Home சூடான செய்திகள் ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள்

ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள்

31

தனது செக்ஸ் தேவைகள், ஆசைகள் பற்றி கணவனிடம் வெளிப்படையாகப் பேசும் பெண் நடத்தை கெட்டவள் என்ற கருத்தை நினைத்துக் கொண்டு பீதியடையத் தேவையில்லை.
செக்ஸைப் பொறுத்தவரை செயல்படுபவன் ஆண் அவனுடைய செயல்பாட்டிற்கு உடன்பட்டு, அவன் விருப்பப்படி அவன் ஆசையைப் பூர்த்தி செய்வதுதான் மனைவியின் கடமை என்ற கண்ணோட்டம் முற்றிலும் தவறு. கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து ஆக்டிவாக உடலுறவில் ஈடுபட்டால்தான் உச்ச கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.
செக்ஸ் தொடர்பான மாயைகள் தகர்ந்து வருவதின் ஆரம்ப அறிகுறிகள் இவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தத்தம் செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும்.
கணவனும், மனைவியும் தங்களுடைய செக்ஸ் விருப்பங்கள் பற்றி மனம் திறந்து பேச வேண்டும். உடலுறவை ஆரம்பிப்பதிலும், அதற்கான தூண்டுதலிலும் இருவருக்குமே பங்குள்ளது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு.
செக்ஸ் சுகத்தை அனுபவிப்பதில் பெண் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தாவிட்டால் ஆணுக்கு தனது செயல் திறன் பற்றி சந்தேகம் வந்து விடுகிறது. இந்த சந்தேகம் வலுப்பட்டு ஒரு வித குற்ற உணர்வின் தவிப்போடு மனைவியை நெருங்கும்போது, முன்பு இருந்ததை விட செயல் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் ஆண்மையை பறி கொடுக்கவும் நேரிடுகிறது.
கணவனும், மனைவியும் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசும் பழக்கத்தைப் பின்பற்றினால் இப்படிப்பட்ட ஆபத்தைத் தடுக்க முடியும். பெண்களைப் பற்றிய ஆண் கண்ணோட்டமும் இன்று மாறி வருகிறது. பெண் ஆணுக்குச் சமமானவள் அல்ல குறைபாடுள்ள ஆண்தான் பெண் என்று சொன்ன சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள ஆண்களே இன்று தயாராக இல்லை.
ஆரோக்கியமான மாற்றம் ஆரம்பமாகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக பெற்றோர்களும் செக்ஸ் பற்றி தவறான கண்ணோட்டங்களை கை கழுவி விட்டு செக்ஸ் அறிவை முறையாக, முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்

Previous articleகாமம் என்பது என்ன?
Next articleசுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது