Home இரகசியகேள்வி-பதில் தாம்பத்யம் வைத்துக் கொள்கிறாள் அதுவும் பலமுறை.

தாம்பத்யம் வைத்துக் கொள்கிறாள் அதுவும் பலமுறை.

31

நான் ஒரு ஏழ்மையான பெண். நான் காதலித்து திருமணம் செய்து, எங்களுக்கு, ஏழு வரு டம் மிகவும் நன்றாக வே ஓடியது. ஆனால், இந்த இரண்டு மாத கால மாக என் கணவர், வேறு ஒரு பெண், அது வும் திருமணமாகி, இர ண்டு குழந்தைக்கு அம் மாவான பெண் ணுடன் தொடர்பு வைத்துள் ளார். அவள் கணவர் வெளியூரில் வேலை செய்கிறார். அவள் கண வர் ஊரில் இல்லாத போது, என் கணவரு டன் சேர்ந்து, தாம்பத் யம் வைத்துக் கொள்கிறாள்; அதுவும் பலமுறை.
சென்ற மாதம் அவள் வீட்டிற்கு, நான், என் குழந்தைகள் இரண்டு பேரும் சென்றோம். அப்போது, இருவரும் ஒன்றாய் இருந்ததை பார்த்தேன். இதை பற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில் லை. திடீர் என்று ஒருநாள், இருவரும் இதைபற்றி என்னிடம் சொல்லி விட்டனர். இதன் பிறகு, எனக்கு அவரை பிடிக்கவில்லை. அதை நான் பார்த்த பிறகு, தினந்தோறும் என்னுடன் தாம்பத்யம் வைக்கிறார்; அது, எனக்கு பிடிக்கவில்லை. அவள் தினந்தோறும் போன் செய்து நாங்கள் இப்படி இருந்தோம், அப்படியிருந்தோம் என்பதால், என்னுடைய மனம் மிகவும் வேதனை அடைகிறது. இவர்கள் இருவரும், தினந்தோறும் மொபைல் போனில் பேசிக் கொள்வர்.
இப்படி தெரிந்த பிறகு, எனக்கு என் கணவருடன் வாழப் பிடிக்க வில்லை. எனக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. நீங்கள் தான்நல்ல முடிவை சொல்ல வேண்டும். மூன்று வழி மட்டும் தெரியும்.
1.நான், என் குழந்தைகள் இறந்து விடலாம்.
2.என் அம்மா வீட்டிற்கு போய் விட வேண்டும்.
3.விவாகாரத்து செய்து விடலாம்.
ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளவா? குழந் தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய் விடவா? கள்ள உறவு வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்து விட வா? மூன்றில் எது நல்லது என கேட்டிருக்கிறாய்.
ஆலோசனை கேட்டு கடிதம் எழுதும் செல்லங்கள், தயவுசெய்து ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்… ஆலோசனை கேட்டு கடிதம் எழுதும் ஆணையோ, பெண்ணையோ எனக்குத் தெரியாது. அவர் கள் எழுதும் கடிதங்களில் முழுமையான தகவல்கள் இருந்தால் தான் பொருத்தமான ஆலோசனை தர முடியும்.
உன்னுடைய கடிதத்தில் கீழ்க்கண்ட தகவல்கள் இல்லை.
1. உன் வயது, கல்வித் தகுதி, பெற்றோர், உடன்பிறந்தோர், நீ இல்ல த்தரசியா அல்லது பணிபுரிபவளா என்ற விவரங்கள் கடிதத்தில் இல்லை.
2. உன் கணவரின் வயது, கல்வித் தகுதி, கணவரின் பெற்றோர், உட ன்பிறந்தோர், அவர் செய்யும் பணி.
3. உனக்கு குழந்தைகள் இருப்பது தெரிகிறது. ஆறு வயதில், நான்கு வயதில் குழந்தைகள் இருப்பதாக யூகிக்கிறேன். இரண்டும் ஆணா, இரண்டும் பெண்ணா அல்லது ஒரு ஆண், ஒரு பெண்ணா என தெரி யவில்லை.
4. அம்மா வீட்டுக்கு போய் விடலாமா என கேட்கிறாய். பெற்றோ ரின் பொருளாதார நிலை என்ன? நீ குழந்தைகளுடன் அவர்கள் வீட் டுக்குப் போனால், உன்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனரா?
5. முந்தின மாதம் நீயும், உன் குழந்தைகளும் கணவன் கள்ள உறவு வைத்திருக்கும் பெண்ணின் வீட்டிற்கு போயிருக்கிறீர்கள். விரும் பிப் போனீர்களா, கணவன் சொல்லி போனீர்களா, உங்களுக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டா?
6.உன் கணவனை பயன்படுத்திக் கொள்வதற்காக உனக்கும், உன் குழந்தைகளுக்கும் அவள் பணம் செலவழிக்கிறாளா?
7.தங்களது கள்ள உறவை, உன் கணவனும், அவளும் சற்றும் பயமி ல்லாது டமாரம் அடிக்கின்றனரோ… அவர்களுக்கு ஏன் உன் மீது பயமில்லை? உன்னுடைய எந்த பலவீனப் புள்ளியை பயன்படுத்தி கொள்கின்றனர்?
இனி, உனக்கான தீர்வுக்கு வருவோம்…
நீயும், உன் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வது, உன் கணவனை ஊக்கப்படுத்தும் செயல். தவறு செய்யும் கணவனுக்கு தண்டனை தராமல், உனக்கும், உன் குழந்தைகளுக்கும் தண்டனை, தருவது எந்த விதத்தில் நியாயம்? தற்கொலை, கோழைகளின், பேதைகளின், தன்னம்பிக்கை இல்லாதவர்களின், எதிர்த்து போரா டும் குணமில்லாதவர்களின் இயல்பு. தற்கொலை சாத்தானின் முத் தம்; இயற்கை மரணம் கடவுளின் முத்தம். தற்கொலை எண்ண த்தை கைவிட்டு, அதன்பின் வாழும் காலம் ஒரு மனிதனின் பொற் காலம். தற்கொலை எண்ணம், பத்து ஏழரை நாட்டுசனிக்கு சமம். எல்லா நோய்களுக்கும் மருந்திருக்கிறது, எல்லா பிரச்னைகளுக் கும் தீர்விருக்கிறது. ஒரு ஈயின் ஒரு காலில் நோய் பரப்பும் தன் மையும், இன்னொரு காலில் அதே நோயை குணமாக்கும் தன்மை யும் இருப்பதாக கூறியிருக்கிறார் நபிகள் நாயகம். உன் கணவனை பழி வாங்குவதாக நினைத்து, நீ தற்கொலை செய்து கொண்டால், உன் குழந்தைகளின் கதி? இரண்டு குழந்தைகளும் பெண் குழந் தைகளாக இருந்தால், படிக்காமல், அவமானத்தில் உழன்று, பருவ வயதில் தவறான பாதைக்கு போய் விடுவர்; தேவையா? யோசித்து ப் பார்… நெஞ்சு வெடித்து விடுவது மாதிரி இல்லை?
உன் அம்மா வீடு உன்னை ஆதரித்தால், அம்மா வீட்டுக்கு போ. ஏதா வது பணிக்கு செல். குழந்தைகளை படிக்க வை. குறைந்த பட்சம் நீ பிளஸ் 2வாவது படித்திருந்தால்தான், உனக்கு மாத சம்பளம், 4,000 ரூபாயாவது கிடைக்கும்.
விவாகரத்து செய்து விடலாமா என கேட்கிறாய். பொருளாதார சுதந்திரம் இல்லாமல், பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் நீ விவாகரத்து செய்து கொள்வது ஆபத்தானது. உன் கணவன் செய் தது ஒரு தப்பு. நீ பல தவறுகள் செய்யும் அவலச்சூழல் நேரும்.
கள்ள உறவை கத்தரித்து விட்டு வரும் வரை, உன் கணவனை, உன்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள அனுமதிக்காதே. அவள் வீட்டிற்கு நீயோ, உன் குழந்தைகளோ போகாதீர்கள். அவர்களது கள்ள உறவை உன் முன் தம்பட்டம் அடித்தால், மொபைல் போனை உடைத்து விடுவேன் என மிரட்டு. வெளியூர் வேலைக்கு செல்லும் அவளது கணவனுக்கு, இவளின் செய்கைகளை உன் அடையாளம் காட்டாமல் தெரியப்படுத்து.
விவாகரத்தும், தற்கொலையும் இல்லாத வழியே சிறப்பான வழி. உன் குழந்தைகள் இரண்டும், ஆண் குழந்தைகளாய் இருந்தால், கணவனிடம் விட்டுவிட்டு, அம்மாவிடம் தஞ்சமடை.
கணவனின் பலவீனப் புள்ளிகளை கண்டுபிடித்து, தாக்குதல் தொடர். மிக விரைவில் உன் கணவன் திருந்தி வருவான் மகளே!

Previous articleகர்பம் அறிகுறிகள்
Next articleபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில் வலிமையுடன் செயல்படுவார்களா?