Home பெண்கள் தாய்மை நலம் x doctors சிசேரியனுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க…

x doctors சிசேரியனுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க…

32

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் மீண்டும் தங்கள் பழைய உடலமைப்பை பெறுவதற்கு பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால் அவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடும்முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்

அடிவயிற்றைக் குறைக்க உடற்பயிற்சி செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிக அளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் கொடுத்தால், அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களின் பாதிப்பு அதிகமாகிவிடும்.

சிசேரியன் பிரசவத்திற்கு பின் ஜாகிங் பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும். அதனால் ஜாகிங்கை தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் வாக்கிங்கில் அதிக கவனம் செலுத்தலாம்.

பளு தூக்கும் பயிற்சியை சிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கிவிடும்.

சிசேரியன் செய்தபின் கால்களைத் தூக்கும் பயிற்சியை செய்யக்கூடாது. ஏனெனில் அந்த பயிற்சியில் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், அது தையல் போடப்பட்ட இடத்தில் உள்ள இணைப்புத் திசுக்களுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

Previous articleXtamilx doctor அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை
Next articleTamil Couple 2017பெண்கள் தங்களைவிட வயது குறைவான ஆண்களை விரும்பக் காரணம் என்னவென்று தெரியுமா?…