Home சமையல் குறிப்புகள் கொத்து பரோட்டா

கொத்து பரோட்டா

24

தேவையான பொருட்கள்
பரோட்டா – 6
முட்டை – 4
வெங்காயம் – 1
தக்காளி – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா – 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

Previous articleசிம்பு-நயன்தாராவின் ‘இது நம்ம ஆளு ‘காதலர் தின காமெடி வீடியோ
Next articleபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்!