Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணி மனைவியை கவனமாய் கையாளுங்கள் !

கர்ப்பிணி மனைவியை கவனமாய் கையாளுங்கள் !

48

கர்ப்பகாலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பதுதான் மகப்பேறு மருத்துவர்களிடம் கர்ப்பிணிப் பெண்கள் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி. ஏனெனில் அந்த நேரத்தில் கர்ப்பிணிகளின் மனது கணவனின் அருகாமைக்காக ஏங்கும் எனவேதான் அந்த கேள்வியை பெரும்பாலான பெண்கள் மருத்துவர்களிடம் கேட்கின்றனர்.

 

பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை பெண்ணுக்குள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்படுத்தும் எனவே அந்த நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந்தையின் நலனில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக கலந்து பேசி உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகவேண்டும். வயிற்றில் குழந்தை இருப்பதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உறவில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் மூன்று பருவநிலைகளில் முதல், இறுதி நிலைகளில் உறவில் ஈடுபடுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். முதல் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சி குறைவான அளவே இருக்கும். வாந்தி, தலைச்சுற்றல் போன்றவைகளினால் பெண்கள் அதிக சோர்வோடு காணப்படுவார்கள். எனவே அப்பொழுது உறவில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதேபோல் மூன்றாவது பருவத்தில் பிரவசத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முதுகுவலி, கால்வலி போன்றவை ஏற்படும் அந்த சமயத்தில் உறவில் ஈடுபடுவதும் குழந்தைக்குப் பாதுகாப்பானதல்ல என்கின்றனர். நான்கு முதல் 7 மாதம் வரையில் பாதுகாப்பான முறையில் உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பகாலத்தில் சிரமமான பொஸிசன்களை தவிர்க்கவும். எளிதான வலி ஏற்படாத பொஸிசன்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான அரவணைப்பும், முத்தங்களும் கூட சில சமயங்களில் கர்ப்பிணிப்பெண்ணுக்குப் போதுமானதாக இருக்கும் என்கின்றனர். எனவே சிரமம் தராத தொடுகையையும், கணவரின் அருகாமையையும் மட்டுமே எதிர்பார்க்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதுமாதிரி நேரங்களில் மனைவியை கவனமாய் கையாளவேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு சில சமயங்களில் அசதியும் சோர்வும் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஓய்வு நிலையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் கர்ப்பிணி மனைவியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Previous articleஆண்குறி பெரிதாக்கும் செய்முறை வீடியோ[Encore Vacuum Erection Device – Instructional Video]
Next articleவருடத்தில் 156 முறை செக்ஸ்!: இது நியூயார்க் சர்வே