Home பாலியல் சுய இன்பம் – இதுவரை வெளிவராத அபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்!

சுய இன்பம் – இதுவரை வெளிவராத அபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்!

34

சுய இன்பம்.’ இதற்கு பேச்சு வழ க்கில் பயங்கரமான பல பெயர் கள் உண்டு. படிக்கிற வயசில் இளைஞர்கள், பெண்கள் பலருக் கு இந்தப் பழக்கம் சுயமாக வந்து விடுகிறது. மிக நீண்ட நெடிய வரலாறு இந்தப் பழக்கத்துக்கு உண்டு. எப்படி செக்ஸைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளனவோ, அதேபோல
சுய இன்பம் பற்றியும் கதை கள் உண்டு.
எல்லோரும் நினைக்கிற மா திரி சுய இன்பம் அனுபவிப்ப து, தப்பானவிஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால், இதைச் சொன்னால் ஏற்றுக் கொள்கிறவர்கள் குறைவு.
சமீபத்தில் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தே ன். இதைப் படித்துவிட்டு ஒரு இ ளைஞர் என் மருத்துவமனைக்கு வந்தார். ‘‘நீங்க சொன்ன விஷய ம் ரொம்ப கரெக்ட்சார்! துணிச்ச லாசொல்லிஇருக்கீங்க’’ என்றார்.
எனக்கு இதைக் கேட்டதில் மகிழ் ச்சி. ‘பரவாயில்லை… நாம் சொ ன்னதை இவர் ஒருத்தராவது சரி யா புரிஞ்சிகிட்டாரே’ என நான் நினைக்கும்போதே அவர்பேசினா ர். ‘‘டாக்டர்! நீங்க ஆபத்தில்லை னு சொன்னாலும் எனக்குப்பயமா இருக்கு. நான் அந்தப் பிரச்னைக்காகதான் சிகிச்சைக்கு வந்தேன். நானும் இதுக்கு அதிகமா அடி மையாயிட்டேன் டாக்டர்! ஏதா வது மருந்து, மாத்திரை கொடு த்துஎன்னைக்காப்பாத்துங்க!’
நான் வெறுத்துப் போனேன். படி த்த வர்கள் என்றில்லை… பல டாக்டர்களேகூட இதை ஒரு நோயாகக் கருதுவதுதான் சோ கமான உண்மை.
பிறப்பு உறுப்பை வலுக்கட்டாயமாகத் தூண்டிவிட்டு இன்பம் பெற முயற்சிப்பதுதான் ‘சுய இன்பம்’ எனப்படுகிறது. இதில் பலருக்கு க் கட்டாயம் விந்தணு வெளியே ற வேண்டும் என்றில்லை… சும் மா சுகம் அனுபவிப்பதே போது ம் என்று நினைப்பார்கள்.
ஆங்கிலத்தில் இதை மாஸ்டர் பேஷன் (masturbation) என்று சொல்கிறார்கள். ‘இது இயற்கைக்கு முரணான செக்ஸ் பழக்கம்’ என முதலில் பிரகடனம் செய்தது மதத்தலைவர்கள். காரணம்… இந்த செயலால் சந்ததி உருவாக வாய்ப்பில்லை என்பது மட்டும் தான்!
சுய இன்பத்துக்கு ‘ஓனானிஸம்’ என இன்னொரு பெயரும் உண்டு. இப்படி பெயர்வரக் காரணம் ஓனான் என்ற யூத மன்னன். ஓனானின் அண்ணன் எர் என்பவர்தான் முதலில் நாட்டை ஆண்டு வந்தார். அவர் அகால மரண மடைந்து விட, ஓனான் முடிசூட்டிக் கொண்டான். அந்தக்கால மரபுப்படி இறந்த மன்னனின் மனைவியுடன் புதிய மன்னர் செக்ஸ் உறவு வைத்து க்கொள்ள வேண்டும். ஆனால், இந் த உறவின் மூலம் மகாராணிக்குப் பிறக்கும் குழந்தை புதிய மன்னரின் வாரிசாகக் கருதப்படாது. இறந்த மன்னரின் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். ஓனான் தனது அழ கான அண்ணி தமருடன் மரபுப்படி உறவு கொண்டான். ஆனால் ‘ இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்து, அது அண்ணனின் வாரி சாக நாட்டை ஆள்வதா?’ என்ற கேள்வி அவ னுக்குள் எழ, வித்தியாசமான ஒரு உத்தியைக் கடைப்பிடித்தான். உறவின் கடைசித் தருணத் தில் விந்தை தரையில் விட்டுவிடுவான். இப்ப டியே அவன் தொடர்ந்து செய்ய, இந்தப் ‘பாவ த்துக்கு’ தண்டனையாக கடவுள் அவனைக் கொ ன்றதாக பைபிள் சொல்கிறது. இத ற்கும் சுய இன்பத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், ‘கருவுறுதலில் முடியாத உறவு ஓனானிஸம்’ என கருதப் பட்டு எல்லாப் பழக்கங்களுக்கும் அந்தப் பெயரையே வைத்து விட்டார்கள்.
பாவமாகவும், இயற்கைக்கு முர ணான பழக்கமாகவும் கருதப்படு ம் சுய இன்பத்தை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள்? கடந்த ஐ ம்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல செக்ஸ் சர்வேக்கள் அதிர்ச்சி தரும் உண்மைகளை அம்பலப்படு த்தின (பிரபல செக்ஸ் ஆ ராய்ச்சியாளர் கின்ஸி அமெரிக்காவில் எடுத்த சர்வேபடி, ‘ஆண்க ளில் 92 சதவிகிதம் பேரும், பெண்களி ல் 52 சதவிகிதம் பேரும் சுய இன்பத்தை அனுபவிக்கிறா ர்கள்’). ஷியரி ஹைட் என்ற பெண் உளவியல் நிபுணர், 76ம்ஆண்டு அமெரிக்காவி ல் ஒரு சர்வே எடுத்தார். ‘ பெண்களில் 82 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனு பவிக் கிறார்கள்’ என்பது அவரது சர்வே முடிவு. 81ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் எடுக் கப்பட்ட சர்வே ஒன்று, ‘ஆண்களில் 99 சதவிகிதம் பேர் சுய இன் பம் அனுப விக்கிறார்கள்’ என்று தெரிவித்தது.
நம் நாட்டிலும் நிலைமை கிட்ட த்தட்ட இதுதான்! இப்படி உலக ம் முழுக்க பெரும்பான்மை சதவிகிதத்தினர் அனுபவிக்கும் ஒரு பழக்கம்தான் ‘இயற்கை க்கு விரோதமானது’ என முத்தி ரை குத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் வரலாற்றைப் பார்த்தால், வெவ் வேறு காலகட்ட மக்களிடையே இந்தப் பழக்கம் இயல்பான ஒரு கலாசார வெளிப்பாடாக இருந்து உள்ளது புரியும். பழங்கால எகிப்து மக்களின் முதற்கட வுள் ஆடம். சுயம்புவாக உருவான கடவு ள் இவர். இந்த உலகில் முதலில் தோன் றியவர் இவர்தான் என்பது எகிப்தியர்க ளின் நம்பிக்கை. ‘இந்த உலகமே உயிரி னங்கள் எதுவும் இல்லாமல் வெற்றிட மாக அப்போது இருந்தது. அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுய இன்பம் அனுபவிக்க, அவரது உறுப்பிலிருந்து வெளியா ன விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷ§ மற்றும் டெஃப்நட் ஆகிய கடவுளர்கள் தோன்றினர். அப்புறம் அவர்கள் எல்லா உயிரினங்களையும் படைத்தனர்’ என்கின் றன எகிப்திய புராணங்கள்.
‘ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பழங் காலத்தில் சுய இன்பம் அனுபவித்தனர்’ என்கிறது, கிரேக்க சமூகவியல் வரலாறு. ‘ஒலிஸ்பாஸ்’ என்ற பெயரில் செயற்கை ஆண் உறுப்பு இதற்காகக் கடைகளில் விற்றது. திருமணம் மூலமாக செக்ஸ் இன்பம் பெற வாய்ப்பில்லாத நகரத்துப் பெ ண்கள் இதை வாங்கி சுய இன்பம் அனுப விக்கப் பயன்படுத்தினர்.

Previous articleசுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது
Next articleநான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ…’