Home இரகசியகேள்வி-பதில் அந்தரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது

அந்தரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது

27

என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது.இந்நிலையில் நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டா? – விஜி, சென்னை.

மாதவிலக்கு என்பதுஇப்படி பத்து, பனிரெண்டு நாட்களுக் கெல்லாம் வரக் கூடாது. அது இரத்தசோகையில் கொண்டு விடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப்போக்கு தொடர்கிறது என இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்குமாதந்தோறும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் போஷாக்கான ஆகாரம்உட்கொள்ள வேண்டும். தினம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைஎன ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் சாப்பிடலாம்.இரண்டு வகை காய், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை மற்றும் முட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவைமாத விலக்கின் போது உதிரப் போக்கில் உடல் இழக்கும் இரும்புச் சத்தை ஈடுகட்டி, எதிர்ப்புசக்தியைத் தரும். முதல் வேலையாக மருத்துவரை சந்தித்து இத்தனைநாட்கள் உதிரப் போக்கு வராமலிருக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். கவனிக்காமல்விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகி விடுவீர்கள். இப்பிரச்சினையைசரி செய்த பிறகு குழந்தைப் பேற்றைப் பற்றி யோசிக்கலாம். பொதுவாகஉதிரப் போக்கு இருக்கிற நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பதுஅசவுகரியமாக இருக்கலாம். தொற்றுக் கிருமிகள் பரவவும் அது காரணமாக அமையும்.தாமதிக்காமல் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

எனக்கு சமீபத்தில் தான் திருமணமானது. என் வயது 21. எடை 61 கிலோ. எனக்கு மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகின்றன.அவற்றைப் பார்த்து என் கணவர் என் நடத்தையில் சந்தேகப்படுகிறார். நான்திருமணத்துக்கு முன்பு எந்தத் தவறும் செய்ததில்லை. இருந்தும் எனக்கு ஏன் இப்படிஇருக்கிறது? எப்படி சரி செய்யலாம்? – பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

21 வயதில் 61 கிலோஎடை என்பது கொஞ்சம் அதிகம்தான். அளவுக்கதிக எடையின்காரணமாகவே உங்களுக்கு மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள்விழுந்திருக்கின்றன. உடலின் எடை முழுவதையும்உங்கள் குதிகால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள். வாழைத்தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து அடிக்கடி குடிக்கவும்.வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம்பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில்கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகுஅதிகம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒருகப், காய்கறிகளும், கீரையும்இரண்டு கப் என சாப்பிடவும். தினம் மூன்று முதல்ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்கவும். இதையெல்லாம் செய்து வந்தாலே உங்கள்உடலின் ஊளைச் சதைகள் குறைந்து, வரிகளும் காணாமல் போகும். கணவரிடம் இதைவிளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எடையைக் குறைத்து, அதை நிரூபிப்பதுஇன்னும் சிறந்தது.

என் வயது 24. திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. திருமணமான ஆறேமாதங்களில் கருத்தரித்தேன். அப்போது குழந்தை வேண்டாமென அதை அபார்ஷன்செய்துவிட்டேன். அதன் பிறகு எனக்குக் கர்ப்பம் தங்கவே இல்லை. மருத்துவர்ஒருவரின் ஆலோசனையின் பேரில் இப்போது ஹார் மோன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன்.இதனால் கருத்தரிக்குமா? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

முதல் கர்ப்பத்தைக் கலைப்பது மிகப்பெரிய தவறு. குழந்தை வேண்டாம் என நினைத்த நீங்கள் அதற்கேற்ப இல்லற வாழ்வில்ஈடுபடுகிற போது பாதுகாப்பாக இருந்திருக்கலாம். அதைத் தவிர்த்து ஆறேமாதங்களில் உண்டான கர்ப்பத்தைக் கலைத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சினைப்பைகளில்தொற்றோ, கருக்குழாய்அடைப்போ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.முதல் வேலையாக நீங்கள் ழளுழு எக்ஸ் ரேவும், பெல்விக்ஸ்கேனும் செய்ய வேண்டும். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதைஉடனடியாக நிறுத்துங்கள். அவற்றால் உண்டாகிற பக்க விளைவுகள் பயங்கரமானதாகஇருக்கும். தவிர, உங்கள் கணவருக்கும்விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்து தான் உங்களுக்கானசிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

என் வயது 19. எனக்கொரு விசித்திரமான பிரச்சினை. அந்த ரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது. தர்மசங்கடமான இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்கள். -எம்.கே., நெல்லை.

மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட்என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில்கலந்து, பிறப்புறுப்பைதினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட்மற்றும் அங்கே வைத்திருக்கிற பக்கெட், மக்போன்ற எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக இல்லாமல் பாசிப்பிடித்து இருந்தால் கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம்மாதிரி பிரச்சினைகள் வரலாம். வெள்ளைப்படுதல் இருந்தால் வைட்டமின் சி மாத்திரை உட்கொள்ளவும். உணவில் பொன்னாங்கண்ணிக்கீரை, பெரியநெல்லிக்காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடிசெய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டைஇந்த மூன்றும் தினசரி சாப்பிட வேண்டியவை. போஷாக்கான ஆகாரம்தான்இப்பிரச்சினைக்கான முதல் தீர்வு. உபயோகிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாகஇருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வேளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்களில்அதிகப் படியான சுத்தத்தைக் கடைப் பிடிக்கவும். குறிப்பிட்டநேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றவும்.இவற்றையெல்லாம் செய்தாலே உங்கள் பிரச்சினைகள் சரியாகும்.

Previous article“இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்”
Next articleஆண்குறி, விதைப்பை