Home உறவு-காதல் காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்

காதலன் (கணவன்) – காதலி (மனைவி) – சின்னச்சின்ன சண்டைகள்

42

“என்னதான் இருந்தாலும் நீங்க அவ பக்கத்தில உட்கா ர்ந்து வந்தது தப்புதான்… அவ யாரு உங்கமேல அவ்வளவு அக்கறை காட்டிறதுக்கு… என்னைவிட அவ முக்கியமா னவளா போயிட்டாளா..?’
“உனக்காக நான் எவ்வளவு நேரம் பார்த்திருந்தன் தெரியு மா… ஒரு எஸ்.எம்.எஸ். ஆச்சும் பண்ணினியா? இல்லாட்டி ஒரு கோ லாச்சும் பண்ணியிருக்கலாம் தானேடா… என்மேல பாசமிருந்தா இப்படியெ ல்லாம் செஞ்சிருப்பியா…? என்மேல உனக்கு கொஞ்சங் கூட அக்க றையில்லை… என்னை காக்க வைக்கிறதில உனக்கு அவ் ளோ ஆனந்தமா…?’
இப்படியான சின்னச்சின்ன சண்டைகள் அடிக்கடி காதலன்+ காதலி, கணவன் + மனைவி ஆகி யோரிடையே இடம்பெறுவது சகஜமே. காதலன், காதலிக் கிடையில் ஏற்படும் இப்படி யான சண்டைகளால் பலரது காதல் வாழ்வு இடையிடை யே முறிவடைவதும் உண்டு. அதே போல் கணவன், மனை விக்கிடையில் ஏற்படுகின்ற சண்டைகள் விவாகரத்து வரை சென்றுவிடுவதும் உண்டு.
உண்மையிலேயே இப்படியான சண்டைகள் எதனால் ஏற்படுகின்ற ன என நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா? அநேகமாக எல்லோரு ம் சொல்வது “புரிந்துணர்வின்மை’ என்ப தேயாகும். ஆனால், புரிந்துணர்வு என்ப தற்கு அப்பால் “அன்பு’ என்ற ஆதிக்கம் இருப்பதே மூல காரணமாகும். உண்மை அதுதான், சிந்தித்துப் பாருங்கள். நெருங் கிப் பழகியவர்கள் சண்டைபிடிப்பதுதான் சகஜமான விடயம்.