Home ஆரோக்கியம் தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்

தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்

11

தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

Previous article1 வயது வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவுகள்
Next articleஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?