Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!

குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க!

18

இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால இருக்க முடியாது என்று கூறுவதும், 3 வயது படிக்கும் பெண்ணிற்கு ஐலவ்யூ என்று எழுதி ராக்கெட் விடுவதும் இன்றைக்கு சகஜமாகிவிட்டது. காரணம் ஹார்மோன்களின் வேகம்தான். ஆனால் டீன் ஏஜ் பருவத்திற்கு முந்தைய அதாவது 11, 12 வயதில் பாலியல் உணர்வு ஏற்படுவது இயற்கையானதுதான் என்கின்றனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்கள்.

இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் நண்பர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் கட்டித்தழுவுதல் முத்தமிடுதல் போன்றவை இன்றைக்கு சகஜமாகிவருகிறது. இதனை ஓரினச்சேர்க்கையாக நினைக்கக் கூடாது என்று கூறும் நிபுணர்கள் அதேசமயம்

வயதில் மூத்த அண்ணன், மாமா, சித்தப்பா போன்றோர்கள் மூலம் இந்த வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தூண்டுதல்கள் நிகழலாம் என்கின்றனர்.
சிலருக்கு முத்தமிடுதல், தழுவுதல் போன்றவைகளினால் பாலியல் உணர்வுகள் தூண்டப்படலாம். எனவே தங்களுக்கு நேரும் சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கூட பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

சாதாரணமாக முத்தமிடுவது வேறு பாலியல் உணர்வுகளை தூண்டுவதைப் போல முத்தமிடுவது வேறு எனவே உங்களின் குழந்தைகளுக்கு சரியான தொடுகை, தவறான தொடுகை என்ன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேநேரம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்கவேண்டும் என்றும், அவர்களின் சிக்கல்களை தீர்க்க முயற்சி செய்யவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

13 வயதிற்குட்பட்ட 10ல் 8 குழந்தைகள் இப்பொழுது பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகின்றனர். குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்வது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று கூறும் நிபுணர்கள், இது போன்ற தொந்தரவுக்கு உங்கள் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மூலம் அவர்களின் அச்சத்தை தீர்க்க முயலவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Previous articleகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு
Next articleதிருமணம் ஆனவர்கள் மட்டுமே இந்த பதிவை படிக்க வேண்டும்