Home / சூடான செய்திகள் / திருமணமான நபரை காதலித்து ஏமார்ந்த பெண் – உண்மை கதை!

திருமணமான நபரை காதலித்து ஏமார்ந்த பெண் – உண்மை கதை!

என் வயது 32. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர் தான். என் பெற்றோருக்கு நான் இரண்டாவது மகள். எல்லாரையும் போல நானும் எனது தந்தையை ஹீரோவாக பாவித்து வளர்ந்த பெண் தான். என் வாழ்க்கை மிகவும் வண்ணமையாக திகழ்ந்துக் கொண்டிருந்தது.

எனக்கு சிறந்த தோழமைகள் அமைந்திருந்தன. அவர்களுடன் என் வாழ்வில் எல்லா விஷயங்களையும், இரகசியங்களையும் நான் பகிர்ந்துக் கொள்ளும் தைரியமும், நம்பிக்கையும் இருந்தது. பல சமயங்களில் மற்றவரின் இரகசியங்களையும் கேலி, கிண்டல் செய்து விளையாடியது உண்டு.
தினமும் எங்கள் உணவிற்கும், படிப்பு செலவுக்கும் பணம் ஈட்ட எனது தந்தை மிகவும் கடினமாக உழைத்தார், சில சமயங்களில் கடன் வாங்கினார். என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி தருவார்.
என் தாய், இந்த உலகில் சிறந்தவர் என கூறுவேன். என் தந்தையின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடத்த தனது ஒட்டுமொத்த வாழ்வியலையும் மாற்றி அமைத்துக் கொண்டவர் எனது தாய். நிறைய தியாகங்கள் செய்துள்ளார். ஆயினும், நாம் எனது குழந்தை பருவத்தை மிக இனிமையாகவே கழித்தேன்.

மதில் மேல் பூனை! நான் பள்ளியில் டாப்பர் கிடையாது. ஹோம் வர்க்கும் சரியாக செய்யமாட்டேன். நீ ஒரு மதில் மேல் பூனை வகையிரா என எனது ஆசிரியர் அடிக்கடி கூறி கொண்டே இருப்பார். நான் பாஸ் ஆவேனா, பெயில் ஆவேனா என எனக்கே தெரியாது. எப்படியோ எனது பள்ளி பருவத்தை ஒரு வருடம் கூட வீணடிக்காமல் தேர்ச்சி பெற்றுவிட்டேன். பிறகு பி.யூசி-யில் சேர்ந்தேன். அங்கே எனக்கு நான்கு தேவதைகள் தோழிகளாக கிடைத்தனர். பள்ளி காலத்தைவிடவும் மிகவும் இரம்மியமான, எழில்மிகு காலத்தை நான் கல்லூரியில் வாழ்ந்தேன். நிறைய கனவுகள், கிரஷ் என எல்லா பெண்களையும் போல கனவுலகில் மிதந்தேன்.

மிஸ்டர். ஹேண்ட்சம்! என் கிரஷ்ஷாக திகழ்ந்த ஆண் அவன். மிகவும் ஹேண்ட்சம். அவனை நினைக்கும் போதெல்லாம் எனது முகத்தில் ஒரு பூப்பூக்கும். அவனை பற்றி பேசும்போதெல்லாம் மனம் பூஞ்சோலையாக மாறும். ஆனால், நான் அவனுடன் பேசியதே இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நான் அவனை விரும்புகிறேன் என அவனுக்கு தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. ஒரு நாள் அவன் திருமணமானவன் என அறிந்த போது என் இதயம் நொறுங்கி போனது. அதன் பிறகு யாரையும் திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது தான் அவன் என் வாழ்வில் நுழைந்தான்.

அவன்… நான் இரண்டாம் வருடம் கல்லூரி பயின்று கொண்டிருக்கும் போது என்னிடம் அவன் நேரடியாக பிரபோஸ் செய்தான். அவன் வேறு கல்லூரியை சேர்ந்தவன், என்னை விட இரண்டு வயது மூத்தவன். என்னை லூசுத்தனமாக காதலித்தான் என்று தான் கூற வேண்டும். அவன் முதல் முறை பிரபோஸ் செய்த போது நான் ஏற்கவில்லை. என் மனம் அந்த திருமணமான கிரஷ் மீதே அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆகையால், அவனை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவன் என்னை பின்தொடரும் போது எரிச்சலாக வரும். இரண்டு வருடங்கள் என்னை மிகவும் தொல்லை செய்தான். நான் அவனை ஏற்கவே இல்லை. ஒரு நாள் வந்தது. அவனிடம் ஆம் நான் உன்னை காதலிக்கிறேன் என கூறினேன். அவன் மிகவம் மகிழ்ந்தான். அவனால், நான் அவனது காதலை ஏற்றுக் கொண்டேன் என்பதை நம்பவே முடியவில்லை. அந்நாள் நள்ளிரவு வரை குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தான், அதன் பின் நாங்கள் எல்லா நாட்களும் சந்தித்து பேச துவங்கினோம். மிகவும் நெருக்கமாக உறவில் இணைந்தோம்.

இதயம் வெடித்தது… நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தேன். எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறை இதயம் வெடித்து சுக்குநூறாவதை உணர்ந்தேன். நான் எனது ஈ-மெயில் செக் செய்துக் கொண்டிருந்தேன். அதில், ஒரு மெயில்… அவனுக்கு அந்த பெண் பிரபோஸ் செய்திருந்தது போல. ஆனால், நான் அறிவேன் என்னை அவன் ஒருபோதேம் ஏமாற்றியது இல்லை என. ஆனால், ஒருவேளை நான் அவனது காதலை ஏற்கவில்லை எனில், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அவன் முடிவு செய்திருந்ததை அப்போது தான் அறிந்தேன். அப்போது தான், நான் ஒரு சாயிஸாக இருந்ததை உணர்ந்தேன்

சண்டை! எனக்கும், அவனுக்கும் இடையே சண்டை வந்தது. அவன் என்னை சமாதானம் செய்ய மிகவும் முயற்சித்தான். அந்த பெண்ணுடன் என்னை காதலிப்பதாக அவன் கூறிவிட்டதாகவும் கூறினான். ஆயினும் அந்த பெண் தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்து வருகிறாள். இது எங்கள் இருவர் மத்தியில் ஒரு பிளவை உண்டாக்கியது. நான் இந்த உறவில் இருந்து வெளிவந்து விடலாம் என்றும் எண்ணினேன். அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது. என் வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அவனே எனக்கு துணையாக நின்றான். நான் மிகவும் லக்கி என நான் கருதி மகிழ்ச்சியாக இருந்தேன். என் சோகத்திலும், இன்பத்திலும் சரியளவு பங்கெடுத்துக் கொண்டான்.

கனவுகள்… நான் என்பது கல்லூரி காலத்தில் கனவு கண்டு வைத்திருந்த கணவனுக்கு நிகரானவன் அவன் இல்லை எனிலும், நான் அவனை மனதார காதலித்து வந்தேன். நான் அவனை ஏன் காதலிக்கிறேன் என யாரேனும் கேட்டால்… அவன் என்னை அவ்வளவு காதலிக்கிறான் என்றே பதில் அளிப்பேன். நான் அவனை காதலிப்பதை காட்டிலும், என்னை அவன் மிகுதியாக காதலித்தான். வருடங்கள் உருண்டோடின… எங்கள் உறவும் மிகவும் வலிமையானது. எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று கூட முடிவு செய்துவிட்டோம். என் மீது சூரிய வெப்பம் கூட பாடாமல் என்னை பார்த்துக் கொண்டான். என்னை ஒரு பிறந்த குழந்தை மீது அக்கறை எடுத்துக் கொள்வது போல பாவித்தான்.

மீண்டும் ஒரு பெண்… நான் இல்லாத காலத்தில், அவன் வேறு ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பது அறிய வந்தது. ஆயினும் அதை அவன் என்னிடம் மறைக்கவில்லை. அந்த பெண்ணுடன் என்ன பேசுகிறேன், எவ்வளவு நேரம் பேசுகிறேன் என அனைத்தும் கூறினான். ஆனால், அந்த பெண் அவன் அவளுடன் பேசவே இல்லை என்பது போல நடித்தாள். இதன் காரணத்தால் எங்களுக்குள் சண்டை வந்து, பிறகு கடைசியாக அவன் அந்த பெண்ணை பிளாக் செய்துவிட்டான். பிரசவ நேரம் நெருங்கியது, எங்களுக்கு குட்டி தேவதை பிறந்தாள். மூன்று மாதம் கழித்து மீண்டும் என்னவனுடன் இணைந்தேன்.

மகள்! ஆனால், என்னை காட்டிலும், மகள் மீது அவன் அதிக காதலை காண்பித்தான். எனக்கும் மகள் தான் என்ற போதிலும், இதனால் கொஞ்சம் மனவருத்தம் கொண்டேன். இதன் இடையே என மாமியார் சில வேண்டாத வேலைகள் செய்ய துவங்கினார். நான் கணவருக்காக ஒரு உணவை சமைக்க துவங்கினால், அது அவனுக்கு பிடிக்காது செய்யாதே என்பார். ஆனால், அடுத்த நாளே அதே உணவை சமைத்து பரிமாறுவார். இது போல அவர் செய்த ஒருசில காரியங்களால் எனக்கும் எனது கணவருக்கும் தனிமையில் நேரம் இல்லாமல் போனது. நான் இல்லாத போதுஎனது பீரோவை திருந்து வேவு பார்ப்பதை வேலையாக வைத்திருந்தார் மாமியார், இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சின்ன பிரச்சனை… சின்ன சின்ன பிரச்சனைகள் தான். அதையும் அவரே முன் வந்து தீர்த்து வைத்து விடுகிறார். மகள் மீதான முழு உரிமை எடுத்துக் கொண்டு மிகவும் அக்கறையாக நடந்துக் கொள்கிறார். ஆனால், இப்போது வெறும் சமாதானம் மட்டுமே அவரிடம் இருந்து நான் பெறுகிறேனே தவிர, முன்ன இருந்த அந்த காதல் இல்லை. இந்த பிரச்சனை எல்லார் வீட்டிலும் இருக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றாலும்…, முன்பு திகட்ட திகட்ட கிடைத்த காதலும், அன்பும் இப்போது துளிக்கு கூட கிடைக்காமல் போவது எவ்வளவு பெரிய கொடுமை என்பது பெண்களுக்கு மட்டுமே தெரியும்.