Home இரகசியகேள்வி-பதில் என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்து வேன்…’

என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்து வேன்…’

48

5எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவ ரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழை த்துப் போய் விட்டார்.

என் மகன், மகள் பிறந்ததி லிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்த னர். 11 வயது வரை, தாத்தா வின் கண்டிப்பில் வளர்ந்த தால், படிப்பிலும், ஒழுக்கத் திலும், பெற்றோரை மதிக்கவும் செய்தான் என் மகன். ஆனால், 2004ல் இருந்து, அவனுடைய படிப்பு குறை ய தொடங்கியது.
படிக்காத பிள்ளைகளுடன் சேர்ந்து, ஊர் சுற்றி, 10ம் வகுப்பில், குறை வாக மார்க் வாங்கியதால், டிப்ளமா சேர்த்தோம். முதல் வருடம், நன் றாக படித்தான். இரண்டாம் வருடத்திலிருந்து, மீண்டும் கூடா நட்பு.
தினமும் பணம் கேட்டு தொல்லை செய்வான். தினமும் செலவுக்கு குறைந்தது, 100 ரூபாய்; வாரத்திற்கு பெட்ரோலுக்கு, 300 ரூபாய், இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை, 1,000 – 2,000 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்ப்பான்.
அவன் கேட்கும் போது, பணம் கொடுக்க வேண்டும்; இல்லையென் றால், என் மகளையும், என் கணவரையும் அடிக்க வருவான். வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து நொறுக்குவான். வீட்டில் சண்டை இல்லாத நாளே இல்லை.

எவ்வளவு கண்ணீர் வடித்தாலும், கேட்ட பணத்தை வாங்காமல் போக மாட்டான். மூன்று வருடமாக, இது தான் நடக்கிறது. ஆறு மாத மாக, குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறான். எவ்வளவு அன்பாக எடுத்துச் சொன்னாலும், “நான் இப்படித்தான் இருப்பேன். என்னை யாரும் எதுவும் கேட்கக் கூடாது. நான் திருந்தும்போது திருந்து வேன்…’ என்கிறான்.
மகன் இன்னைக்கு திருந்துவான்; நாளைக்கு திருந்துவான் என்று எண்ணி, எண்ணி கவலையுடன் இருக்கிறோம். என் மகனை நல் வழிபடுத்த, எனக்கு நல்ல வழிகளை கூறுங்கள். கவுன்சிலிங் கொடு க்க வேண்டுமென்றால், எங்கே, யாரை போய் பார்க்க வேண்டும் என்ற விவரத்தையும், எங்களுக்கு தெரியப் படுத்தவும்.

எங்கள் சண்டை, நாலு சுவற்றுக்குள் நடக்கிறது. ஆனால், என் அப் பாவிடம் தெரிவித்தால், நாலு தெருவிற்கு தெரியும்படி செய்துவிடு வார். எங்கள் மானமும் போய், மகனின் மானமும் போய், மகன் ஓடி விடுவானோ என்று பயந்த படி இருக்கிறேன்.

அவனுக்கு தண்டனை கொடுக்க விரும்பவில்லை. திருந்துவதற்கு கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என்று விரும்புகிறோம். தினமும் அவன் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், திருடனாகி விடுவா னோ என்று பயமாக இருக்கிறது.
“பணத்திற்காக எதையும் செய்வேன்…’ என்று மிரட்டுகிறான். இந்த நிலைமை நீடித்தால், மகனை இழந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. என் மகனின் வாழ்க்கைக்கு, ஒரு நல்ல வழியை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு,
உன் கடிதம் படித்து விவரமறிந்தேன்.
உன் வீட்டுப் பிரச்னை, பெரும்பாலான பணிக்கு செல்லும் தம்பதியி னர் வீடுகளில் நடப்பது தான். குழந்தைகள் வளர்ப்பை, வீட்டின் மூத் த குடிமக்களிடம் விடுவது, அவர்களின் இருப்பை அங்கீகரிக்கும் செயல் என்றாலும், சில பல பக்க விளைவுகளையும், நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
குழந்தைகள் வளர்ப்பில் தான், குழந்தைகளுக்கும், அதன் பெற் றோருக்கும் பரஸ்பரம் பாசம் மலர்கிறது. பிறந்ததிலிருந்து பதினொ ரு வயது வரை, உன் மகன் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்திருக்கிறான். அதனால், உண்மையான பெற்றோர் மீது, அவனுக்கு அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை இல்லாமல் போயிருக்கலாம்.
சில பெற்றோர், குழந்தைகளை, உண்டு உறைவிடப்பள்ளியில் விட் டு விடுகின்றனர். நீயோ, குழந்தைகளை, தாத்தா – பாட்டியிடம் விட் டு இருக்கிறாய். விடுதி மற்றும் தாத்தா, பாட்டி கண்டிப்பில் வளரும் போது, ஒழுங்காக வளரும் குழந்தைகள், மீண்டும் பெற்றோரின் கட் டுப்பாட்டுக்கு வரும்போது, கலகக்காரர்கள் ஆகின்றனர். ஆயுள் முழுக்க, “நீயா எங்களை வளர்த்த? ஹாஸ்டல்லல்ல விட்ட… தாத் தா, பாட்டி கிட்டல்ல விட்ட… பெற்றோருக்குரிய பொறுப்பை தட்டி க்கழித்த சுயநலவாதி நீ…’ என சொல்லிக் காட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

தண்ணீருக்குள் அமுக்கிய பந்து, அதே சக்தியுடன் நீருக்கு வெளியே பாயும். அதுபோலத் தான் கடும் கண்டிப்புடன் வளரும் குழந்தைகள், அந்த கண்டிப்பிலிருந்து வெளியே வரும்போது, மோசமான நடத் தைக்கு தாவி விடுகின்றன.

தாத்தா – பாட்டி கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறும் போது, உங்கள் மகன் ஆறாம் வகுப்பு படித்திருக்கிறான். ஏழாம் வகுப் பிலிருந்து, பத்தாம் வகுப்பு செல்வதற்குள், அவனுக்கு பல தீய நண்பர்கள் கிடை த்திருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில், நீ, அவனை சரியாக கவனித்து வளர்க்கவில்லை என நம்புகிறேன். மகன், பெற்றோர் உற வு, தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் இருந்திருக்கிறது. பிறந்ததிலிருந்து, 11 வயது வரை குழந்தையை வளர்க்கும், தார்மீக கடமையிலிருந்து தவறியதால், உன் கட்டுப்பாட்டுக்கு வந்த அவனை தட்டி கேட்க முடியாமல் போயிருக்கிறது.
“டிவி’ சினிமா, தீய நண்பர்கள் சேர்க்கை, வயது கோளாறு, பெற் றோரை பழிவாங்கும் வெறி, இவையே உன் மகன் கெட காரணம்.

உன் மகனை திருத்த, என்னென்ன செய்யலாம் என்பதை ஆராய் வோம்.
தாத்தா – பாட்டி முன், மகனை ஆஜர்படுத்தி, மனவேற்றுமைகளை பேசிக் களை. உன் அப்பாவுக்கு தெரிந்தால், நாலு தெருவிற்கு தெரி யும் படி செய்து விடுவாரே என்கிற பயம் தேவை இல்லை. பேரன் விஷயம் என்பதால், ரகசியம் பாதுகாப்பார். மீண்டும் தாத்தா கண்டி ப்பில் படிக்கத் தயாரா என்று மகனைக் கேள்.
பணம் கேட்டு தகராறு செய்யும் மகனுடன் சண்டை போடும் நோக் கம் இல்லாது, இதம் பதமாய் பேசி பார்க்கலாம். தீய நண்பர்களின் பட்டியல் எடுத்து, அவர்களுடன் தனியாக பேசி, அவர்களை உன் மகனிடமிருந்து கத்தரித்து விடலாம்.

உன் மகன் மதிக்கும் ஆசிரியர் யாரையாவது ஒருவரை விட்டு, கவுன்சிலிங் கொடுக்கச் சொல்லலாம். எஜூகேஷன் கவுன்சிலிங் கொடுக்கும் நபரை தேடிப்பிடித்து, உங்கள் மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். டிஅடிக்ஷன் கவுன்சிலிங்கும் கொடுத்து பார்க்கலா ம்.
குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு போய் வா. மகனின் விஷயத்தை முழு நம்பிக்கையுடன் அணுகு. மகன் விஷயத்தை சரி செய்யும் போது, மகளையும் கவனித்துக் கொள். அவளும் தாத்தா – பாட்டி கண்காணிப்பில் வளர்ந்திருக்கிறாள். அதனால், அவளுக்கும் உன் மீது அதிருப்தி ஒளிந்திருக்கக்கூடும். மகளுடன் அதிக நேரம் செலவிடு. மகனையும் – மகளையும், தாத்தா – பாட்டி வீட்டில் விட்டு வளர்த்ததற்கான நியாயங்களை அவளுக்கு உணர்த்து. அவள், அந்த நியாயங்களை அண்ணனுக்கு தனியாக உணர்த்துவாள்.
உன் மகனின் பிரச்னை தற்காலிகமானதே. தீய பழக்க வழக்கங்களி ல் இருந்து விடுபட்டு, நல்ல வேலைக்கு போவான் உன் மகன். உன் னுடைய கேள்வியும், என்னுடைய பதிலும், பணிக்கு செல்லும் பெற் றோர், தங்கள் குழந்தைகளை விடுதியிலோ அல்லது பிறர் கண் காணிப்பிலோ வளர விடுவதை நிறுத்த உதவும் என நம்புகிறேன்.