Home ஆரோக்கியம் பொது மருத்துவம் உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?

உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?

17

உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல் வெற்றி பெறும் போது நீண்ட தூக்கமும், மனம் வெல்லும் போது தூக்கக் குறைவும் ஏற்படுகிறது.

மனதிடம், ‘ஒரே களைப்பா இருக்கு தூங்குகிறேன்ஸ ப்ளீஸ்ஸ’ என்று, உடல் கெஞ்சுகிறது; ‘முடியாதுஸ படிக்க வேண்டியதும், முடிக்க வேண்டியதும் ஏகப்பட்டது இருக்க, தூக்கம் உனக்கு கேடாஸ’ என, மனது, உடலை கண்டிக்கிறது.

கரைக்கு இழுக்குமாம் யானை; நீருக்குள் இழுக்குமாம் முதலை. இக்கதைதான் பலரது தூக்க விஷயத்திலும் நடக்கிறது. இப்போராட்டத்தில், உடலை வெற்றி பெறவே அனுமதிக்கக் கூடாது.

‘என்ன இப்படிச் சொல்றீங்கஸ இந்த அவசர உலகத்துல வேகம் மிகுந்த வாழ்க்கைக்கு, நம்மால ஈடு கொடுக்க முடியுமா? நமக்கு இருக்கிற ஒரே தீர்வு(!) தூக்கம் தான். இதையும் குறைச்சா மனுஷன் அழிய(!) வேண்டியது தான்ஸ’‘இல்லையில்லைஸ எட்டு மணி நேரம் தூங்கியே ஆகணும்ன்னு மருத்துவர்கள் சொல்றாங்க; இதை மறுத்துப் பேசாம தூங்குங்கஸ’ என்று, தலைமைப் பொறுப்பில் இருப்போரை கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களை, உங்கள் பொறுப்பும், சூழலும் அனுமதிக்கின்றனவா? நன்றாக எட்டு மணி நேரம் உறங்குங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், கோப்புகளில் தூசி படிகிற போதும், ஒரு மனிதரைச் சுற்றி நூலாம்படைகள் தொங்குகிற போதும், கடமைகள் காத்திருக்கிற போதும், தூக்க நேரம் பற்றிய மறுபரிசீலனை அவசியமாகிறது. கடும் பனிக்காலம் முழுவதும் குகைக்குள் படுத்துக் கிடக்கும் பனிக்கரடிகள் போலவும், ஆறு மாதம் உறங்கும் ஆர்விமெலோஸ் என்ற உயிரினம் போலவும், தூக்க வாழ்க்கையை மேற்கொள்வோர், துன்ப வாழ்க்கைக்கு தயாராக வேண்டியது தான்.

தூக்கம் கண்களை அழுத்துகிற போது, கடமைகளை தள்ளிப் போடுவதால் ஏற்படக் கூடிய நஷ்டங்களை எண்ணிப் பார்த்து, துள்ளி எழுந்து, நடமாட வேண்டும். கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். கண்களைத் தூக்கம் அசத்தும் நேரம் சிறு கணமே! அதைக் கடினப்பட்டுக் கடந்து விட்டால், எங்கே போனது உறக்கம் என்று கேட்பீர்கள்.

தூக்கத்திற்கு கண்கள் சொருகுகிற போது, பிடிக்காத, போரடிக்கிற விஷயங்களை ஒதுக்கி வைத்து, பிடித்த செயல்களை மேற்கொள்ள வேண்டும். கடுமையான, சுமையான, சுவாரசியமற்ற பணிகளே தூக்கத்திற்குத் தூண்டுகோல்களாக அமைந்து விடுகின்றன.

பொருளாதாரம், பணம் சார்ந்த விஷயங்களை கையாளத் துவங்கினால், தூக்கம் ஓடியே போய் விடும்.

தியானம் பயின்று, தினமும் பயிற்சி செய்ய ஆரம்பித்தால், தூக்கமின்மையால் ஏற்படும் களைப்பும், அசதியும் பறந்து விடும். 20 நிமிட தியானம், இரண்டு மணி நேரத் தூக்கத்திற்குச் சமம் என்கின்றனர் தியான ஆசிரியர்கள். ஒரு மடங்கு முதலீடு செய்து, ஆறு மடங்குத் திரும்பப் பெறும் இந்த உத்தியை, நாம் ஏன் கையாளக் கூடாது?

கட்டுப்பாடற்ற தூக்கம், தட்டுப்பாடான வாழ்க்கைக்கு வழி வகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை!

Previous articleஇணையத்தில் லட்சுமி மேனனின் ஆபாச படம்; ‘சதி’ என மறுத்த லட்சுமி மேனன்
Next articleவருடத்திற்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்யுங்க