ஒருசிலருக்கு புருவம் மிகவும் மெல்லியதாகவும், சிலருக்கு பெரிய புருவமும் இருக்கும். இதனால் மெல்லிய புருவம் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஒருசில இயற்கை பொருட்களான பொருட்களை பயன்படுத்தி வந்தால் அனைவரையும் போல பெரிய புருவத்தை பெற்று அழகை அதிகரித்து கொள்ளலாம். கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி வந்தால் உங்கள் புருவமும், முகமும் ஜொலிக்கும் என்பது நிச்சயம்
* ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலக்கி இரண்டு புருவங்களிலும் தடவி அதன் பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதேபோல் வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். கவர்ச்சியான புருவங்களை பெறலாம்
* தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து வருபவர்களுக்கு முடி கொட்டுதல் என்ற பிரச்சனையே வராது. அதேபோல் தான் புருவ முடியும். இரண்டு புருவங்களிலும் தேங்காய் எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்வது போல் செய்ய வேண்டும். அதன் பின்னர் இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு காலை எழுந்தவுடன் குளித்தால் போதும், புருவத்தின் முடி அடர்த்தி ஆகிவிடும்
* வெங்காய சாற்றில் சல்பர் நிரம்பி உள்ளதால், இந்த சல்பர் முடி வளர்வதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். வெங்காயத்தை கட் செய்து அதனை புருவத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். வெங்காய சாறு புருவத்தில் நன்றாக படும்படியாக ஒரு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்துவிட்டு பின்னர் மெல்லியதான கிளீசரின் கொண்டு முகத்தை கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அழகிய புருவங்களை பெறலாம்
* ஆமணக்கு எண்ணெயை ஒரு பஞ்சில் கொஞ்சம் ஊற்றி அதை கண்புருவத்தில் பூசி சிறிய அளவில் மசாஜ் செய்ய வேண்டும். ஆமணக்கு எண்ணெயில் உள்ள நன்மை செய்யும் அமிலங்கள் கண் புருவத்தின் வளர்ச்சிக்கு நன்மருந்தாகும்