Home பாலியல் ஆண்கள் ‘அந்த’ விஷயத்திற்கு சரிபட்டு வராமல் இருப்பதற்கான முதன்மையான 10 காரணங்கள்!!

ஆண்கள் ‘அந்த’ விஷயத்திற்கு சரிபட்டு வராமல் இருப்பதற்கான முதன்மையான 10 காரணங்கள்!!

22

உறவுகள் வாழ்க்கையை அழகாக்கும். உடலுறவு என்பது உறவுகளை இன்னமும் அழகாக்கும். செக்ஸ் மட்டுமே உறவுகளின் அழகை தீர்மானிப்பது கிடையாது என பலர் வாதத்தில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனால் செக்ஸின் தரத்தைப் பொறுத்து தான் சில நேரங்களில் உறவுகள் வளரவும் பிரியவும் செய்கிறது. படுக்கையில் ஒரு ஆணின் செயலாற்றல் அவரின் சுய மரியாதை அளவை தீர்மானிக்கும். உடலுறவு ரீதியான செயலாற்றல் ஆணின் ஈகோவுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளது.

அதனால் தான் என்னவோ படுக்கையில் சிறப்பாக செயலாற்றும் போது சக்தி வாய்ந்தவராக உணர்கிறார்கள் ஆண்கள். மாறாக திருப்திகரமாக செயலாற்றாமல் போனால் அந்த விஷயத்திற்கு சரிப்பட்டு வர மாட்டோம் என குற்ற உணர்வை பெறுவார்கள்.

சரி, எதை வைத்து படுக்கையில் ஆண்களின் செயலாற்றல் மதிப்பிடப்படுகிறது?

– பெண்ணை திருப்திப்படுத்த முடிதல்

– பெண்ணை கருவுறச் செய்தல்

– பெண்ணுக்கு புணர்ச்சிப் பரவசநிலையை ஏற்படுத்துதல்

– உச்ச நிலை வரை விறைப்பை தக்க வைத்தல்

படுக்கையில் ஏன் ஆண்களால் ஒழுங்காக செயலாற்ற முடிவதில்லை? ஆண்களின் மோசமான செயலாற்றலுக்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

செயலாற்ற வேண்டும் என்ற பதற்றம்

கலைஞர்களுக்கும், மேடை பேச்சாளர்களுக்கும் மேடை பயத்தால் அவதிப்படுவது வழக்கமே. அதே போல் தான், சில ஆண்களுக்கு ஒழுங்காக செயலாற்ற வேண்டும் என்ற பதற்றம் ஏற்படும். பொய்யான தரங்களை நிர்ணயிக்கும் முக்கிய காரணத்தினாலேயே இந்த பதற்றம் ஏற்படுகிறது.

உடலுறவை ஒரு கலை போல் செய்ய வேண்டும் என்றும் செயலாற்றலைப் பொறுத்து தான் ஆணின் சக்தி மதிப்பிடப்படும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணம் உணர்ச்சிகளை இறுக்கிவிடும். அதனால் தோற்று விடுவோம் என்ற பயம் தொற்றிக் கொள்ளும். இந்த மன விளையாட்டை விட்டு முதலில் வெளியே வாருங்கள். உடலுறவு என்பது சந்தோஷத்திற்காக தானே தவிர சரிபார்த்தலுக்கு இல்லை என்பதை முதலில் உணருங்கள்.

புகைப்பிடித்தல்
புகைப்பிடிக்கும் போது தங்களின் ஆண்மை மேலோங்கி நிற்கிறது என ஆண்கள் கருதுகின்றனர். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் தங்கள் ஆண்மையை ஒரு 3 இன்ச் புகையிலை குச்சியிடம் இழக்கின்றனர் என்பதே உண்மை. ஆம், புகைப்பிடிப்பது உங்களை கொல்லும்! அது உங்களை கொல்வதற்கு முன்பு, உங்களுக்குள் இருக்கும் ஆண்மையை முதலில் கொன்றுவிடும்.

அதனால் அதனை உடனே நிறுத்துங்கள். புகைப்பிடிப்பதால் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் விறைப்பின் தரம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது.

மதுபானம்
அளவுக்கு அதிகமாக மதுபானத்தைப் பருகும் போது, உங்களுக்குள் காம போதையும் உச்சத்தில் ஏறும். ஆனால் உங்கள் துணையின் பரவசத்தை நீங்கள் விரைவிலேயே தடுத்து நிறுத்தி விடுவீர்கள். குடித்த பின் படுக்கையில் ஆணின் செயலாற்றல் வெகுவாக பாதிக்கப்படும்.

விந்து விரைவில் வெளியேறுதல்
விந்துதள்ளலை நீண்ட நேரம் நீட்டிக்கும் திறன் இல்லையென்றால் உங்கள் படுக்கையறை அனுபவம் மிக மோசமாக தான் இருக்கும். உடலுறவை நீண்ட நேரத்திற்கு நீட்டிக்க வைக்க சில வழிமுறைகள் உள்ளது. உடலுறவின் தரத்தை மேம்படுத்துவதற்கு அவ்வகையான வழிமுறைகளை முயற்சி செய்வது நல்லது.

02-1417488892-5-premature-ejaculationஅனுபவமின்மை அல்லது இறுக்கமான நுனித்தோல்
இந்த காம விளையாட்டிற்கு நீங்கள் புதிதாக நுழையும் ஆணா? அப்படியானால் அனுபவமின்மையால் படுக்கையறை அனுபவம் மோசமாகும். படுக்கையில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என அவர்கள் வியப்பதுண்டு.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளையாட்டில் உள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொண்டு, விளையாட்டை சிறப்பாக விளையாடலாம். சில ஆண்களுக்கு நுனித்தோல் இறுக்கமாக இருப்பதாலும் கூட அவர்களால் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடிவதில்லை. அவர்கள் மருத்துவ ரீதியான உதவியை நாடலாம்.

டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் குறைபாடு -(testosterone)
30 வயதுக்கு பிறகு, ஆண்களின் உடலில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோனின் அளவுகள் குறையத் தொடங்கும். ஆண்களுக்கு ஆண்மையை அளிக்கும் இந்த ஹார்மோன் தான் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற உதவிடும். காலப்போக்கில் அது குறையத் தொடங்கும் போது உந்து, தாங்கும் உறுதி மற்றும் திறன் குறையத் தொடங்கும்.

மன அழுத்தம் நிறைந்துள்ள வாழ்க்கை
முறை மன அழுத்தமும், கவனச் சிதறல்களும் கொடுமையான விஷமாகும். அது உங்கள் செயலாற்றுகையை வெகுவாக பாதிக்கும். படுக்கையில் சிறந்து செயலாற்ற வேண்டுமானால் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

விறைப்பு செயல் பிறழ்ச்சி
ஒரு ஆணின் ஆணுறுப்பு அவரின் கட்டளைக்கு இணங்கி நடக்க வேண்டும். உங்களுடையது உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால், அந்த நிலையே விறைப்பு செயல் பிறழ்ச்சியாகும். உடலுறவின் போது உங்கள் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது ஆணுக்கு மிகப்பெரிய அவமரியாதை தானே. இந்த நிலைக்கு காரணமாக மருத்துவ பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் உதவியை நாடிடுங்கள். ஆனால் இது வெறுமனே உளவியல் ரீதியான பிரச்சனையாக இருந்தால், உங்களின் சுய உதவியே உங்களுக்கு உதவும். ஆண்கள் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றால், முதலில் அவர்களது மனம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மருந்துகள்
சில வகையான மருந்துகள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது. கடுமையான உடல்நல குறைவுகளுக்கு சிகிச்சை எடுத்து வரும் ஆண்கள் குணமடையும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் அவர்களை படுக்கையில் சிறப்பாக செயலாற்ற விடுவதில்லை.

மருத்துவ ரீதியான நிலைகள்
ஆண்கள் படுக்கையில் மோசமாக செயலாற்றுவதற்கு சர்க்கரை நோய் போன்ற சில பிரச்சனைகளும் கூட முக்கிய காரணமாக இருக்கும். அதேப்போல் சில நரம்பியல் பிரச்சனைகளாலும் கூட உங்கள் படுக்கையறை வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும்.

அவ்வகையானவர்கள் மருத்துவரின் உதவியை நாடிட வேண்டும். படுக்கையறையில் கலவியை எப்படி நீண்ட நேரம் நீடிக்க வைப்பது? முதலில் விந்து விரைவில் வெளியேறுதல் நடப்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இயற்கை சிகிச்சைகளை நாட விரும்புபவர்கள் வயாகரா போல் செயல்படும் உணவுகளை உட்கொள்ளுங்கள். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Previous articleதப்பான பண்ணீட்டாமே என்று யோசிக்கிறீங்களா??
Next articleஉடலுறவு செய்ய தேவையான தகுதி – ஒரு பார்வை..!