Home ஆண்கள் ஆண்களே அதில் பிரச்சினையா..?

ஆண்களே அதில் பிரச்சினையா..?

38

குழந்தைப்பேறுஎன்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும்எளிதாககிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இதுமிகவும்சிக்கலான ஒன்று.

சமீபத்தியஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமேபிரச்சனை உள்ளதாக கூறுகின்றன.ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையானஅறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை.

உண்மையான பிரச்சனையை தெரிந்து கொண்டுவிட்டால் ஆண் மலட்டுத்தன்மைக்கானசிகிச்சை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பரிசோதனைகள் மூலம்இந்தபிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். ஆணின் பிறப்புறுப்புகள், ஹைபோதலாமஸ்மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் ஆணின் ஆண்மைத்தன்மையை உறுதிசெய்கின்றன.இவை ஆணின் விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு முக்கியகாரணமாகஇருக்கின்றன.

ஆண்மலட்டுத்தன்மைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. விந்தணுஉற்பத்திக்குறைபாடு, விந்தணு பாதையில் அடைப்பு, விந்தணு நோய் தொற்று, பாலினமற்றும்ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய காரணங்களால் ஆண்களுக்குமலட்டுத்தன்மைஏற்படுகிறது.ஆண் மலட்டுத்தன்மைக்கு அவற்றை கண்டறியும் முறைகள்மற்றும் காரணங்களைப்பொறுத்து சிகிச்சை முறைகள் உண்டு.

சில சமயம் இந்த சிக்கிச்சைகள் பலமாதங்களுக்கு வழங்கப்பட வேண்டியிருக்கும். இதற்கான பல்வேறு சிகிச்சைமுறைகள் இதோ…

இனப்பெருக்க பாதை அடைப்பு
சிலஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாகும் இடங்களிலும், பாதைகளிலும்அடைப்பிருக்கும். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.இதைச் செய்யஇயலாத நிலையில், புதிய தொழில் நுட்ப முறையான விந்தணுவைநேரடியாகவிதைப்பைகளிலிருந்து பெறும்படியான முறையை முயற்சி செய்யலாம்.வாசக்டமிஎனப்படும் ஆண் கருத்தடை முறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டஒன்று.மேலும் இந்த முறை பெரும்பாலும் பழைய நிலைக்கு மாற்றத் தகுந்த ஒன்று.

பிட்யூட்டரி குறைபாடு
ஆண்களின்பிறப்புறுப்பு மண்டலங்களில் ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரிசுரப்பிகள்முக்கிய பங்காற்றுகின்றன. ஹார்மோன்களை சுரக்கக் காரணமானபிட்யூட்டரி சுரப்பிமூளையின் செயல்களை ஊக்குவிக்க உதவுகிறது. இதில்குறைபாடு இருந்தால்ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம். கோனாடோட்ரோபின்எனப்படும் சிகிச்சைமூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பிக் குறைபாடுகளைநீக்கலாம்.

வெரிகோசல்
விரைப்பையில்உள்ள நரம்புகளின் வீக்கம் வெரிகோசல்லை குறிக்கும். இந்தக்குறைபாடுள்ளஆண்களில் குறைந்த விந்தணு எண்ணிக்கையையும், அசாதாரணதோற்றத்தினை கொண்டவிந்தணுக்களும் காணப்படும். விரைப்பைகளில் காணப்படும்வெப்பம், குறைந்த அளவுஆக்சிஜன் மற்றும் குறைந்த இரத்த ஓட்டம் ஆகியவைஇதற்குக் காரணமாகஇருக்கலாம். ஆண் மலட்டுத்தன்மையில் காணப்படும் இந்தகுறைபாட்டினை சரி செய்யசிறந்த வழி அறுவை சிகிச்சையாகும். குறிப்பிட்ட சிலசமயங்களில் அதுவும்பயனளிக்காமல் போகலாம்.

அஜூஸ்பெர்மியா
இந்தக்குறைபாடுள்ளவர்களுக்கு விந்தணு மிகவும் குறைவாக இருக்கலாம். மலட்டுததன்மைகொண்ட ஆண்களில் இது பொதுவாகக் காணப்படும். இதை கண்டறிய விரைப்பைபயாப்சிசோதனையை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் பிரச்சனையைதுல்லியமாகக்கண்டறிய முடியும். விந்தணு உற்பத்திக் குறைபாடுகள் அல்லதுஉற்பத்திப்பாதையில் அடைப்பு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

விந்தணு மேப்பிங்
இந்தமுறை மூலம் விதைப்பையில் விந்தணுக்களின் இருப்பிடம் அறியப்படும்.மலட்டுத்தன்மை அதிகமாகக் கொண்ட ஆண்களில் சிகிச்சைக்கு இந்த முறை மிகவும்முக்கியமானஒன்று. இது சற்று எளிதான அறுவை சிகிச்சை தேவைப்படாத, மருத்துவக்கருவிகள்அதிகம் இல்லாத இடத்திலேயே செய்யக்கூடிய ஒன்று. இதன்மூலம் அறுவை சிகிச்சைஉள்ளிட்ட இன்ன பிற சிகிச்சைகளின் மூலம் ஏற்படும்பாதிப்புகளிலிருந்துவிரைப்பைகளைப் பாதுகாக்கலாம்.

Previous articleஆண்களின் செக்ஸ் உணர்வைத்தூண்டுவது எப்படி?
Next articleபெட்ரூமில் ஸ்மார்ட்போனால் வரும் பிரச்சனைகள்