Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பருமனை குறைக்க வேண்டுமா? இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ?

உடல் பருமனை குறைக்க வேண்டுமா? இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ?

23

obesity-17-1479376807உடல் பருமன் எனப்ப்டும் நிலை உங்கள் உடல் நலத்தை பாதிக்கும் அளவிற்கு உடல் எடை கூடிவிட்டதை உணர்த்துகிறது. இந்தப் பிரச்சனையில் உள்ளவர்களின் உடல் எடை அவர்களின் சராசரி எடையை விட 20 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இந்த உடல் பருமன் இதயக் கோளாறுகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது.

உடல் பருமனை எதிர்கொள்ள நாம் முதலில் செய்யவேண்டியது கனிமச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதுதான். எனவே இந்த உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்ள உதவும் உணவுகள் என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

முட்டை : முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்து காணப்படுவதுடன் உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் உண்ணும்போது நல்ல பலனைத் தருகின்றன. காலை சிற்றுண்டியில் இதை சேர்த்துக் கொள்வதால் நீங்கள் உண்ணும் அளவைக் குறைத்து குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உடம்பில் சேருவதை உறுதிசெய்கிறது. நீங்கள் எடைக் குறைக்க திட்டமிட்டிருந்தால் இது ஒரு சிறந்த உணவு.

ஆரஞ்சு : இந்த சுவையான புளிப்புச் சுவையுள்ள பழம் எடையையும் கொழுப்பையும் குறைக்க உதவும். இதில் குவிந்துகிடக்கும் நார்ச்சத்து உங்களை நிறைவாக உணரச் செய்வதால் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும். இந்தப் பழம் நமது வீடுகளில் சர்வ சாதாரணமாக காணப்படுவதோடு உடல் எடை குறையவும் பயன்படுகிறது.

பீன்ஸ் : நமது அன்றாட உணவில் இந்த சுவையான வயிற்றை நிரப்பக் கூடிய பீன்ஸை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதில் அதிக அளவு காணப்படும் நார்ச்சத்து ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் நீண்ட நேரம் நீங்கள் வயிறு நிரம்பியே இருப்பதாக உணர்வீர்கள்.

பாசிப்பருப்பு : உடல் எடையைக் குறைக்க நமது வீடுகளில் அன்றாடம் பயன்படும் பாசிப்பருப்பும் ஒரு மிகச் சிறந்த வழி. இதில் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை உங்களுக்கு நிறைவான உணர்வை அளிக்கும். பாசிப்பருப்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்களைக் கொண்டுள்ளதோடு உடலை அபாயகரமான நோய்களிலில் இருந்து பாதுகாக்க வல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பாசிப்பருப்பு நிச்சயம் ஒரு முக்கிய உணவு

பாதாம் பருப்பு : பாதாம் பருப்புகள் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று. இவை இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைக்கவும் அதிகம் உண்ணும் எண்ணத்தை தடுக்கவும் செய்கிறது. இதில் நிறைந்துள்ள ஃபோலிக் அமிலம், ஆகார நார்ச்சத்துக்கள், புரோட்டீன்கள் ஆகியவை உங்களுக்கு ருசியான நொருக்குத் தீனியாகவும் கூட இருக்கும். உங்களுக்கு ஏதாவது ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் எண்ணம் தோன்றும்போது அதை விடுத்து பாதாமை உண்டால் உடல் கெடாமல் எடையும் குறைக்கலாம்

மஞ்சள் : மஞ்சள் தூவப்படாத என்த ஒரு இந்திய உணவையும் கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கடினம். ஆனால் இந்த மஞ்சள் உங்கள் எடையை குறைக்க உதவும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் காணப்படும் கர்குமின் எனப்படும் உட்பொருள் கொழுப்பு திசுக்களைக் குறைத்து எடையையும் குறைக்க வழிசெய்கிறது.

பனீர் : பனீரை எண்ணை மற்றும் மசாலாக்கள் இல்லாமல் சமைத்தால் அது சிறந்த எடைக் குறைப்பு உணவாக இருக்கும். இதில் நிறைந்துள்ள புரோட்டீன் அதிக உணவு அருந்தாமலேயே உங்களுக்கு வயிறு நிறைவத் தருவதால் நீங்கள் உண்ணும் அளவு குறைந்து கலோரிகளும் குறையும்.

Previous articleஉலகில் முதன்முறையாக மூன்று பெற்றோருக்கு பிறந்த ஒரு குழந்தை
Next articleஉங்கள் கூந்தலை வளம் பெற வைக்கும் பொருட்களை பற்றி தெரியுமா?