Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை

22

இரண்டாவது மூன்று மாதங்களே தாய்மைக்காலத்தின் இரண்டாம் பருவம். உங்கள்குட்டிச் செல்லம் படிப்படியாக வயிற்றுக்குள் வளர ஆரம்பித்து விட்டது.
* 13 & 16 வாரங்களில் குழந்தை 10 செ.மீ வரை வளர்கிறது. 15&வது வாரத்தில் புருவங்களும் தலையில் முடியும் தோன்றுகிறது.
* 17 & 20 வாரங்களில் உங்கள் செல்லம் அகலமாக விரித்த உள்ளங்கை அளவுஇருக்கும். தாயின் வயிறு நன்றாக மேடிட்டிருக்கும். அடிவயிறுபெருத்திருக்கும். குழந்தை மெல்ல அசைய ஆரம்பிக்கும். அந்த அசைவுகள் மூலம்இதுவரை நம் உணர்வில் வளர்ந்த கனவை குழந்தை தொட்டுப்பார்க்கிறது. மீண்டும் எப்போது அசையும் என மனம் அலைய ஆரம்பித்து விடும்!
* 20 வாரங்களில் கருவறையின் முகடு தொப்புளைத் தொடுகிறது. அதன் பிறகு வாரத்திற்கு 2 1/2 செ.மீ அளவிற்கு வளர ஆரம்பிக்கும்.
* 21 & 24 வாரங்களில் உடல் பருத்து தோல் சுருங்கிய நிலையில் இருக்கும்.இப்போது உங்கள் செல்லத்தின் உடல் பிறக்கும் போது இருப்பது போலவே இருக்கும்.இந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் குழந்தை சுறுசுறுப்பாகஅசையும். மற்ற நேரங்களில்அமைதியாக இருக்கும்.
* 25 & 28 வாரத்தில் உங்கள் செல்லம் கண்களைத் திறந்து தான்வாழ்ந்து கொண்டிருக்கும் தண்ணீர் உலகத்தைப் பார்க்கிறது. கண்களை திறந்து, மூடத் தெரிந்து கொள்கிறது. உடலில் கொழுப்பு சேர்ந்து உருண்டை வடிவமாகும்.மூளைத்திசுவின் அளவு அதிகரிக்கும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்
* குழந்தை ஓரளவு வளர்ந்து விட்டதால் வயிற்றில் இட நெருக்கடி ஏற்படும்.கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விட்டாற்போல தோன்றும். இதனால் பல முறைகொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்துக் கொள்ளவும். அதிக காரம் மற்றும் எண்ணெயில்பொரித்த உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.
* உங்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் குழந்தையையும்பாதிக்கும். அதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவேண்டும். அதற்கு தகுந்த படியே எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.குழந்தை வளர வயிறு பெருகி, முதுகுத்தண்டு வளைந்து, முதுகுத்தண்டைதாங்கியிருக்கும் தசைகள் தளர்வடையும். இதனால் அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும்.
* இச்சமயத்தில் மலச்சிக்கல் ஏற்பட்டால் நார்ச்சத்துள்ள உணவுடன் தண்ணீர் நிறைய குடிக்கவும்.
* வயிறு பெருகி உங்கள் குட்டிச்செல்லம் அசைவதால் தளர்வான பருத்தி உடை அணிந்தால் இதமாக இருக்கும்.
* கால்சியம் குறைபாடினால் கால் சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.இதைத் தவிர்க்க கால்சியம் சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளவும்.
* காலை மற்றும் மாலை நேரத்தில் கால் வீங்கியிருக்கலாம். பயந்துவிடவேண்டாம். கால்களைத் தூக்கி உயரமாக வைத்து சிறிது நேரம் ஓய்வெடுத்தால்போதும்.
* சத்து மாத்திரைகளுடன் உணவில் கீரை, வெல்லம், பேரிச்சை, சோயா பீன்ஸ், முட்டை, பால் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வதால் உங்களுக்குஏற்படும் சத்துக்குறைவு உங்கள் செல்லத்தின் வளர்ச்சியைப் பாதிப்பதைதடுக்கலாம்.

கர்ப்ப கால மன நலம்
* பெரும்பாலான கர்ப்பங்கள் திட்டமிடாமல் உருவாகிறது. இதனால் இந்த குழந்தைவேண்டாம் என்பது போன்ற எண்ணம் தாய் மனதில் இருந்தால், பிறந்த பின்குழந்தையிடம் Ôதான் யாருக்குமே வேண்டாம்Õ என்கிற உணர்வு ஏற்படும்.
* குழந்தை வயிற்றில் உருவான உடன் தாய், தந்தை, குழந்தை எனமூவருக்குமான தொடர்பு ஏற்படுகிறது. அறிவியல் பூர்வமாக இந்த தொடர்பை விளக்கமுடியாமல் போனாலும் மனரீதியாக உணர முடியும்.
* புகை பிடித்தல்மற்றும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களால் மன ரீதியாக நிம்மதியாகஇருக்க முடியாது. இவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் குழந்தையின் மூளைவளர்ச்சியில் குறைபாட்டைஏற்படுத்தும்.
* முதல் மூன்று மாதங்களில் இருக்கும் தாயின் சிந்தனை குழந்தைக்கும்செல்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அந்த குழந்தையின் மீதான அன்பைசிந்தனையில் வெளிப்படுத்த வேண்டும்.
* தாய்மைக்காலத்தில் தாய்அப்செட்டாக இருந்தால் குழந்தை பிறந்த பின் அதே போல இருக்கும். தாயிடம் உள்ளகுணம் அப்படியே குழந்தைக்கு பதிவாகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.
* குழந்தை புற உலக ஒலிகளை உணரும் தன்மை உடையது. இதனால் இதமான இசை, தந்தையின் குரல் ஆகியவற்றைக் கேட்பது குழந்தைக்கு நல்லது. தாய்அமைதியாகவும் இதமான சூழலில் இருக்கும் போதும், பிறந்த பின் அந்தகுழந்தைகளுக்கு கெட்ட பழக்கங்கள் வருவதில்லை.
* அதிரடி சினிமாவில் கேட்கும் ஒலி, விகாரமான படங்களை பார்த்தல்ஆகியவற்றால் தாயின் மனதில் ஏற்படும் சிந்தனையை குழந்தை உள்வாங்குகிறது.இதனால் இதமான இசையுடன் அழகிய மொட்டுகள், குழந்தை படங்களை அறையில்வைத்திருக்கலாம்.
* கர்ப்ப காலத்தில் ஏற்படும் டென்ஷனே வாந்தி போன்ற பிரச்னைஏற்படுவதற்குக் காரணம். இதனால் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். சூழலைஉங்கள் ரசனைக்கு தகுந்தாற்போல மாற்றியமைத்துக் கொள்ளவும்.
* சூடான தண்ணீரில் குளிப்பது சோர்வை நீக்கும். தளர்வான உடை நல்லது. நல்லவாசனையுடைய பவுடர், வாய்க்குப் பிடித்த சுவை என உங்கள் அனைத்துவிருப்பங்களுக்கும்முக்கியத்துவம் கொடுங்கள்.
* குழந்தை வயிற்றில் வளர்வது பற்றிய பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஹார்மோன்மாற்றங்களால் ஏற்படும் டென்ஷனை சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
* குழந்தை வளரும் போது ஆணா பெண்ணா என்கிற ஆவல் இருப்பதில் தவறில்லை. ஆனால், இது ஆண்தான் அல்லது பெண்தான் என நம்பி அந்த கற்பனையிலேயே இருப்பதும் தவறு.ஆண் என்று நினைத்திருந்து குழந்தை பெண்ணாக பிறந்தால் வளரும் பொழுதில்அவர்கள் தன் பால்நிலையை புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும்.
* கூட்டுக்குடும்ப முறை இப்போது குறைந்து விட்டது. கணவன், மனைவி & இருவரும் வேலைக்குப் போகின்றனர். இதனால் கர்ப்ப காலத்தில் உடல்நலம்பேணுவதில் கூடுதல் அக்கறை வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள்குறித்த தெளிவை மனதில் ஏற்படுத்திக்கொள்வதும் அவசியம். தாய்மை காலத்தில்உங்களோடு உடனிருக்கும் இன்னொரு ஜீவன்தான் குழந்தை. எனவே உங்களுக்குஉடல்நலத்தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

Previous articleபூக்கள் தரும் புது அழகு!
Next articleதேவையற்ற‍ முடியை நீக்க. ஷேவிங்கைவிட வேக்சிங்கே சிறந்தது ஏன்?