Home ஆரோக்கியம் சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடி தீர்வு

சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடி தீர்வு

27

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும்.
சிலருக்கு மூட்டுகளில் வீக்கம் வந்து வலியும் இருக்கும். இதற்கு புளியம் இலைகளை நன்கு நசுக்கி நீரில் போட்டு நன்கு கொதித்த பின்னர் அந்த பேஸ்ட்டை வீக்கங்களின் மீது பற்றிட்டு வர நீர் குறைந்து வலியும் போகும்.
நன்கு உலர்த்தி பொடி செய்யப்பட்ட பிரண்டை வேர் பொடியுடன் நெய் விட்டு லேகியம் போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை 1 1/4 கிராம் வீதம் காலை மாலை இருவேளை உட்கொண்டு வர நாளடைவில் ஒடிந்து போன எலும்புகள் கூட இணைந்து விடும். முருங்கை கீரை தினசரி உட்கொள்ளும்போது கழுத்துவலி காணாமல் போகும்.
பிரண்டையின் உட்பக்க சதை பகுதியை காயவைத்து பொடித்து, அத்துடன் ஜாதிக்காய் சூரணத்தையும் 10:20 என்ற விகிதத்தில் கலந்து வைத்து கொண்டு மூன்று நாட்கள் காலை, மாலை என 6 வேளை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணம் பெற வாய்ப்பு உண்டு.
காலில் முள் குத்தி அவதிப்படுபவர்கள் முள்ளை அகற்றிய பின்னர், நல்லெண்ணை தடவிய வெற்றிலையை அனலில் வாட்டி சூட்டோடு ஒத்தடம் கொடுத்தால் விஷம் முறிந்து, வலியும் பறந்து போய் விடும்.

Previous articleபெண்களே உங்கள் முன்னழகை எடுப்பாக்க இயற்கை வழிகள்
Next articleகுழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்