Home இரகசியகேள்வி-பதில் இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

55

தாயை இழந்துள்ள நான், தங்களை அம்மாவாகவே பாவித்து, என் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை யைத் தெரிவித்துள்ளேன். உரிய
ஆறுதல்கூறி, ஆலோசனை வழங்கிடவேண்டுகிறேன்.
என் வயது, 39; என் கணவர் வயது, 43. மகன், கல்லுாரி யிலும், மகள், பள்ளியிலும் படிக்கிறாள். என் கணவர் எனக்கு முறைமாப்பிள்ளை; டாக்டர். நான் டிகிரி படி த்துள்ளேன்.
என் கணவர், என்மீதும், குழந்தைகள்மீதும் அளவு கட ந்த அன்பு, பாசம் வைத்திருந்தவர்தான். என் அண்ண னுக்கு, உறவுக்காரப் பெண்ணை மணமுடித்து வைத்த னர் என் பெற்றோர். அண்ணனுக்கும், ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நான் கள்ளங்கபடமின்றி, என் அண்ண ன் மனைவியை, நாங்கள் எங்கே சென்றாலும் அழைத்துச் செல்வோ ம். என் கணவரும், என் தாயார் வீட் டிற்கு, அத்தை என்ற முறையில் அடிக்கடி செல்வார். அப் போது, என் அண்ணன் மனைவியுடன் பழ கி வந்திருக் கிறார். இதை யாருமே தப்பாக கருதவில்லை. மைத்து னர் மனைவி, தங்கை உறவுதானே என நினைத்திரு ந்தோம்.
என் கணவர் பெருமளவில் பணம் சம்பாதித்திருந்தார். பலவகையிலு ம், என் கணவரிடமிருந்து பணத்தைக் கறந்திருக்கிறா ள்.
இருவருக்கும் தகாத உறவு. என் அண்ணன் மனைவியு ம், என் கணவரும் சேர்ந்து கபட நாடகம் ஆட ஆரம்பித் தனர். அண்ணன் மனைவி, தாய் வீட்டிற்குச் சென்று, என் அண்ணனுடன் வாழ மறுத்து, ‘விவாகரத்து வேண் டும்; இல்லையேல், தற்கொலை செய்து கொள்வேன்…’ என மிரட்டினாள்.
ஊர் ஜமாத்தார்கள், பெரியவர்கள், உறவினர் எல்லாரு ம், கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறியும், என் கண வரை மறுமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், என் அண்ணனுடன் சேர்ந்து வாழ மறுத்தாள். இதனால், வேறு வழியின்றி விவாகரத்தானது.
சமீபத்தில், என் கணவர், என் அண்ணன் மனைவியை பதிவு திருமணம் செய்து கொண்டார். இதை, எங்களா ல் ஜீரணிக்க முடியவில்லை.
ஊரார் தூற்றுவர், எள்ளி நகையாடுவர்; மானம் உயி ரினும் உயர்வு என்பதை மறந்து, மாஜி, என் அண்ண ன் மனைவி, கேவலம் என்று கருதாமல் அடுத்தவள் கணவரை அபகரித்து சந்தோஷமாக வாழ்கிறாள். இத னால், மனம் வெறுத்துப்போன நான், தாம்பத்திய வாழ் க்கையை உதறிவிட்டேன். என் மக்களை வளர்த்து, நல்ல நிலைக்கு கொண்டு வர உறுதி பூண்டுள்ளேன். இஸ்லாத்தில், ‘தற்கொலை கூடாது…’ என்பது விதி.
வாழ்ந்த வாழ்க்கையையும், என் கணவனை அபகரித்த கீழான குணமுள்ள மானங்கெட்டவளையும் நினைத்து நித்திரையின்றி, நிம்மதியின்றி பிடுங்கிப்போட்ட கீரை த்தண்டாக பரிதவிக்கிறேன். என் பரிதாப வாழ்வுக்கு தீர்வு, வடிகால் என்ன? தாயினும் சாலப் பரிந்து, விரை ந்து வழி வகுத்திடுங்கள்.
— இப்படிக்கு,
அன்புள்ள தங்கள் மகள்.
அன்பிற்குரிய மகளுக்கு,
‘பெண்களாகிய அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், ஆண்களாகிய நீங்கள் பெண்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’ என, கணவன் – மனைவியரை பார்த் து இறைவன் கூறுகிறான்.
இறைவன், திருமண உறவை ஆடையுடன் ஒப்பிடுவதி ல் ஒரு சிந்திக்கத்தக்க அம்சம் உள்ளது. ஒரு ஆடை யை நாம் பெறுவதற்கு பாவு மற்றும் ஊடை என்ற இரு பொருட்கள் தேவை. அந்த பாவு, பிரிந்து கிடக்கும் நூ லால் ஆனது. அதை, இணைக்கும் ஊடை என்ற நூல், உள்ளால் ஊடுருவி, தனித்து பிரிந்து கிடந்த பாவை இ ணைத்து, பிரிந்து போகாத ஆடையாக தருகிறது. அதே போல், கணவன் என்ற பாவில், மனைவி என்ற ஊடை இணைத்து, பிணைந்து வாழ்க்கை என்ற ஆடையை நெய்து, மானத்தை மறைத்து காப்பதுபோல, திருமண ம் மனித வாழ்க்கையை செம்மையுற செய்கிறது.
சபல உணர்வால் உன் கணவனும், உன் அண்ணன் ம னைவியும் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளனர். உன் கண வன், உன் அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்டதாக எழுதியிருக்கிறாய். அதற்கு முன் முறை ப்படி உன்னை விவாகரத்து செய்து விட்டானா அல்லது உன் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்து கொ ண்டானா என்பதை, நீ தெளிவாக குறிப்பிடவில்லை. ஆனால், உன் கணவன் உன்னை முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டான் என யூகிக்கிறேன். ‘
‘அல்லாஹ்விடம் ஆகுமானவைகளில் மிகவும் கோப மானது, ‘தலாக்’ தான்…’ என்கிறார் நபிகள் நாயகம். தவறாக திருமண முறிவு பெறும் ஆண்கள், இவ்வுலகி ல் ஆடையில்லாத நிர்வாணர்களாகவும், மறுமையி ல், துணையேயில்லாத தனிமையையும் அனுபவிக்க நேரிடும். உன்னை முறைப்படி விவாகரத்து செய்யாது, அனுமதி பெறாது, உன் கணவன் இரண்டாம் திருமண ம் செய்திருந்தால், அது, ஷரியத் சட்டத்திற்கு முரணா னது. கணவனின் கள்ள உறவை காரணம் காட்டி, ஹா ஜியிடம் முறையிட்டு, ‘பஸ்க்’ எனும் முறையில், நீ உன் கணவனிட மிருந்து விவாகரத்து பெறலாம்.
இஸ்லாமும், நபிகள் நாயகமும், பெண்களுக்கு சம உரிமை வழங்கியுள்ளனர். இஸ்லாம், ஆண்களுக்கு சமமாய், பெண்களை கல்வி கற்க அனுமதிக்கிறது; பெண்களுக்கு சொத்துரிமை வழங்குகிறது; விதவைக ள் திருமணத்தை ஆதரிக்கிறது; கணவன் விவாகரத்து செய்து விட்டால், இத்த காலத்திற்கு பின், மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. விபச்சாரத்திற்கும், கள்ள உறவுக்கும் எதிரானது இஸ்லாம். திருமணத்தி ன் போது, ஆண்கள் வரதட்சணை வாங்குவதை கண்டி க்கிறது. பதிலாக, பெண்களுக்கு திருமண கட்டணத் தை நிர்ணயிக்க கூறுகிறது. ஆனால், பழமைவாதி ஆண்கள், பெண்களுக்குரிய அடிப்படை உரிமைகளை தர மறுக்கின்றனர்.
இஸ்லாமை பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்க் கை ஒப்பந்தம். உன்னிடம் போட்ட ஒப்பந்தத்தை, உன் கணவனும், தன் கணவனிடம் போட்ட ஒப்பந்தத்தை உன் அண்ணன் மனைவியும் கிழித்தெறிந்து விட்டனர். பிரச்ச‌னையில் நீ மட்டும் பாதிக்கப்படவில்லை; உன் அண்ணனும், உங்கள் பிள்ளைகளும்தான் பாதிக்கப்ப ட்டுள்ளனர். உன் அண்ணன் மனைவியை மட்டும் நிந் திக்காதே; நடந்தகுற்றத்தில் சரிபாதி, உன் கணவனு க் கும் உண்டு. இனி, நீ என்ன செய்யவேண்டும் தெரியு மா?
நீயும், உன் அண்ணனும், உங்கள் குழந்தைகளுக்கு யா ராவது மூத்த குடும்ப உறுப்பினரை கார்டியனாக நிய மித்து விட்டு, இருவரும் தகுதியான துணையை தேடி, மறுமணம் செய்து கொள்ளுங்கள். உன் குழந்தைகளு ம், உன் அண்ணன் குழந்தைகளும் உங்களிருவரின் திருமணங்களை தவறாக புரிந்துகொள்ளமாட்டார்கள்.
உங்களிருவரின் திருமணங்கள் உன் மாஜி கணவரை யும், உன் மாஜி அண்ணன் மனைவியையும் மானசீக மாக பழிவாங்கி விடும். இந்த யோசனை பிடிக்கா விட் டால், நீயும், உன் அண்ணனும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து, நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்மாணியுங்கள்.

Previous articleபெண்களின் உள்ளாடை அணியும் பகுதியில் ஏற்படும் தழும்பு பகுதி -வீடியோ
Next articleஎளிதில் தொப்பையை குறைக்க 15 சிறந்த வழிகள்!