Home ஆரோக்கியம் தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!

தாம்பத்தியத்துக்கு கர்ப்பம் தடையல்ல!

23

திருமணத்துக்குப் பிறகு தன் மனைவியை வேலையை விடச் சொல்லிவிட்டான் ரகு. இருவரும் வேலைக்குப் போனால் தாம்பத்திய வாழ்க்கை இனிக்காது என்பது அவனது எண்ணம். அவனது மனைவி மீனாவுக்கும் இது புரிந்திருந்தது… வேலையை விட்டு விட்டாள். கணவனின் மனம் கோணாமல் நடந்து கொண்டாள். சந்தோஷமான நாட்கள் உருண்டோடின. ஒருநாள் ‘தலை சுற்றுகிறது’ என்றாள் மீனா. அவளை டாக்டரிடம் அழைத்துப் போனான் ரகு. மீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார் டாக்டர். அது இருவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தந்த தருணம். குதூகலத்தோடு வீடு திரும்பினார்கள். அந்த மகிழ்ச்சியை குலைத்துப் போட்டது ஒரு சந்தேகம்… ‘மனைவி கர்ப்பமாக இருக்கும்போது உறவு கொள்ளலாமா, கூடாதா?’
ரகுவும் மீனாவும் புதுமணத் தம்பதி…

அதிலும் தாம்பத்யத்தில் ருசி கண்ட பூனைகள். கண் எதிரே பாலை வைத்துவிட்டு, ‘குடிக்காதே’ என்றால் எப்படி? டாக்டரிடம் இது பற்றி கேட்கலாம் என்றாலும் இருவருக்கும் அதில் தயக்கம். இவர்கள் மட்டுமல்ல… பெரும்பாலான தம்பதிகளுக்கு எழும் நியாயமான கேள்வி இது. ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ? மனைவிக்கு பிரச்னை ஏற்படுமோ?’ என பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனாலும், பலர் இது பற்றி வெளிப்படையாகப் பேசவோ, மருத்துவரிடம் கருத்துக் கேட்கவோ தயங்குகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்காக சில ஆலோசனைகள்…

கர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்னை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்… அதனால் உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கும். டாக்டரிடம் போனால் உடல் நிலையை ஆராய்ந்து காரணத்தைச் சொல்லிவிடுவார். குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளவர்கள், ஏற்கனவே கருக்கலைப்பு ஆனவர்கள், ‘ஸ்பாட்டிங்’ எனப்படும் உதிரப்போக்கு உள்ளவர்கள், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ‘பிளாசென்டா பிரிவியா’ பிரச்னை உள்ளவர்கள், உதிரப்போக்கு அதிகம் உள்ளவர்கள் ஆகியோர் கர்ப்பமான பின் கலவியில் ஈடுபடக் கூடாது. கணவருக்கு பிறப்புறுப்பில் கிருமி ஏதாவது இருந்தாலும் கலவி கூடாது. இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்கள் கர்ப்ப காலத்தின் 9வது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை…

உடல் எடையை மனைவியின் வயிற்றில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகமாக ஈடுபடக் கூடாது.
கலவிக்கு முன் ஆணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
எண்ணெய், க்ரீம், ஸ்பிரே போன்ற எந்த செயற்கை லூப்ரிகேஷனையும் பயன்படுத்தக் கூடாது.
வாய்வழித் தூண்டல் வைத்துக் கொள்ளக் கூடாது (ஓரல் ஜெனிடல் செக்ஸ்).

உடலுறவு கொள்ள எளிதான நிலைகள்…

மனைவி முன்னாலும் கணவன் பின்னாலுமாக ஓரமாகப் படுத்துக்கொண்டு இயங்கும் நிலை (சைடு பை சைடு-side by side).

மனைவி கைகளை முன்னால் ஊன்றிக்கொள்ள கணவன் பின்னால் இருந்து இயங்கும் நிலை (ரியர் என்ட்ரி- Rear entry).

மனைவி படுக்கையில் படுத்தபடி இருக்க, கணவன் நின்ற நிலையில் இயங்கும் நிலை (அக்ராஸ் த பெட்-Across The Bed).

இந்த நிலைகளில் மனைவி மீது எடையை அழுத்தாமல் எளிதாக உடலுறவு கொள்ள முடியும். மனைவியின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. மனைவிக்கும் கணவனின் அன்பும் நெருக்கமும் இதன் மூலம் கிடைக்கும். ‘ஆண்கள், மனைவியின் கர்ப்பகாலத்தில்தான் வடிகால் தேடி பாலியல் தொழிலாளிகளிடம் அதிகமாகப் போகிறார்கள்’ என்கிறது இங்கிலாந்தில் நடந்த ஓர் ஆய்வு. அதற்கு அவசியமே இல்லை. செக்ஸ்

வாழ்க்கைக்கு கர்ப்பம் தடையல்ல. தம்பதி விரும்பினால் தாராளமாக ஈடுபடலாம். சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவரிடம் கேட்டு சரி செய்து கொள்ளலாம்… தவறில்லை!

Previous articleமுதலிரவு நாளில் கவனம் செலுத்தவேண்டியவை
Next articleமன்மத களையும் கட்டில் சுகமும்