Home உறவு-காதல் செக்ஸ் உறவுக்கு கணவனா? மனைவியா? பிரச்சினை!!! ஓர் அலசல் II

செக்ஸ் உறவுக்கு கணவனா? மனைவியா? பிரச்சினை!!! ஓர் அலசல் II

23

இல்வாழ்க்கையின் அடிப்படையான உடல் உறவை தெரிந்தோ, தெரியாமலோ, காரணத்துடனோ, காரணமின்றியோ தம்பதியர் பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இந்த அலட்சியம் பல நேரங்களில் குடும்பத்தின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. உறவு மறக்கப்படும் அல்லது மறுக்கப்படும் இல்வாழ்க்கை கொடு நரகமாகிவிடும். இத்தகைய நிலையில் கணவன்-மனைவியிடையே கசப்புணர்வு மேலோங்கும்.

இதோ ஒரு உதாரணக்கதை….

இருபத்தெட்டு வயது நிரம்பிய ஒரு லதாவின் கதை. அவளுடைய கணவர் என்ஜினியராக இருக்கிறார். அவருடைய புரபஷன்ல எப்படி எக்ஸ்பர்ட்டோ, அதுமாதிரி செக்ஸ் விஷயத்திலும் ஸ்பீட் அதிகம். கலகலவென்று பேசி யாரையும் தன் பக்கம் இழுத்திடுவார். அவருக்கு எந்த நேரத்தில் மூட் வரும்னு சொல்ல முடியாது. உடனே லதாவைக் கட்டாயபடுத்துவார். சில சமயங்கள்ல மட்டும் கோ-ஆபரேட் பண்ணுவாள் லதா. பல சந்தர்ப்பங்களில் அவரைத் திட்டி ஒதுக்கிவிடுவாள். அதுக்கு காரணம் அவளுக்கு பெயின் ஜாஸ்தியா இருக்கும் அதை அவளுடைய கணவர் கேர் பண்ண மாட்டார். அந்த எரிச்சலில் அவருடன் செக்ஸ் ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறதை கொஞ்சம் கொஞ்சமாக அவாய்ட் பண்ணினாள். அது லதா லைப்புக்கே டேஞ்சராகி விட்டது.

அவளுடைய பிரண்டு ரேவதி அடிக்கடி லதா வீட்டுக்கு வருவாள். அவளும் கலகலப்பா பேசுவாள். லதா ஹஸ்பண்டுக்கு அவளை அறிமுகம் செய்து வத்தாள். அவளுடைய ஹஸ்பண்டும், ரேவதியும் எல்லா சப்ஜெக்ட்டும் பேசுவாங்க. ஆனால் லதாவுக்கு புரியாது. லதவுக்கு தெரியாமலேயே ரேவதியும் அவள் ஹஸ்பண்டும் நெருங்கிட்டாங்க. வெளியே தனியாக ஹோட்டல் போய் வந்திருக்காங்க. திடீர்னு அவள் கணவரும் அவளை போர்ஸ் பண்றதில்லை. செக்ஸ் ரிலேஷனும் வைக்கவில்லை. அப்பாடி….. தொல்லை விட்டுப் போச்சுன்னு சந்தோஷப்பட்டு நிம்மதியாக இருந்தால் லதா. ஒரு நாள் ரேவதி வீட்டுக்கு போனாள் லதா. கதவும் திறந்தே இருந்தது. ரேவதியை கூப்பிட்டுக் கொண்டே பெட்ரூம் பக்கம் போனாள். அங்கே சிரிப்பு சத்தம் கேட்டது. லேசாக திறந்த ஜன்னல் வழியா பார்த்தாள் அங்கே லதாவின் ஹஸ்பண்டும், ரேவதியும் அவள் கற்பனை பண்ணமுடியாத ஒரு ஆக்ஷன்ல ஈடுபட்டிருந்தாங்க. வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து கதறி அழுதாள் லதா. இனியும் அவர் கூட வாழக்கூடாதுன்னு அவள் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போய்விட்டாள் லதா. அவளுடைய கணவர் ராமன் மாதிரி, என்னை தவிர வேற யாரையும் நினைச்சு பாக்க மாட்டார்ன்னு நினைச்ச லதாவின் நிலைமை?…. ஸோ……. தன் மனைவியிடம் மறுக்கப்பட்ட செக்ஸ் அவளது தோழி ரேவதியிடம் கிடைத்ததால் அவளுடைய தாவி விட்டார். அவரின் செக்ஸ் ஆசைகளுக்கு ரேவதியும் வளைந்து கொடுத்ததால் இருவரும் வேறு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்களுடைய நட்பு இன்னும் தொடர்கிறது.

பொதுவாக தடம் மாறும் ஆண்களின் மனதை கட்டுபடுத்தும் கடிவாளம் பெண்களின், மனைவியின் கைகளில் இருக்க வேண்டும். செக்ஸ் விஷயத்தில் கணவனின் போக்கை கண்காணித்து உங்கள் பக்கம் இழுத்தால் ஓ.கே. இல்லை!!!.. சில பெண்களோ…. எப்படியோ தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று விட்டுவிட்டால் பெண்களின் லைப்பே அம்பேல். செக்ஸ் ரிலேஷனில் தனது கணவனின் ஆசையை தவிர்ப்பதில், தனது உடல் மனவலியை பொறுத்து கொண்டு கணவன் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்து கொள்ளும் சாமர்த்தியமான பெண்களும் உண்டு. அதே போல், தன் மனைவியின் ஆசையை, தாகத்தை புரிந்து கொள்ளாமல் ஜடமாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் பெண்மையே தடுமாறக்கூடிய சம்பவங்களும் நடக்கிறது….. எனவே கணவர்களும் மனைவிகளும் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள். ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

ஒவ்வொரு கணவன்மார்களும் மனைவியை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் ரகசிய நட்பு தேவைபடாது. அதே போல் மனைவியும் கணவனின் ஆசை, விருப்பம், மற்றும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால்(முக்கியமாக செக்ஸ் விஷயத்தில்) கருத்து வேறுபாடு இருக்காது. மற்றும் கணவர்கள் வேறு உறவை தேடி போக மாட்டார்கள்.