Home அந்தரங்கம் எப்படி கிஸ் அடித்தால் கிக் அதிகம்…

எப்படி கிஸ் அடித்தால் கிக் அதிகம்…

39

திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, உங்கள் காதலி எப்போதும் உங்களுக்கு முத்தம் தர தயாராக இருப்பார்கள். அதில் ஆண், பெண் இருவருக்குமே பேரானந்தம் தான்.

முத்தமெல்லாம் சரி தான். ஆனால் முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முத்தமிடுவது மட்டும் பெரிய விஷயமல்ல. முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி பிடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கு காரணம் அதுவே உங்கள் ஆண்மையை வெளிப்படுத்தும். பெண்களை பொறுத்தவரையில், முத்தமிடும் போது, ஆணின் கைகள் அவர்களை அரவணைத்த படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதனால் எப்படி முத்தமிட வேண்டும் என்பதோடு அப்போது எங்கே இறுகப் பற்றியிருக்க வேண்டும் என்றும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கழுத்து என்பது உணர்வுமிக்க உடற்பகுதியாகும். அதனால் முத்தமிடும் போது, கழுத்தை திடமாக பிடித்துக் கொண்டால், இன்னும் வேண்டும் என்று அவர்கள் உங்களுக்கு சிக்னல் கொடுப்பார்கள்.

அதேபோல, உங்கள் வலுவான விரல்களை அவர் உணர, முத்தமிடும் போது, அவர் கூந்தலை உங்கள் விரல்களால் மென்மையாக வருடுங்கள். முத்தமிடும் போது காதலியை பிடித்து கொள்ள இதுவும் ஒரு சிறந்த இடமாகும்.

பல ஆண்களுக்கு பெண்களின் இடையின் மீதே விருப்பம் அதிகமாக இருக்கும். பெண்களை முத்தமிடும் போது, அவர்களின் இடை நெளிவுகளை கவனிக்க மறக்காதீர்கள். அதிலேயே அவர்களுடைய பாதி விருப்பத்தை உங்களால் கண்டுபிடித்துவிட முடியும்.

முத்தமிடும் போது உங்கள் காதலியின் கைகளை பிடித்து உங்கள் ஆண்மையை வெளிப்படுத்துங்கள். அவரின் கைகளை மெதுவாக அழுத்தி, முத்தமிடும் போது அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் இசைவு இருவரையும் சொர்கத்துக்கே கூட்டிப்போகும்.

பெண்ணை முத்தமிடும்போது நாணத்தால் சிவந்த அவர் கன்னத்தை பிடியுங்கள். அவர் கண்களை நோக்கி முத்தமிடுங்கள். அவர் கன்னத்தை பிடித்திருக்கும் போது, திடமான தோரணையில் முகம் இருப்பதால், அவருக்கு அழுத்தமான முத்தத்தை கூட கொடுக்கலாம்.

உங்கள் காதலியின் பின் பக்கம் பெரிதாக உள்ளதா? பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் பின்பக்கத்தை கூட பிடித்துக் கொள்ளலாம். அதையும் பெண்கள் விரும்பத்தான் செய்கிறார்கள்.

உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் முதுகில் விரல்களாலும் நகங்களாலும் லேசாகக் கீறிவிட்டு சிலிர்ப்பை ஏற்படுத்துங்கள். நன்றாக கவனித்தால், அவரின் முதுகு சுகத்தால் நெளிவது உங்களுக்குத் தெரியும்.

Previous articleஅந்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
Next articleபிறப்புறுப்பில் தோன்றும் மருக்களைப் போக்க இயற்கை முறையில் சிறந்த தீர்வுகள்!