் என்று அர்த்தமும். சமையலில் தெரியும் மனைவி அன்றைக்கு மட்டும் விசேசமாய் ஏதாவது சமையல் செய்கிறாரா? தட்டில் வகை வகையாய் உங்களுக்கு ஏதாவது தென்படுகிறதா? அன்றைக்கு படுக்கையறையில் ஏதாவது விசேசம் என்பதை அப்போதே புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பெரும்பாலான மனைவிகள் தங்களின் மையலை சமையலில் வெளிப்படுத்துவார்களாம். சாப்பிட்டு முடித்த உடன் தெம்பாய் பாதம் பால் குடித்துவிட்டு உங்கள் விளையாட்டை தொடங்குங்களேன். அன்பாய் ஒரு அணைப்பு மனைவியின் அன்பான அரவணைப்பு அதிகமாக எப்போது கிடைக்கும் தெரியுமா? அந்த மூன்று நாட்களில் அவர்களின் காதல் தேவைகள் அதிகமாக இருக்குமாம். அப்பொழுது கழுத்தை கட்டிக்கொண்டும். சின்ன சின்ன முத்தமிட்டும் தங்களின் காதலை வெளிப்படுத்துவார்களாம். அந்த நேரத்தில் அவர்களின் தேவையெல்லாம் கணவரின் அன்பான அரவணைப்பைதான் –

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மனைவியின் மனம் கவர உளவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

என்னதான் கணவன் மனைவி என்றாலும் காதல் என்பது கண்ணியமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத்தாதவகையில் இருக்கட்டும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவன் தனக்குரியவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.

திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவலகம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க கொஞ்சநாளைக்கு மனைவியில் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றுங்களேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.

படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கணவன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் உரசலும் இருக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

புதிதாக திருமணமான உடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். இது உங்கள் மனைவியை கண்டிப்பாக சமாதானப்படுத்தும்.

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதாவது ஒரு பரிசை வாங்கி வாருங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப்பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டராவார்.

சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்தனை வயதானாலும் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். இப்படிப்பட்ட செயல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற்படும் சிரமத்தை குறைக்கிறதாம்.

அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக்கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந்த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும். –

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள். இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களில் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்கரிக்கின்றன. நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். எனவே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். நீளமான பொட்டு வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும். இதய வடிவ முகம் இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும். ஓவல் வடிவ முகம் ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும். சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும். முக்கோணப் பொட்டுக்கள் முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும். முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். –

திருமணநாளன்று இரவு புதுமணத்தம்பதியர்களுக்கு எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும். நண்பர்களின் அறிவுரையும் அவர்களின் ஆவலை அதிகப்படுத்தியிருக்கும். வலி, ரத்தம் போன்றவை சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்திவிடும். புதிதாக திருமணம் செய்து கொள்ளப்போகும் இளைய தலைமுறையினருக்கு முதல்நாள் இரவு குறித்த சில நம்பிக்கைகளையும், உண்மைகளையும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். திருமணநாளில் சில சடங்குகள் தவிர்க்க முடியாதது. அதனால் புதுமணத்தம்பதியர்களுக்கு அலைச்சலும், உடல்சோர்வும் ஏற்படும் இயல்பு. தனி அறையில் முதல் முதலாய் தனிமையில் சந்திப்பதால் பதற்றம் வேறு ஏற்படும். இந்த சூழ்நிலையில் நண்பர்கள் கூறியுள்ளதைக் கேட்டு நமக்கு அதுபோல நடக்கலையே. நாம் தப்பாக எதுவும் செய்கிறோமோ என்று எண்ணிவிடவேண்டாம். சில விசயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடக்காது என்கின்றனர் நிபுணர்கள். கன்னித்திரை கிழிதல் முதல்நாள் இரவில் பெண்களுக்கு கன்னித்திரை கிழிந்து ரத்தம் வரவேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பெண் எந்தத்தவறும் செய்யாமல் கன்னிப்பெண்ணாக இருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறியிருப்பார்கள். இது நம்பிக்கைதான். இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் பெரும்பாலான கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு வீராங்கனைகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் உடல்ரீதியான கடினமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு கன்னித்திரை கிழிந்து விடும். எனவே இவர்களுக்கு முதல்நாள் செக்ஸ் அனுபவத்தில் ரத்தம் வர வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். வலி அதிகமிருக்கும் முதன்முதலாக தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது வலி இருக்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் கன்னித்திரை கிழிவதால் அந்த வலி ஏற்படும். ஆனால் சிலருக்கு வலி ஏற்படுவதில்லை. இதனால் சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. எனவே சைக்கிள் ஓட்டுதல், குதிரை ஏற்றம், மற்றும் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கன்னித்திரை கிழிந்து இருக்கும் என்பதால் அவர்களால் குறைந்த அளவு மட்டுமே வலியை உணரமுடியும். எனவே தேவையற்ற சந்தேகங்களை மனதில் கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர் நிபுணர்கள். முதல்நாள் இரவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக அனுபவியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். பிறப்புறுப்பில் காயம் முதல் இரவு அனுபவித்தினால் பெண்களின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். எனவே பிறப்புறுப்பில் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தை உருவாக்கிவிடும். எனவே சில நாட்களுக்கு வலி ஏற்படுவது இயல்புதான். எனவே பிறப்புறுப்பில் வலி, வறட்சி ஏற்பட்டுள்ளவர்கள் சரியான மருத்துவர்களை அணுகுவதன் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கர்ப்பத்தை தடுக்கலாம் முதல் இரவில் யாரும் கர்ப்பமடைவதைப் பற்றி நினைக்கமாட்டார்கள். அன்றைய தினம் காண்டம் உபயோகிப்பதைப் பற்றி யோசிக்கவும் மாட்டார்கள். எனவே முதல்நாள் இரவில் தம்பதியரிடையே உறவு முடிந்த உடனே சிறுநீர் கழித்து விட்டாலோ, பிறப்புறுப்பை சுத்தம் செய்து விட்டாலோ கர்ப்பமடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அது தவறான கருத்து என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் முடிந்த உடன் சிறுநீர் கழிப்பதற்கும் கர்பத்தை தடுப்பதற்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். –

தாம்பத்ய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அளவில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத்ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என்ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாம். இவரு எப்ப முடிக்கிறது. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலையாக இருக்கிறது. இந்தநேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவலையாம். கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களில் 51 சதவிகிதம் பேர் கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம் என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை என்று கூறியிருக்கிறார்கள். கணவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவினைத் தொடர்வோம் என்று மிகக்குறைந்த அளவிலான பெண்களே தெரிவித்துள்ளனர். செக்ஸ் முடிந்த பின்னர் என்ன நினைப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்தமுறை எப்போ கூடுவோம் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக 37 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் முடிந்த உடன் உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறி யிருக்கிறார்கள். நீண்டநாட்கள் இருந்த உடல்வலி, தலைவலி போயே போச்சு என்று 21 சதவிகிதம் பேர் கூறியுள்ளனராம். இருவருக்கும் இடையே ஒருவித திருப்தியையும், நம்பிக்கையையும் தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள். பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். –

Previous articleபெண்களை பாதிக்கும் பாலியல் பிரச்சினைகளும் தீர்வு முறைகளும்!
Next articleசெல்லக்குட்டிக்கு என்ன கோபம்?