Home ஆண்கள் விந்தணுக்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

விந்தணுக்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

9

விந்தணு (கிரேக்கம்: ஸ்பெர்மா – விதை) என்பது ஆண் இனப்பெருக்க செல் ஆகும். ஒரு விந்தணு ஒரு முட்டையுடன் இணைந்து இரு பாலணு இணைவுப்பொருளை உருவாக்கும் என்றும் இந்த இணைவுப்பொருள் பின்னர் கருவாக மாறும், அந்த கரு சினைக்கருவாக வளரும் என்று உயிரியல் வகுப்பகளில் படித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். விந்தணுக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விந்தணுவின் பாகங்கள் (Parts of a sperm)
விந்து செல்லில் மூன்று பாகங்கள் உள்ளன: தலைப்பகுதி, நடுப்பகுதி மற்றும் வால்பகுதி. குறைபாடுள்ள விந்தணுக்களில் இரண்டு தலைகள், சிறிய தலை, பெரியளவு தலை, வளைந்த கழுத்து, மெல்லிய நடுப்பகுதி, வளைந்த, உடைந்த, சுருளான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வால்கள் காணப்படும்.
ஒரு விந்தணுவின் அளவு (Size of a sperm)
ஒரு மனித விந்து செல்லின் அளவானது தலையிலிருந்து வால் வரை சுமார் 50 மைக்ரோமீட்டர் வரை இருக்கும் (0. 05 மில்லிமீட்டர், அல்லது தோராயமாக 0. 002 அங்குலம்).
விந்து உற்பத்தி (Sperm production)
விந்தணுக்கள் விந்தகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. விந்தணுக்களின் ஆயுட்காலம் குறைவு. ஆகவே உடலில் அவ்வப்போது புதிய விந்தணுக்கள் உருவாக வேண்டியது அவசியமாகும். விநாடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன.
விந்தணு முதிர்வு (Sperm maturation)
விந்தகத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துக்கள் முதிர்ச்சியடைய 2 ½ முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம். விந்தணுவானது நீண்ட சுருளான விந்தகத்தின் மேல்பக்கத்தில் இருக்கும் விந்தணு முதிர்ச்சிப் பையில் சேமிக்கப்படும்போது ஆரம்ப முதிர்வு நடக்கும்.

விந்தணுக்கள் திறமையான நீந்தும் தன்மையுடையவை (Sperms are efficient swimmers)
விந்தணுவானது முட்டையுடன் இணைய, கருப்பை வாயிலிருந்து கருப்பை வழியாக கருப்பை குழாய்க்குச் செல்வதற்கு ஆறு முதல் எட்டு அங்குல தூரம் வரை பயணம் செய்யவேண்டும். வேகமான விந்தணுக்கள் நிமிடத்திற்கு 4-5 மிமீ வேகத்தில் பயணம் செய்யும். அந்த வேகத்தில் பயணம் செய்தால் கருப்பை குழாய்க்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும். இதுவே மெதுவான விந்தணுக்கள் குழாய்க்குச் செல்ல 12 மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும்.
விந்தணுக்களால் நீண்ட நாட்கள் வாழ முடியும் (Sperms can survive long)
விந்தணுக்கள் பெண்ணின் உடலிற்குள் சென்றுவிட்டால், மூன்று நாட்கள் வரை அவற்றால் உயிர் வாழ முடியும். சாதகமான சூழ்நிலைகளில் அதிகபட்சம் 5 நாட்கள் வரை உயிர் வாழ முடியும். விந்தணுக்கள் கருப்பைக் குழாயை அடைந்தப் பிறகு முட்டையை அவற்றால் கண்டுபிடிக்க முடிக்கவில்லையெனில், முட்டைக்காக அதிகபட்சம் 5 நாட்கள் வரை அவை காத்திருக்கும்.
ஆண் பெண் இரு விந்தணுக்களுக்கும் சமவாய்ப்பு உள்ளது (Male and Female Sperms have equal chances)
விந்தணு X அல்லது Y குரோமோசோமைக் கொண்டிருக்கும். பெண்ணின் கரு முட்டையுடன் விந்தணுவில் உள்ள X குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தையும், Y குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையும் உண்டாகும். X குரோமோசோம் உள்ள விந்தணு மற்றும் Y குரோமோசோம் உள்ள விந்தணு இரண்டுமே முட்டையை அடைவதற்கான வாய்ப்பு சமமாகவே இருக்கும்.

விந்தணு வழிகாட்டல் (Sperm guidance)
விந்தணுக்கள் பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்டவுடன், அவை முட்டையை நோக்கி நீந்த வேண்டும். நீந்தி கருப்பையை அடைந்தவுடன் அவை செல்லும் பாதை இரண்டாகப் பிரியும். கருப்பைக் குழாயின் இடது அல்லது வலது பக்கத்தில் உள்ள இரு குழாயில் ஏதேனும் ஒரு குழாயினுள் விந்தணு நுழைய வேண்டும். இரு குழாயில் ஒன்றில் மட்டுமே முட்டை இருக்கும்.
விந்தணுக்கள் சீரற்ற திசைகளில் நீந்தும், திசைகள் பற்றிய உணர்வு அதற்கு இல்லை. இருப்பினும், கருப்பையில் உள்ள வழிகாட்டல் நுட்பங்கள் கருப்பையில் உள்ள விந்தணுக்களின் இயக்கங்களுக்கு வழிகாட்டுகிறது. இந்த வழிகாட்டல் நுட்பங்களில் தெர்மோடாக்சிஸ் (வெப்பநிலை சரிவால் நீந்துதல்), ரியோடாக்சிஸ் (நீர் ஓட்டத்திற்கு எதிர்திசையில் நீந்துதல்) மற்றும் கீமோடாக்சிஸ் (முட்டை வெளியிடும் இரசாயனப் பொருளை நோக்கி நீந்துதல்) ஆகியவையும் உள்ளடங்கும்.
முட்டைக்கான போட்டி (Competition for the egg)
விந்தணு முட்டையை அடைந்தவுடன், முட்டையைச் சுற்றிக்கொண்டு அதனுள் ஊடுருவதற்காக மற்ற விந்தணுக்களுடன் போட்டியிடும். ஒரு விந்தணு முட்டையில் நுழைந்து கருவுறச்செய்யும்போது மற்ற விந்தணுக்கள் முட்டைக்குள் நுழைவதைத் தடுக்க, அது எதிர்வினைகளை செய்கிறது.
விந்து வெளிவருவதற்கு முன்பு ஆண்குறியில் இருந்து வரும் திரவங்களிலும் விந்தணுக்கள் இருக்கலாம் (Pre-cum may also contain sperms)
விந்து வெளிவருவதற்கு முன்பு பாலியல் தூண்டுதல் காரணமாக ஆண்குறியில் இருந்து வரும் திரவமே ப்ரீ-கம் ஆகும். இந்த சுரப்பு நீர்கள், சிறுநீர்ப்பைக் குழாயின் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்ற கௌப்பர் சுரப்பிகள் மற்றும் லிட்ரே சுரப்பிகளிலிருந்து வருவதாக கருதப்படுகின்றன. இவை எண்ணற்ற என்சைம்கள் மற்றும் கோளைகளைக் கொண்டுள்ள ஆல்கலின் திரவத்தால் ஆனவை. ஆயினும், இந்த சுரப்பு நீரில் விந்தணுக்கள் இருக்காது. ஆனால் விந்து வெளிவருவதற்கு முன்பு ஆண்குறியில் இருந்து வெளிவரும் திரவத்தில் விந்தணு இருப்பதாகவும் அது கர்ப்பத்தை உண்டாக்கலாம் என்றும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பநிலையால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் (Temperature can decrease sperm count)
விந்தணுக்களின் எண்ணிக்கை கோடை காலத்தில் குறைவாகவும், குளிர் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதிகமான வெப்பம் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். சூடான நீரில் குளித்தல் அல்லது மடிக்கணினியை உங்கள் மடியில் வைத்தல் போன்றவற்றால் கூட இருக்கலாம்.