Home / இரகசியகேள்வி-பதில் / ஆபாச தளங்களை பார்க்கும் டீன்ஏஜ் பையனை திருத்துவது எப்படி?

ஆபாச தளங்களை பார்க்கும் டீன்ஏஜ் பையனை திருத்துவது எப்படி?

என் மகனுக்குப் பதிமூன்று வயதாகிறது. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கனெக்ஷன் கொடுத்திருக்கிறோம். தனியாக இருக்கும் சமயங்களில் என் மகன் ஆபாசமான சைட்களைப் பார்க்கிறான். அதைத் தெரிந்து கொண்டதிலிருந்து என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ஆபாச சைட்களைப் பார்க்காமல் என் மகனை எப்படித் தடுப்பது?

ஊடகங்கள் பாலியல் தொடர்பான கலவி அறிவையும் செய்முறை விளக்கங்களையும் கொடுத்தாலும் அவற்றுக்குப் போதைய துாண்டும் தன்மையும் உள்ளதால் குழந்தைகள் மறுபடி மறுபடி, அடிக்கடி அடிக்கடி என்று சதா இதே வேளையில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக விடலைப் பருவத்தில் இதை கிளர்ச்சி மயக்கம் என்போம்.

இப்படிப்பட்ட மனச்சிதைவுகள் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் பெற்றவர்கள் செய்ய வேண்டியது.

1. குழந்தைகளை எப்போதுமே பிசியாக இருக்கச் செய்யுங்கள். படிப்பு, விளையாட்டு, வீட்டு வேலை என்று எப்போதும் அவர்கள் மனத்துக்கு ஆரோக்கியமான தீனி போட்டுக்கொண்டே இருங்கள்.

2. அவர்களுடன் தோழமை பாவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தவறு செய்த பிறகு திடீரென்று ஒருநாள் சேர்த்து வைத்து மொத்தமாக லெக்சர் அடித்து அறுக்காமல் – தவறு செய்வதற்கு முன்பே தினமும் கொஞ்சம் கொஞ்சம் ஜாலியாகப் பேசும் போக்கிலேயே, எது சரி? எது சரிப்படாது? என்பதை டெய்லி டோஸாகச் சொல்லித் தாருங்கள். காமம் உள்பட பல தலைப்புகளை சங்கோஜமின்றிப் பேசி அவர்களைத் தயார்ப்படுத்துங்கள்.

3. குழந்தைகளைக் கண்காணிப்பின்றி தனியாக விடாதீர்கள். சுயக்கட்டுப்பாடு குறைவாக உள்ள வயது அவர்களுடையது என்பதால் பெரியவராக, பொறுப்பாக உடனிருங்கள்.

4. வயதுக்கு மீறிய சலுகைகைளைத் தந்து குழந்தையை நீங்களே கெடுத்து வைக்காதீர்கள். தனக்கென்று ஒரு தனி கம்ப்யூட்டர் ஓகே. ஆனால் அதற்கும் இன்டர்நெட் கனெக்ஷன் என்ற அளவுக்கு அதிகமான செல்லம் அவர்களைக் கண்டதையும் பார்க்கத் துாண்டத்தானே செய்யும்.

5. உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் யார் என்பதைக் கவனியுங்கள். கூடா நட்பென்று தெரிந்தால் நாசூக்காக நறுக்கித் தள்ளுங்கள்.

இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி குழந்தை எசகுபிசகாக எதையாவது பார்ப்பதை அல்லது படிப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உடனே அடி, உதை, திட்டு, தண்டனை என்று ஓவர் ரியாக்ட் பண்ணி தேவையில்லாத எதிர்ப்புவாதத்தைத் துாண்டி விடாமல் – அந்த ஊடகத்தை கைப்பற்றி, “இது நல்லதில்லை உன்னைப் பத்தி நான் எவ்வளவு உயர்வா நினைக்கிறேன். நீ இப்படி செய்யறதை என்னால ஏத்துக்க முடியாது – கஷ்டமாயிருக்கு!“ என்று மட்டும் சொல்லி, குழந்தையிடம் இரண்டு நாள் பாரா முகமாக இருந்து பாருங்கள். அமைதியான சிகிச்சை எப்போதும் வேலை செய்கிறது.

————————–

விரைவில் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. மாத விலக்கு முடிந்தவுடன் குறிப்பிட்ட சில நாட்களில் உறவு கொள்ளாமல் இருப்பதன் மூலம் கர்ப்பமாவதைத் தடுக்க முடிம் என்று கேள்விப்பட்டேன். இது தொடர்பாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களைக் கேட்க நேர்ந்தது. ஆணுறை, மாத்திரைகள் என கர்ப்பத்தைத் தடுக்க பல்வேறு வழிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தடுப்பு முறையையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

பெண்களுக்கு மாதம் ஒருமுறை கருமுட்டை ஒன்று உருவாகிக் கர்ப்பம் ஆகக் காத்திருக்கும். இந்த கருமுட்டை உருவாக்கத்தை ஓவலேஷன் என்கிறோம். இந்த ஓவலேஷன் மாதவிலக்கு ஆரம்பித்த நாளிலிருந்து 14 ஆம் நாள் நடைபெறும். கருமுட்டை உருவானால் அது 36-லிருந்து 48 மணி நேரம் உயிரோடு இருக்கும் – பிறகு தானாக மாண்டு போய்விடும்.

கருமுட்டையின் காலக்கெடு இது என்றால் ஆணின் உடல் தயாரிக்கின்ற விந்தணுவுக்கு குறைந்த ஆயுள் தான் – இரண்டு நாள்களுக்கு மேல் விந்தணுக்கள் உயிரோடு இருப்பதில்லை.

ஆக, பெண்ணுக்கு மாதவிலக்கு ஆரம்பித்து பதினோறாம் நாளில் ஆரம்பித்து பதினேழாம் நாள் வரை எப்போது அவள் புணர்ந்தாலும் அவள் கருவுறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த நாள்களை பெர்டிலை நாட்கள் என்போம்.

இந்த வளமான நாள்களைத் தவிர்த்து பிற நாள்களில் புணர்ந்தால் கருவுறுவாகாமல் இருக்கும் என்று நம்பி “இன்ன இன்ன நாள்களில் சேரலாம், இன்ன இன்ன நாள்களில் சேரக்கூடாது,“ என்கிற இந்த கருத்தடை முறையைக் காலங்காலமாக மனிதர்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த வகைக் கருத்தடையை ரிதம் முறை என்கிறோம்.

ஆனால் இந்த ரிதம் முறை அத்தனை நம்பகமானது கிடையாது. சரியாக இந்தத் தேதியில்தான் கருமுட்டை உருவாகும் என்பதை யாராலும் துல்லியமாக முன்அறிவிப்பு செய்ய முடியாது என்பதால் கருத்தடைக்கு இந்த முறை சரிப்படாது. ஆணுறையும் கருத்தடை மாத்திரைகளும்தான் பெட்டர்.

————————————-

பிரசவம் முடிந்த சில நாள்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா? நல்லதில்லை என்றால் எப்போது உறவை வைத்துக்கொள்ளலாம்?

ஆயுதம் போடவில்லை. பெரிய ஆபரேஷன் பண்ணவில்லை. சுகப்பிரசவம்தான் என்றால் எப்போது வேண்டுமானாலும் உடற்சேர்க்கை புரியலாம்.

ஆனால் சுகப்பிரசவத்துக்குப் பிறகு ஜனனக் குழாய், பிள்ளையைப் பெற்றெடுக்க பெரிதாய் விரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் சில மாதங்கள் ஜனனக் குழாய்க்கு விடுப்பு கொடுப்பது நல்லது.

.——————————————-
முப்பது வயது ஆண் நான். இன்னும் திருமணமாகவில்லை. சமீபத்தில்தான் டைப் 2 வகை டயாபடீஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. நான் திருமணம் செய்து கொள்ளலாமா? மற்றவர்களைப் போல என்னாலும் தாம்பத்திய வாழ்க்கையில் இயல்பாக ஈடுபடள முடியுமா?

நீரிழிவு நோய் என்பது அண்மைக் காலங்களில் மிகவும் பரவலாக மனிதர்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மரபணுக்கள் ஒரு காரணம் என்றாலும் அதிகமான மாவுச்சத்து உணவு உட்கொள்ளுதல், உடல் உழைப்பு குறைந்துபோவது, அதிக மன அழுத்தம் மாதிரியான வேறு பல முக்கியக் காரணங்களும் உள்ளன.

ஆனால் வெறுமனே மரபணுக்களைக் குறை கூறுவது சரியல்ல. உங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள், தேகப் பயிற்சி, மனநிலை மாதிரியான விஷயங்களை சீர்ப்படுத்துங்கள். சரியான நீரிழிவு நிவாரண சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அப்புறமென்ன- திருமணத்துக்கு நீங்கள் தயார்! நீரிழிவு கட்டுப்பாட்டில் இருந்தால் அது உங்கள் பாலியல் வாழ்வை எந்த விதத்திலும் பாதிக்காது.