Home இரகசியகேள்வி-பதில் எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி

எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி

17

என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது.இதனால் பாதிப்பு ஏதும்உண்டா? – எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

அளவுக்கதிக இரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையேஇல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படிகட்டி, கட்டியாகஇரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படிஇருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமேகுணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்படவாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக்அமிலம், வைட்டமின் ஏபோன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்படவேண்டிய அவசியமில்லை.

என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாகமாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்புவந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும். – தேவி, வளவனூர்.

மாரடைப்புக்கும், இல்லறவாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை.இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின்காரணமாக, இயல்பான உணர்வுகளைக்கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அதுமாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்குவடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருதயக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படிஇயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியானஉங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கணவரின் உணவுவிஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாகஉறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடுசேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்தியஉணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காகசாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால்மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாகஇருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலேபோகவோ கூடும்.

எனக்குத் திருமணமாகிஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவுசெய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? – பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.

நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச்செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள்என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான்இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம்நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போடமாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானேதவிர, நீண்டகாலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளைஉண்டாக்கும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டானபிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தைவேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக்கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தைதங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிறநீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்குஇப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவேமுடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில்செய்யக் கூடிய முடிவில்லை இது.
என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக்குணப்படுத்த முடியுமா? – விஜிலா, நெல்லை.

திடீரென உங்களுக்குஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக்காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள்.உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள்மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப்பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும்தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம்மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில்தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம்சாப்பிடலாம். மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரதுஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்றுசாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒருஆப்பிளும் சாப்பிடவும். இந்தப் பிரச்சினைக்கென்றே பிரத்யேக யோகாசனங்கள் உள்ளன.அவற்றையும் மருத்துவர் அல்லது யோகாசன நிபுணரின் ஆலோ சனையின் பேரில் செய்யலாம்.மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்குமிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை.எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாகசந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப் பழகுங்கள், மருந்தேஉணவு என்ற நிலை ஆபத்தானது.
எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 30. எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி மிக அதிகமாகஇருக்கிறது. இதனாலேயே எனக்கும், என்கணவருக்கும் ஒத்துப் போகாமல் அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். என் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத நாகப்பட்டிணம் வாசகி.

பரம்பரைத் தன்மை, முறையற்றமாதவிலக்குக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், ஹார்மோன்கோளாறு போன்ற ஏதேனும் ஒன்றுதான் இப்படிப்பட்டரோம வளர்ச்சிக்குக் காரணம். செயற்கை மணம் மற்றும் குணம் நிறைந்தஉணவை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இப்படி ஹார்மோன் கோளாறு உண்டாகி, ரோமவளர்ச்சி அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தேவையற்ற ரோமங்களைஅகற்ற வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சைமற்றும் கிளிசரினின் கலவையே வாக்ஸ். இது சருமத்தை பாதிக்காது.கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்காதீர்கள். குளிப்பதற்குசோப்புக்குப் பதிலாக பயத்தம் மாவுஉபயோகிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சளையும்அத்துடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். இத்துடன் எலுமிச்சை சாறுஅல்லது தேன் இரண்டை யும் மாற்றி மாற்றி சேர்த்து புருவங்களில்படாமல் தேய்த்துக்குளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக் கிழங்கு என்று கிடைக்கும்அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், ஆறுமாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒரு முறை உப்பில்லாதவெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறிக் கழுவவும். முகம்பட்டு போலாகும். வீட்டுப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, கணவரிடம்பேசி சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.

Previous articleகுழந்தைகள் இல்லா தம்பதிகள் இரண்டே மாதங்களில் கருத்தரிக்க..!
Next articleபெண்ணுக்குள் இருக்கும் அதிசயங்கள் சில…!!