Home ஆண்கள் விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…

29

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.
ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

Previous articleநீண்ட நேரம் உறவு கொள்ளுதல் எப்படி..?
Next articleஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க! – சிறுநீரக தொற்றுகளும் தீர்வுகளும்