Home இரகசியகேள்வி-பதில் உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

25

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…

மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.

‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.

அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘ஆட்டத்தில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.

உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.

செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

 

உங்கள் மனைவி, அவரது கணவர் . . .

நான் 30 வயதான ஆண். திருமண மாகி இரண்டு வருடங்கள் ஆகிற து. ஒரு பெண் குழந்தை இருக்கிற து. சந்தோஷமான குடும்பம்.
நான் படித்துக் கொண்டிருக்கும் போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரு ம்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக்கொ ண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில்தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம்.
ஜாதி எங்கள் இருவரையும் பிரித்தது. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிந்து விட்டது. தற்போது, அவளுக்கு இரண்டு குழந் தைகள். சென்ற மாதம் அவளிடமிருந்து கடிதம் வந்தது. அவள், என னை எள்ளளவும் மறக்கவில்லை. அவள் குழந்தைகளுக்கு, முன்பு நாங்கள் வைத்த பெயரையே வைத்திருக்கிறாள். எந்நேரமும் என் னையே நினைத்து, தனிமையில் அழுது கொண்டிருக்கிறாள். வெளி யில் எங்கும் போவதில்லை; சினிமா பார்ப்பதில்லை; புத்தகம் படிப்ப தில்லை. சிறைப்பறவையாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கி றாள்.
அவள்கணவனிடமும், பலமுறை என்னைப்பற்றியே புலம்பி இருக் கிறாள். அவளுடைய நல்லநேரம் அவளுடை ய கணவன் ஒரு தெய்வம்போல. “கல்யாணத் திற்கு முன்பே சொல்லியிருந்தால் நான் உங்க ளை சேர்த்து வச்சிருப்பேன்ல…’ என கூறியிரு க்கிறார். “உடல் மட்டும்தான் உங்களுக்கு; என் மனசு என்னிடம் இல்ல’ன்னு இவளும் சொல் லி இருக்கா. எல்லாவற்றையும் சகித்துக் கொ ண்டிருக்கிற து அந்த தெய்வம்.
நானும், அவளுக்கு கடிதம் எழுதி எவ்வளவோ அறிவுரைகள் கூறினேன்; அவள் கேட்பதாக இல்லை. ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. என் நினைவை அவள் மனதில் இருந்து அகற் றுவது முடியாத காரியம். நானேகூட மறந்துவிட்ட, முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச் சிகளையும் அப்படியே கூறுகிறாள்; முன்பு கடித த்தில் எழுதிய வாச கங்களை அப்படியே சொல்கிறாள்… “என் உடலி லுள்ள ஒவ்வொரு செல்லும் உன் பெயரைத்தான் சொல்லிக்கொ ண்டிருக்கிறது.’ என்கி றாள்.
“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ …’ ன்னாரு கண்ணதாசன். எனக்கு கடைசி வரை உன் நினைவுகள் இருக்கும். உயிர் என்னை விட்டுபிரியும்போதுகூட ” உன் பெயரையே தான் சொல்லிகிட்டிருப்பேன்’ என, எழுதி இருந்தா ள்.
இப்ப சொல்லுங்க… என்ன செய்யலாம்? தங்கள் ஆலோசனைப்படி நான் நடக்க வி ரும்புகிறேன். அந்த பெண் அவள் கணவனு டன் நன்றாக வாழ வேண்டும். என்னைப் பற்றிய நினைவுகளை அவள் மனதிலிருந்து நீக்க வேண்டும். அதற் கு நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு ஒரு நல்ல வழி கூறுங்க ள்.
இப்படிக்கு,
— அன்புத் தம்பி.
அன்பு தம்பி—
உங்கள் கடிதம் கிடைத்தது.
காதலித்தவரையே மணம் முடிப்பது எல்லாருக்கும் அமைவதில் லை. வாழ்க்கை பல விசித்திரமானத் திருப்ப ங்களை உடைய நாடகம். நாம் அந்த நாட கத்தின் கதாபாத்திரங்கள்; அவ்வளவுதான்! முதல் நாள் ராமாயண நாடகத்தில் ஆஞ்ச நேயர் வேஷம் கட்டினவன், அடுத்த நாள் மகாபாரத நாடகத்தில் துச்சாதனன் வேஷம் கட்டலாம்…
அப்போது அந்த வேடத்தை செவ்வனே செய் ய வேண்டுமே அல்லாது, “அய்யோ, நான் கட் டை பிரம்மச்சாரியாக ஆஞ்சநேயர் வேஷம் கட்டியவன்… ஒரு பெண்ணின் புடவையைப் பற்றி இழுக்கமாட்டேன்.’ என, ஒருநல்ல நடிகன் சொல்ல மாட்டான்.
இப்போது உங்கள் விஷயத்துக்கு வருகிறேன்… பருவம் என்ற நாடக த்தில் நீங்களும், நீங்கள் குறிப்பிட்ட பெண்ணும் காதலர்களாக நடி த்தீர்கள். இப்போது காட்சி மாறிவிட்டது. இல்வாழ்க்கை என்ற நாட கத்தில் அவள் இன்னொருவரின் மனைவியாகவும், நீங்கள் வேறொ ருத்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது பழசை நினைத்து மனதை அலை பாய விடக் கூடாது.
பத்து வருடங்களாக ஒருவரை மண ந்து, அவருக்காக இரு குழந்தைகளை யும் பெற்றவள், “உடம்பு தான் உனக்கு. உள்ளம் வேறொருவருக்கு’ என சொ ல்வதே தவறு. யோசித்துப் பாருங்கள்… மனசெல்லாம் எங்கோ இருக்க, கண வனின் பக்கத்தில் படுப்பது, மகத்தான துரோகம் என, நீங்கள் நினைக்க வில்லையா?
அதற்கு ஆரம்பத்திலேயே, அந்தக் கணவரிடம் நடந்ததை சொல்லி, இவள் விலகியிருக்கலாம்.
அவளுக்குத் திருமணமாகி, பல வருடத்திற்குபின்தான் நீங்கள் மணம் புரிந்திருக்கிறீர்கள். அப்போதே விவாகரத்துப் பெற்று, உங்க ளிடம் வந்திருக்கலாம். அதைவிட்டு இப்போது நினைத்து, தானும் குழம்பி, தெளிவாய் இருக்கிற உங்களது வாழ்க்கையையும் அந்தப் பெண் குழப்புவது நியாயமே இல்லை.
இப்போது நீங்கள் இருவர் மட்டும் இல்லை… உங்கள் மனைவி, அவ ரது கணவர், உங்கள் இருவரது குழந்தைகள், உங்கள் இருவரது குடு ம்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி எத்தனை பேருக்கு இதனால் பிரச் னை பாருங்கள்.
மனைவி வேறொருவனை விரும் புகிறாள் என்பது தெரிந்தும், ” இதை முன்னாலேயே சொல்லி இருக் க லாம் இல்லே…’ என அப்பா வித்தன மாய் கூறும் அவளது கணவர். எப் படி தம்பி இதுபோன்ற நல்ல இதயத்துக்கு அவள் துரோகம் நினை க்க முடியும்? அவள் நினைத்தாலும் நீங்கள் நினைக்கக் கூடாது!
இதுபோல, இந்த விஷயம் எதுவுமே தெரியாத உங்கள் மனைவியை யும் எண்ணிப் பாருங்கள்.
சென்றது கனவாகவே இருக்கட்டு ம். இப்போது கையில் இருக்கும் வாழ்க்கையை உண்மையுடன் நேசியுங்கள். அவளிடம், “நாமிரு வரும் காதலித்த குற்றத்துக்காக, நம்மை சுற்றி உள்ள உறவுகளுக் கெல்லாம் தண்டனை தர வேண் டாம்…’ என கூறுங்கள்…
இப்போது ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்தில் முழு கவன த்தையும் செலுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!