Home ஆரோக்கியம் பொது மருத்துவம் உறக்கமின்மை நோயைக் குணப்படுத்த : தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர்!

உறக்கமின்மை நோயைக் குணப்படுத்த : தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர்!

16

உறக்கமின்மை நோயை ஆங்கிலத்தில் insomnia என்று குறிப்பிடுகின்றோம். இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பியொன்றை வைத்தியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் தொழிற்பாடு மிகவும் சுலபமானது. இந்தத் தொப்பியோடு இணைந்த பையில் குளிர்ந்த நீர் ஊற்றப்படுகின்றது அல்லது ஐஸ் கட்டிகள் போடப்படுகின்றன. அதை தலையில் அணிந்ததும் அது தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உறக்கத்தை உண்டாக்குகின்றது. மூளை ஓய்வு பெற மறுக்கின்றபோது உறக்கமும் கண்களைத் தழுவ மறுக்கும்.

இது பொதுவான விடயம். மூளை சூடாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே மூளையை குளிர்ச்சியடைய வைத்து ஓய்வு பெறச் செய்வது தான் இந்த தொப்பியின் வேலை. இந்தத் தொப்பியை அணிந்து கொள்வதன் மூலம் insomnia பிரச்சினை உள்ளவர்களும், மற்றவர்களைப் போல் நிம்மதியாகத் துங்கலாம். அமெரிக்க ஆய்வாளர்கள் தான் இந்தத் தொப்பியை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இலட்சக்கணக்கான மக்கள் insomnia பிரச்சினையால் அவஸ்த்தைப் படுகின்றனர்.

இவர்களுள் அநேகமானவர்கள் தூக்க மாத்திரைகளையும் பாவிக்கின்றனர். தூக்க மாத்திரைகள் வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இத்தகையவர்களுக்கு இந்தத் தொப்பி பாதுகாப்பான ஒரு மாற்றீடாக அமையும் என்று நம்பப்படுகின்றது. நெற்றிக்குக் கீழ் இருக்கின்ற மூளைப் பகுதியை இந்தத் தொப்பியின் மூலம் குளிரச் செய்யலாம். அதன் மூலம் அது மூளையை ஓய்வு பெறச் செய்து உறக்கத்தைக் கொண்டு வரும்.

Previous articleமுட்டைகோஸ் – பசலைக் கீரை சப்பாத்தி
Next articleநீண்ட நேரம் உறவு கொள்ளுதல் எப்படி..?