Home பாலியல் ஆரோக்கியமான செக்ஸ் ஏற்படுத்தும் நன்மை.

ஆரோக்கியமான செக்ஸ் ஏற்படுத்தும் நன்மை.

33

ஆரோக்கியமான செக்ஸ் சிறந்த வலிநிவாரணி என்று நிபுணர்கள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மனஅழுத்தம், உடல் வலி, தலைவலி என நோய்களைப் போக்கும் சர்வரோக நிவாரணியாய் திகழ்கிறது என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள்.
தம்பதியர் இடையேயான புரிதலும் உறவின் போதான அந்நியோன்னியமான தொடுதலும் அப்போது சுரக்கும் ஹார்மோன்களும் தான் இந்த வலிகளை போக்கும் அருமருந்தாக திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்…
மனஅழுத்தம் போக்கும்
இன்றைய வாழ்க்கைச்சூழலில் பலரையும் அவதிக்குள்ளாக்கி வருவது மனஅழுத்தம். வேலை, குடும்பப்பிரச்சினை மற்றும் இன்னபிற பல்வேறு பிரச்சினைகளால் உண்டாகும் மன உளைச்சலும், மன அழுத்தமும் செக்ஸ் உறவின் மூலம் குறைக்கப்பட்டு ரிலாக்ஸான உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனஅழுத்தம் குறைவதன் மூலம் உடலும் ஆரோக்கிமடைகிறது.
சரியான பொசிஷன்
ஸ்பூனிங் பொசிஷன் எளிதானது, அது மனஅழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சீராக்குகிறதாம். எனவே காலை நேரத்தில் ஸ்பூனிங் பொசிஷன் உறவுக்கு சரியானது என்கின்றனர் நிபுணர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி
செக்ஸ் உறவின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது. இதனால் நோய்கள் எளிதில் தாக்காமல் காக்கப்படலாம் தப்பிக்கலாம். தலைவலி, சளி என தாக்கினாலும் உடனடியாக சரியாகிவிடுமாம்.
உடல் உறுதியாகும்
செக்ஸ் குறிப்பாக இதய தசைகளை பலப்படுத்தும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு செக்ஸ் உறவுமுறைகளை பொருத்து கை, கால்கள், பின்புறத்தசைகள், மார்பு என உடலின் பல்வேறு பகுதிகளும் செக்ஸ் உறவின் மூலம் உறுதிப்படுகிறது.
இளமை புதுமை
முகத்தை பொலிவாக்கி இளமையை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கான ஹார்மோன் சுரக்கிறது. உறவுக்கு முன்பும், பின்பும் விளையாடப்படும் விளையாட்டுக்கள், கொஞ்சல்கள், சீண்டல்கள்தான் இளமையாக்கும் ஹார்மோன்களை சுரக்கிறதாம்.
கட்டிப்பிடி வைத்தியம்
படுக்கையறையில் மட்டும்தான் என்றில்லை. தம்பதிகள் தங்களின் தனியாக சந்தர்ப்பங்களில் அடிக்கடி கட்டிப்பிடிப்பதும் கூட உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
புற்றுநோயை தடுக்கும்
செக்ஸ் பெரும்பாலும் ஆண்களுக்கு வயதானபிறகு வரும் நோய் புரஸ்டேட் கேன்சரை தடுக்கிறதாம். இது பலகட்ட ஆய்வுகளுக்குப்பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவயதில் அதிகமான முறை உடலுறவு கொள்பவர்களுக்கு வயதானபிறகு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
வலிநிவாரணம் தரும் ஆர்கஸம்
உறவின் போதான உச்சநிலையே உடல்வலிகளை போக்கும் வலிநிவாரணியாக திகழ்கிறது. முதுகுவலி, மைக்ரேன், மூட்டுவலி, போன்றவைகளுக்கு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை விட உங்கள் துணையோடு ஆரோக்கியமான கலவியில் ஈடுபடுங்கள் வலி பறந்து போய்விடுமாம்.
ஆரோக்கியமான உறவு
செக்ஸை வெறும் காமமாக மட்டுமே பார்த்து அளவுகோலை கடைபிடிப்பதைவிட, துணையை காதலோடு அணுகினால் மகிழ்ச்சியோடு ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்தான் உடல் வலியை போக்குவதோடு, ஆரோக்கியத்திற்கும் வலிவகுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்….!

Previous articleஇவ ஏன் திடீர்னு நம்மை விட்டு விலகுறா..? என்ன காரணம் என்று தெரியலையா..?
Next articleசெக்ஸ் உறவின் முக்கியமான பகுதி.!