Home சூடான செய்திகள் ஆண்களிடம் பழகும் பெண்கள் கவணிக்கவேண்டியவை!

ஆண்களிடம் பழகும் பெண்கள் கவணிக்கவேண்டியவை!

8

ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

* உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்திற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள். அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். இதை பயன்படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.

Previous articleஆரோக்கியமான தலைமுடியை பெற விரும்புபவரா நீங்க..?
Next articleபெண்களே! தப்பித்தவறி கூட இந்த மாதிரியான ஆண்களிடம் காதலில் விழுந்துடாதீங்க…