Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையை மெய்ண்டைன் பண்னுவதற்கான ரகசியம்!

உடல் எடையை மெய்ண்டைன் பண்னுவதற்கான ரகசியம்!

10

உடல் எடை குறைவதற்கு நீண்ட நாள் எடுக்கும், ஆனால் சில நாட்களிலே எடை அதிகரித்துவிடும். ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான். ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது. அதே சமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.
மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும். உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது.
உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடா உணவுகள் முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சாக்லெட்டுக்கு பதில், கொக்கோ பவுடர் சாப்பிடலாம். அதில் கொழுப்பு குறைவாகத்தான் இருக்கும். சூடான ஓட்மீல் அல்லது கூலான பாதாம் பால் நல்லது!குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு ‘சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது. செரிமானத்திற்கும் நல்லதல்ல. எனவே, உடற்பயிற்சிக்குப் பின் டோஸ்ட் செய்த பிரட் சாப்பிடுவதை விட, பச்சையாகத் சாப்பிடுவது ஓரளவு நல்லது.வெண்ணெய் உடற்பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

Previous articleஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Next articleசேமியா இறால் பிரியாணி!