Home பாலியல் சுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது

சுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது

37

மனித வாழ்க்கையில் மிகமிக மகிழ்ச்சியானது திருமணம். ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைந்து அற்புதமான இன்னொரு உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஆனந்த நிலையைத் தருவது திருமணமே.
இப்படி மகிழ்ச்சியும் ஆனந்தமும் தரும் திருமணத்தை நினைத்து பயப்படு கிறவர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் பயப்படு வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
சுய இன்பம் ஒரு முக்கியக்காரணம். விடலைப் பருவத்தை கடக்கும் சூழலில் 95 சதவிகித டீன் ஏஜ் பருவ ஆண்களை சுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது. இதில் அதிக ஆர்வம் அடையும் போது இயல்பாகவே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
அதையே நினைத்து உண்ணாமலும், உறங்காமலும் இருந்து உடலை பலகீன மாக்கிக் கொள்கிறார்கள். தான் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் தனது பிறப்பு உறுப்பு விரைப்புத் தன்மையை எளிதிலே இழந்துவிட்டது. ஆண்மைக் குறைவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மனைவியை திருப்திபடுத்த முடியாது- என கவலையடைகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களில் சிலர், தங்களால் பெண்ணை திருப்திபடுத்த முடி கிறதா? என்பதை பரிசோதிப்பதற்காக விலை மகளிரைத் தேடிச் செல்கிறார்கள். அப்போது தவறான செயலில் ஈடுபடுகிறோம் என்ற பயமும், அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற கவலையும், புதிய இடமும், மோசமான சூழ்நிலையும் விலைமகளின் அணுகு முறையும் அங்கே திருப்தியான உடல் உறவு அமையாத சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
அந்த இளைஞன் அவசர கதியில் தோல்வியுடன் திரும்பிவிடுவான். அதனால் மேலும் குழப்பத்திற்கு ஆளாகி தன்னால் மனைவியை திருப்திபடுத்தவே முடியாது என்ற முடிவுக்கு வந்து திருமணத்தையே தள்ளிப்போட்டுவிடுகிறான்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. விலை மகளிரோடு உறவு கொண்டதால் எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது பால்வினை நோய்களாவது வந்திருக்கும் என்ற பயமும் அவர்களை வாட்டுகிறது.
சிலர் தங்கள் உறுப்பு சிறுத்துப் போய் விட்டது என்றும் நீளம் குறைவாக இருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எல்லா பிரச்சினைகளுமே தீர்வுக்குரியதுதான். இந்த பிரச்சினைகளை யெல்லாம் அறிகுறிகள் மூலமும் பரிசோதனைகள் மூலமும் கண்டறிந்து நவீன சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் மூலம் சரிசெய்துவிடலாம்.
பொதுவாக செக்ஸ் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பலரும் தேடுவதில்லை. அதைப் பற்றி தகுதியான மருத்துவர்களிடம் சரியான ஆலோசனை பெறுவதும் இல்லை. தனது செக்ஸ் பிரச்சினைகளைப் பற்றி பேசவே தயக்கம் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் செக்ஸ் மருத்துவம் பற்றிய விளம்பரங்களை யெல்லாம் படிக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்களில் அடிக்கடி படுவது போலியான விளம்பரங்கள். அந்த விளம் பரங்கள் அவர்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பயப்படுத்துகின்றன. அதே நேரத்தில் செக்ஸ் பிரச்சினைகள் கொண்டவர்களை தூண்டில் போட்டு இழுக்கவும் செய்கின்றன. அந்த போலிகளிடம் சிகிச்சை பெறும் பலரும் எதிர் விளைவுகளையே சந்திக்கிறார்கள்,
செக்ஸ் பிரச்சினைகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இருக்கிறது. பெண்களும் சுய இன்பப் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். வேறு சில மறை முகப் பிரச்சினைகளும் அவர்களுக்கு இருக்கின்றன.
பெண்களில் பலரும் தங்களுக்கு சினிமா நடிகைகளைப் போல பெருத்த மார்பகம் இல்லையே.. மார்பகம் அமையாததால் கணவர் திருப்தி அடைய மாட்டாரோ, குழந்தைக்குப் பால் தர முடியாமல் போய்விடுமோ என்றெல் லாம் குறைபடுகிறார்கள். ஒல்லியாக இருந்தால் குழந்தை தங்குமா? என்ற கவலையும், குண்டாக இருந்தால் கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
தவிர மாத விலக்கு, வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சினைகளால் இல்லறத்தில் ஈடுபட முடியாதோ என்ற கவலைகள் வருகின்றன. இவைகளை யெல்லாம் இனியும் மனதிற்குள் பூட்டி வைக்க வேண்டியதில்லை. செக்ஸ் ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் மேரிட்டல் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலம் சரிசெய்துகொள்ளலாம்..

Previous articleஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள்
Next articleசுய இன்பம் – இதுவரை வெளிவராத அபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்!