Home பாலியல் சூழ்நிலை மாற்றம் செக்ஸ் உறவை பாதிக்கும்…!!

சூழ்நிலை மாற்றம் செக்ஸ் உறவை பாதிக்கும்…!!

33

தாம்பத்ய உறவில் சந்தோசமாக ஈடுபடமுடியவில்லை என்ற கவலையே பெரும்பாலான தம்பதியர்களை தடுமாறவைக்கும். இதற்குக்காரணம் செக்ஸ் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததே. பருவநிலை மாற்றம் போல மனித வாழ்க்கையில் உடல்ரீதியான மாற்றம், மனரீதியான மாற்றம், சூழ்நிலை மாற்றம், போன்றவை செக்ஸ் வாழ்க்கையை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன.

இயற்கை மாற்றம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் இன்றைய தலைமுறையில் உடல்ரீதியாக எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் 15 வயதில்தான் பெண்குழந்தைகள் பூப்பெய்தினர். ஆனால் இன்றைக்கு சிறுமிகள் 10 வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர்.
நம்முன்னோர்கள் காலத்தில் பதினான்கு முதல் பதினைந்து வயதில் திருமணம் ஆகிவிடும். உடலானது செக்ஸ் உணர்வை உணரும் வயசுல தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு 24 வயதிலும் ஆண்களுக்கு 26 முதல் 31 வயதுக்குபின்னர்தான் திருமணம் நடைபெறுகிறது. செக்ஸ் உணர்வுகள் மாற்றம் ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பின்னர்தான் அவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது. அதுவரைக்கும் பல்வேறு வடிகால்களை அவர்கள் தேடவேண்டியிருக்கிறது. அப்பொழுது செய்யும் தவறுகள் திருமண வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன.

இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் எல்லைத் தாண்டி போக துடிக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கு தடையாக இருக்கிறது. அது கவலையாக, பயமாக மாறி செக்ஸ் உறவு கொள்வதற்கு திருமணம் மூலம் அங்கீகாரம் கிடைக்கும்போது ஏற்கனவே மனதில் உருவான தயக்கம், பய உணர்ச்சி, நம்மால் செக்ஸ் உறவில் ஈடுபட முடியுமா? என்ற தயக்கமே பாலியல் உறவில் முழுமையான ஒத்துழைப்புக்கு தடையாக இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு செக்ஸ் குற்றங்கள், பாலியல் நோய்கள் அதிகமாகிக் கொண்டே போவதால் தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்பட்டு செக்ஸ் உறவுக்கே குட்பை சொல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.

திருமணத்துக்கு முன்பே, அதாவது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பதினைந்து வயதில் செக்ஸ் உணர்வுகள் துளிர் விடுகிறது. அதிலிருந்து திருமணம் ஆகும் வரை தங்களது செக்ஸ் உணர்வை தணித்துக் கொள்வதற்கு சுய இன்பத்தை வடிகாலாக நினைத்து செயல்படுகிறார்கள். டீன் ஏஜ் பெண்கள் பிரி மேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டு கர்ப்பம் அடைகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருமணம் வரைக்கும் ஆணும், பெண்ணும் யாருக்கும் தெரியாமல் சொசைட்டியின் கட்டுபாட்டுக்கு பயந்து ஈடுபடுகிற செக்ஸ் விவகாரங்கள், பின்னர் திருமண வாழ்க்கையில் குற்றஉணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு ஆணோ, பெண்ணோ சமுதாயத்திற்கு மத்தியில் கணவன்-மனைவி அங்கீகாரத்தோடு தாம்பத்ய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் இருவரும் ஏதோ ஒரு குற்றவுணர்வு, மனரீதியான பாதிப்போடு தான் செக்ஸ் உறவில் இணைந்து ஈடுபடுகின்றனர். அதில்தான் பிரச்னையே வருகிறது. திருமணம் வரைக்கும் சந்தோசமாக உறவில் ஈடுபடுவோர் பலரும் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணையை 100 சதவிகிதம் திருப்தி படுத்தமுடியுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் இருவரில் ஒருவரது மனது குற்ற உணர்வு, பயம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருவரின் சந்தோசத்தையும் இழக்க நேரிடுகிறது. தாம்பத்ய உறவில் மகிழ்ச்சிகரமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியாக எதையும் செயல்படுத்த முடியும்.

கணவனும் மனைவியும் ஒருவரையருவர் விரும்பி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு ஈடுபடும் செக்ஸில் தான் முழு சந்தோஷத்தை காண முடியும். முந்தைய தலைமுறையில் செக்ஸ் உறவு என்பது குழந்தை பிறப்பிற்காக மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. செக்ஸ் என்பது மன ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணியாகவும் மாறிவிட்டது. எனவேதான் அதுபற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தன. சுற்றுப்புற சூழலும் நன்றாக இருந்தது. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆயில் பாத் மற்றும் ஜீரண சக்தி அதிகரிப்பதற்கு எளிய மருத்துவ முறைகளை பின்பற்றினார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள இளைஞர்கள் மதுப்பழக்கத்தினாலும், புகைப்பழக்கத்தினால் விவசாயத்தில் இயற்கை உரத்துக்கு பதில் ராசாயன உறங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவற்றை உண்பதன் மூலம் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. விந்தணுக்களின் வீரியம் குறைகின்றன.

தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மனித வாழ்க்கையின் உடல் மாற்றமும், மனரீதியான மாற்றமும் செக்ஸ் உறவை பாதிக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே மாறிவரும் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையை வாழமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

Previous articleபார்ததும் காதல் பத்திக்கிச்சா??
Next articleஇணையதளங்களை பயன்படுத்துவது ‘அதுக்காகத்தான்’!